கம்போடிய இராசலட்சுமி
கம்போடிய இராசலட்சுமி Kambuja Raja Lakshmi កំបុជរាចាឡាកស្មី | |
---|---|
Queen Kambuja Raja Lakshmi | |
கம்போடியாவின் முடியாட்சி பூனான் மகாராணியார் | |
ஆட்சிக்காலம் | கி.பி. 575 – 580 |
முன்னையவர் | வீர வர்மன் (Vira Varman) |
பின்னையவர் | முதலாம் பவவர்மன் (Bhavavarman I) |
பிறப்பு | சிரேத்தபுரம் (Shreshthapura) |
துணைவர் | முதலாம் பவவர்மன் (Bhavavarman I) |
குழந்தைகளின் பெயர்கள் | இரண்டாம் பவவர்மன் (Bhavavarman II) |
மரபு | கம்புஜம் (House of Kambuj) |
அரசமரபு | கெமர் பேரரசின் வர்மன் வம்சாவளி சென்லா சோழர் |
தந்தை | சிரேத்தவர்மன் (Shreshthavarman) |
மதம் | இந்து சமயம் |
கம்போடிய இராசலட்சுமி அல்லது கம்போஜ இராஜலட்சுமி எனும் மகாராணி இராசலட்சுமி (ஆங்கிலம்: Kambuja Raja Lakshmi அல்லது Queen Kambuja Raja Lakshmi; கெமர்: កំបុជរាចាឡាកស្មី; தாய் மொழி: กัมพุชราชลักษมี) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) சிரேத்தபுரம் (Shreshthapura) எனும் நிலப்பகுதியை ஆட்சி செய்த ஒரு புகழ்பெற்ற இராணி ஆவார்.[1]
மகாராணி கம்போடிய இராசலட்சுமி, கி.பி. 575 முதல் கி.பி. 580 வரை சென்லா இராச்சியத்தை ஆட்சி செய்தவர். இவரின் ஆட்சிக் காலத்தின் பெருமைகள் கம்போடியாவின் புராணக் கதைகளிலும் சித்தரிக்கப் படுகின்றன.[2]
பொது
[தொகு]சென்லா இராச்சியத்தின் மன்னன் சிரேத்தவர்மனின் (King Sreshthavarman) மகளான கம்போடிய இராசலட்சுமி ஓர் இளவரசி ஆவார். மன்னன் சிரேத்தவர்மன் சிரேத்தபுரத்தின் (Shreshthapura) மன்னனாகவும் அறியப் படுகிறார்.[3]
கம்போடிய இராசலட்சுமி, அவரின் தாயாரின் வழியாக சென்லா அரச வம்சத்தின் பழைமையான வம்சாவளியைச் சேர்ந்தவர். 575-ஆம் ஆண்டில் கம்போடிய இராசலட்சுமி வீர வர்மன் மன்னனுக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்.[2][4]
முதலாம் பவவர்மன்
[தொகு]கம்போடிய இராசலட்சுமிக்குப் பிறகு அவரின் கணவர் முதலாம் பவவர்மன் (Bhavavarman I) அரியணை ஏறினார். இருப்பினும், கம்போடிய இராசலட்சுமியின் ஆட்சிக்கான சமகால சான்றுகள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ Cœdès, George. The Making of South East Asia. — Routledge, 2015.
- ↑ 2.0 2.1 Dommen 2019.
- ↑ Jacobsen 2008, ப. 56.
- ↑ 4.0 4.1 Cœdès 2015, ப. 89.
மேலும் படிக்க
[தொகு]- Walker, George B. Angkor Empire. — Signet Press, 1955. — 132 p.
- Cœdès, George. The Making of South East Asia. — Routledge, 2015. — 304 p.
- Dommen, Arthur J. Laos: Keystone Of Indochina. — Routledge, 2019. — 202 p. — (Westview profiles. Nations of contemporary Asia). — ISBN 978-0-367-01650-0.
- Jacobsen, Trudy. Lost Goddesses: The Denial of Female Power in Cambodian History (англ.). — NIAS Press, 2008. — P. 358. — (Gendering Asia). — ISBN 978-87-7694-001-0.