செஞ்சிறகு கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செஞ்சிறகு கதிர்க்குருவி
Red-winged prinia
வெட்டுக்கிளியினை உண்ணும் செஞ்சிறகு கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே[2]
பேரினம்:
பிரினியா
இனம்:
பி. எரித்ரோப்டெரா
இருசொற் பெயரீடு
பிரினியா எரித்ரோப்டெரா
ஜார்டைன், 1849

செஞ்சிறகு கதிர்க்குருவி (Red-winged prinia) அல்லது செஞ்சிறகு சிலம்பன் (பிரினியா எரித்ரோப்டெரா) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது முன்பு கெலியோலாசு என்ற ஒற்றை வகை உயிரலகு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டது.[3] இது பெனின், புர்க்கினா பாசோ, கமரூன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாட், காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கோட்டிவார், எத்தியோப்பியா, காம்பியா, கானா, கினி, கினி பிசாவு, கென்யா, லைபீரியா, மலாவி, மாலி, நைஜர், மொசாம்பிக், நைஜீரியா, செனிகல், சியேரா லியோனி, சூடான், தன்சானியா, டோகோ, உகாண்டா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளின் இயற்கை வாழ்விடம் உலர் சவன்னாவாகும்.[1]

வகைப்பாட்டியல்[தொகு]

செஞ்சிறகு கதிர்க்குருவி 1849-ல் இசுக்காட்லாந்து இயற்கை ஆர்வலர் வில்லியம் ஜார்டினால் டிரைமோயிகா எரித்ரோப்பிடிரா என்ற விலங்கியல் பெயரில் விவரிக்கப்பட்டது. இதன் வகை வட்டாரம் மேற்கு ஆப்பிரிக்கா ஆகும்.[4][5] எரித்ரோப்டெரா என்பது பண்டைய கிரேக்க எருத்ரோஸ் என்பதிலிருந்து "சிவப்பு" மற்றும் -pteros, "-சிறகுகள்" ஆகிய சொற்களிலிருந்து தோன்றியதாகும்.[6]

இச்சிற்றினத்தின் கீழ் நான்கு துணையினங்கள் உள்ளன:[3]

  • பி. எ. எரித்ரோப்டெரா (ஜார்டின், 1849) - செனகல் முதல் வடக்கு கேமரூன் வரை
  • பி. எ. ஜோடோப்டெரா (யூகுலின், 1864) – மத்திய கேமரூன் முதல் தெற்கு சூடான் மற்றும் வடமேற்கு உகாண்டா வரை
  • பி. எ. மேஜர் (ப்ளண்டல் & லோவாட், 1899) - எத்தியோப்பியா
  • பி. எ. ரோடோப்டெரா (செல்லி, 1880) - கென்யா முதல் கிழக்கு ஜிம்பாப்வே மற்றும் மொசாம்பிக்

பெரும்பாலான வகைப்பாட்டியல் வல்லுநர்கள் இந்த சிற்றினத்தை பிரினியா பேரினத்தில் வைக்கின்றனர். 2013ல் வெளியிடப்பட்ட சிசுடிகோலிடேயின் மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் மூலம் இந்த மாற்றுப் பேரினத்திற்கான ஆதரவு வழங்கப்படுகிறது. இது செஞ்சிறகு சிலம்பன்களுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதும் கண்டறியப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2016). "Prinia erythroptera". IUCN Red List of Threatened Species 2016: e.T22713671A94385480. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713671A94385480.en. https://www.iucnredlist.org/species/22713671/94385480. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Alström, P; Ericson, PG; Olsson, U; Sundberg, P; Per G.P. Ericson, Urban Olsson & Per Sundberg (Feb 2006). "Phylogeny and classiWcation of the avian superfamily Sylvioidea". Molecular Phylogenetics and Evolution 38 (2): 381–397. doi:10.1016/j.ympev.2005.05.015. பன்னாட்டுத் தர தொடர் எண்:1055-7903. பப்மெட்:16054402. 
  3. 3.0 3.1 "Grassbirds, Donacobius, Malagasy warblers, cisticolas & allies". World Bird List Version 7.3. International Ornithologists' Union. 2017. பார்க்கப்பட்ட நாள் 26 August 2017.
  4. Sir William Jardine, 7th Baronet (1849). Contributions to Ornithology for 1849. Edinburgh: W.H. Lizars. பக். 15. https://www.biodiversitylibrary.org/page/51703050. 
  5. Check-list of Birds of the World. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. 1986. பக். 151. https://www.biodiversitylibrary.org/page/14483852. 
  6. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 150. https://archive.org/stream/Helm_Dictionary_of_Scientific_Bird_Names_by_James_A._Jobling#page/n150/mode/1up. 
  7. Olsson, U.; Irestedt, M.; Sangster, G.; Ericson, P.G.P.; Alström, P. (2013). "Systematic revision of the avian family Cisticolidae based on a multi-locus phylogeny of all genera". Molecular Phylogenetics and Evolution 66 (3): 790–9. doi:10.1016/j.ympev.2012.11.004. பப்மெட்:23159891. 

வெளி இணைப்புகள்[தொகு]