உள்ளடக்கத்துக்குச் செல்

ராணி சோமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோமா
கம்போடியாவின் முதல் பெண் அரசி
பூனானின் இராணி
ஆட்சிக்காலம்முதலாம் நூற்றாண்டு கி.பி.
முடிசூட்டுதல்68 கி.பி.
முன்னையவர்முதலி பதவிக்கு வந்தவர்
பின்னையவர்முதலாம் கௌண்டின்யன்
பிறப்புபூனான்
துணைவர்இரண்டாம் கௌண்டின்யன்
மரபுகௌண்டின்ய அரண்மனை
மதம்கெமர் சமயம், இந்து சமயம்

சோமா ( Soma ) பூனான் இராச்சியத்தின் ஆட்சியாளராகவும் கம்போடியாவின் முதல் அரசியாகவும் பரவலாகக் கருதப்பட்டார் (கி. 1 ஆம் நூற்றாண்டு ஆட்சி செய்தார்). [1] கம்போடியாவின் முதல் பெண் தலைவருமான இவர் [2] முதலாம் கௌண்டின்யனின் ("ஹன்டியன்" அல்லது "பிரே தோங்" என்றும் அழைக்கப்படுகிறார்) மனைவியுமாவார். இவர் சோமா (இந்தியா), லியூயி ( சீனா), லியூ தீப் (வியட்நாம்), நியாங் நெக் (கெமர்) என அறியப்படுகிறார். [3]

ராணி சோமா மற்றும் அவரது கணவர் முதலாம் கௌண்டின்யன் கெமர் புராணத்தில் "பிரே தோங் (கௌண்டின்யன்) மற்றும் நியாங் நெக் (சோமா)" என்று அறியப்படுகிறார்கள். காங் தை மற்றும் ஜு யிங் ஆகிய இரண்டு சீனத் தூதர்களின் அறிக்கைகளின்படி, பூனான் மாநிலம் பண்டைய கலிங்கத்தைச் சேர்ந்த கௌண்டின்யன் என்ற இந்திய பிராமண வணிகரால் நிறுவப்பட்டது. [4]

புராணக் கதை[தொகு]

புராணங்களின்படி, உள்ளூர் நாகக் குலத்தலைவரின் மகள் சோமா தலைமையிலான கடற்கொள்ளையர்களால் இந்திய வணிகக் கப்பல் தாக்கப்பட்டது. கௌண்டின்யன் தலைமையிலான வணிகர்கள் குழு மீண்டும் போராடி தாக்குதல் நடத்தியவர்களைத் தடுத்தனர். ஆனால் கப்பல் சேதமடைந்தது. மேலும் பழுதுபார்ப்பதற்காகக் கடற்கரைக்கு வந்தது. இந்தியர்கள் இரண்டாவது தாக்குதலைப் பற்றி எச்சரிக்கையாக இருந்தனர். ஆனால் இளவரசி சோமா கௌண்டின்யனின் துணிச்சலால் ஈர்க்கப்பட்டு அவரைப் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இணைந்தது அரச வம்சத்தின் அடித்தளத்திற்கு வழிவகுத்தது. இது பூனானின் அரச வம்சமாக மாறியது. இது பல தலைமுறைகளாக இப்பகுதியை ஆட்சி செய்யும் மற்றும் அரச சட்டப்பூர்வமும் ராச்சியத்தில் பெண்கள் அரசாளும் வரிசையும் தொடங்கியது. கெமர் பேரரசின் சகாப்தத்தில் இந்த வரலாற்று மாய சங்கம் அங்கோர் அரசவை விழாக்களில் முக்கிய அங்கமாக இருந்தபோது, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பாம்பு ( நாகம் ) கெமர் உருவப்படத்தின் முக்கியப் பகுதியாக மாறியதற்கான காரணத்தையும் இது விளக்குகிறது .[5] [6] [7]

சான்றுகள்[தொகு]

  1. "The women who made Cambodia". The Phnom Penh Post. 19 May 2010.
  2. "C. 87 Stela from Mỹ Sơn B6". Corpus of the Inscriptions of Campā.
  3. Pelliot, Paul (1903). "Le Fou-nan" (in fr). Bulletin de l'École française d'Extrême-Orient 3: 248–303. doi:10.3406/befeo.1903.1216. http://www.persee.fr/doc/befeo_0336-1519_1903_num_3_1_1216. பார்த்த நாள்: 12 April 2021. 
  4. Chad Raymond (2005), "Regional Geographic Influence on Two Khmer Polities", Journal of Third World Studies, University Press of Florida, pp. 135–150, JSTOR 45194224, பார்க்கப்பட்ட நாள் 31 March 2021
  5. Sanyal, Sanjeev (2016-08-10). The Ocean of Churn: How the Indian Ocean Shaped Human History (in ஆங்கிலம்). Penguin UK. p. 82-84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-86057-61-7.
  6. Tarling, Nicholas (March 2008). The Cambridge History of Southeast Asia (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781139055482.
  7. Hall, DGE (14 May 1981). History of South East Asia (in ஆங்கிலம்). Macmillan Education UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780333241646.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_சோமா&oldid=3735528" இலிருந்து மீள்விக்கப்பட்டது