செயந்திரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயந்திரபா
Jayendrabha
ជយេន្ទ្រភា
ஈசானபுர மகாராணியார்
முன்னையவர்இராணி நிருபத்தேந்திரதேவி
பின்னையவர்இராணி செயசுதர்யா
பிறப்புஈசானபுரம்
இறப்புகி.பி. 803
ஈசானபுரம்
மரபுஈசானபுரம்
கவுந்தினியம்
சென்லா
அரசமரபுசம்புபுரம்
Som Vong
மதம்இந்து சமயம்

செயந்திரபா எனும் சம்புபுரா செயந்திரபா (ஆங்கிலம்: Jayendrabha அல்லது Jayendrabha of Shambhupura; கெமர்: ជយេន្ទ្រភា; IAST: Jayendrabhā) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) ஒரு பகுதியான ஈசானபுரத்தின் மகாராணி ஆவார்.[1]

இந்த ராணி கம்போடியாவில் கிடைத்த K. 124 கல்வெட்டு (Inscription K. 124, 803/04) எனும் கல்வெட்டின் மூலம் அறியப் படுகிறார். இவரின் ஆட்சிக்காலம் 8-ஆம் - 9ஆம் நூற்றாண்டு. ஆண்டுகள் உறுதியாகத் தெரியவில்லை.

வரலாறு[தொகு]

செயந்திரபா; சம்புபுர (Sambhupura) இராச்சியத்தின் ராணியார் இராணி நிருபத்தேந்திரதேவியின் (Nrpendradevi of Sambhupura) மகள் ஆவார். செயந்திரபாவின் தந்தையார் பெயர் முதலாம் இராஜேந்திர வர்மன் (King Rajendravarman I).

செயந்திரபா தன் தாயாரிடம் இருந்து சிம்மாசனத்தைப் பெற்றார். இவர் மன்னர் இரண்டாம் ஜெயவர்மனை (King Jayavarman II) (r. 780-824) மணந்தார். இவரின் மகள் இராணி செயசுதர்யா (Jyestharya) 803-ஆம் ஆண்டில் அரியணையில் அமர்ந்தார்.

கல்வெட்டுகள்[தொகு]

ஜெயவர்மன் எனும் பெயரில் ஓர் அரசன் இருந்ததை இரண்டு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. முதல் கல்வெட்டு K. 103 (Inscription K. 103). கம்போடியா கம்போங் சாம் நினைவுச் சின்னங்களில் (Kampong Cham Relics) இருந்து எடுக்கப்பட்டது. ஏப்ரல் 20, 770 என தேதி பொறிக்கப்பட்டு உள்ளது.

இரண்டாவது கல்வெட்டு K. 134 (Inscription K. 134).. கம்போடியா ஈசானபுரத்தில் (Sambhupur) இருந்து எடுக்கப்பட்டது. 781 என தேதி பொறிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கல்வெட்டுகள் இரண்டாம் ஜெயவர்மனை (Jayavarman II) குறிக்கின்றன.

சான்றுகள்[தொகு]

  1. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008

மேலும் படிக்க[தொகு]

  • Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
  • Higham, Charles. The Civilization of Angkor (англ.). — University of California Press, 2004. — P. 192.
  • Jacobsen, Trudy. Lost Goddesses: The Denial of Female Power in Cambodian History (англ.). — NIAS Press, 2008. — P. 358. — (Gendering Asia). — ISBN 978-87-7694-001-0.

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
இராணி நிருபத்தேந்திரதேவி
ஈசானபுரம் மகாராணியார் பின்னர்
இராணி செயசுதர்யா
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயந்திரபா&oldid=3691405" இருந்து மீள்விக்கப்பட்டது