சுஷ்மிதா சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


சுஷ்மிதா சென்

Sushmita Sen at the premiere of Dulha Mil Gaya.
இயற் பெயர் சுஷ்மிதா சென்
பிறப்பு நவம்பர் 19, 1975 (1975-11-19) (அகவை 48)
ஐதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
வேறு பெயர் சுஸ்
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1994 - இன்றுவரை

சுஷ்மிதா சென் (இந்தி: सुष्मिता सेन) என்பவர் ஒரு இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் அதிகம் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு பிரபஞ்ச அழகி போட்டியில் வென்றார், இப்பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றார்.

வாழ்க்கை[தொகு]

சுயசரிதம்[தொகு]

சுஷ்மிதா சென் 19 நவம்பர் 1975 அன்று ஐதராபாத்தில் ஒரு வங்காள பைத்யா குடும்பத்தில் சுபீர் செனுக்கும் சுப்ரா செனுக்கும் மகனாகப் பிறந்தார்.[1] [2] இவரது தந்தை சுபீர் சென் இந்திய விமானப்படையில் வானூர்திச் சீறகத் தலைவராக பணியாற்றினார். இவரது தாய் சுப்ரா சென் நகை வடிவமைப்பாளர் துபாயிலுள்ள ஒரு கடையின் உரிமையாளர். இவருக்கு ராசீவ் சென் என்ற தம்பி உள்ளார், ராசீவ் சாரு அசோபா என்ற நடிகையை மணந்தார்.[3] சென் புது தில்லியிலுள்ள விமானப்படை கோல்டன் சூபிலி கல்வி நிறுவனத்திலும்[4] செகந்திராபாத்திலுள்ள புனித ஆன்சு உயர்நிலைப் பள்ளிலும் கல்வி பயின்றார், மேற்கொண்டு உயர் கல்வியைத் தொடரவில்லை.[5] [6]

பிரபஞ்ச அழகி[தொகு]

1994ம் ஆண்டு, தனது பதினெட்டாவது வயதில், பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை சுஷ்மிதா வென்றார், இப்போட்டியில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 1994ம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி காட்சிப் போட்டி பிலிப்பீன்சின் மணிலா நகரில் நடந்தபோது, அதில் பங்குகொண்டு வெற்றிபெற்றார்.

பிரபஞ்ச அழகி போட்டியின் போது, தகுதிச் சுற்றுகள் அனைத்திலும் சுஷ்மிதா மூன்றாவது இடத்தைப் பிடித்தார், தகுதிச் சுற்றுகளில் முதலிடத்தை கொலம்பியாவின் கரோலினா கோமெஸ் பிடித்தார், இரண்டாம் இடத்தை மிஸ் கிரீஸ் அழகி ரீ டோடோன்ஸீ பிடித்ததுடன், நீச்சலுடை மற்றும் மாலை நேர உடைப் போட்டிகளில் வென்றார். நீச்சலுடை, நேர்காணல் மற்றும் மாலை நேர உடை அரையிறுதிப் போட்டிக்களில் முறையே இரண்டாவது, ஐந்தாவது மற்றும் மூன்றாவது இடங்களை சுஷ்மிதா பிடித்தார், இப்போட்டிகளில் மிஸ் கொலம்பியா மற்றும் மிஸ் வெனிசுலா அழகி மினோகா மெர்காடோவுக்கு அடுத்த இடத்தில் சுஷ்மிதா இருந்தார். இந்த மூன்று போட்டியாளர்களும் இறுதி மூன்று போட்டியாளர்களாக தேர்வாகினர். முடிவில், நடுவர்கள் தங்கள் வாக்குகளை சுஷ்மிதாவுக்கு அளித்து, இந்தியாவிலிருந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்லும் முதல் பெண் என்ற பெருமையை அளித்தனர்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

பாண்டலூன் பெமினா மிஸ் இந்தியா 2009 போட்டியின் நடுவராக சுஷ்மிதா பங்குவகித்தார்.

பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும், சுஷ்மிதா நடிகையாக மாறினார். இவரது முதல் படமான தஸ்தக் , 1996ம் ஆண்டு வெளியானது, அப்படத்தில் நன்றாக நடித்திருந்தும், படம் சரியாக ஓடவில்லை. அதே நேரத்தில் இவர் நடித்த தமிழ்ப் படமான ரட்சகன் , மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.[சான்று தேவை] ஆயினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரூபாலி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த, டேவிட் தவான்இயக்கத்தில் உருவான பிவி நம்பர் 1 திரைப்படம் நல்ல பெயரைத் தந்ததுடன், பிலிம்பேர் சிறந்த குணச்சித்திர நடிகை விருதை 1999ம் ஆண்டு பெற்றுத் தந்தது. பிவி நம்பர் 1, 1999ம் ஆண்டு அதிக வசூலை அளித்த திரைப்படம்[7]. அதே ஆண்டு, சிர்ஃப் தும் திரைப்படத்தில் நடித்ததற்காக, அதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, விருதை வென்றார். இவர் நடித்த ஆங்கேன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் விமர்சனங்களையும் சந்தித்தார்.

இதுவரை இவர் நடித்த படங்களில், 2004ம் ஆண்டு வெளியான மைன் ஹூன் நா திரைப்படம் தான் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, இப்படத்தில் நடிகர் ஷாருக் கானுடன் காதல் வயப்படுவது போல நடித்தார். இத்திரைப்படம் ரூ. 34,00,00,000 கோடி வசூல் செய்தது. அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் இது.[8] பின்னர், மைன் ஐசா ஹி ஹூன் திரைப்படத்தில் வழக்கறிஞராக, நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்தார். 2005ம் ஆண்டு, கேக்டஸ் பிளவர் திரைப்படத்தின் மறு உருவாக்கமான மைனே பியார் கியூன் கியா திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் சல்மான் கான் மற்றும் கேத்ரினா கைஃப் ஆகியோருடன் இணைந்து நடித்தார். சமீபத்தில் கர்மா, கன்ஃபெஷன்ஸ் அண்டு ஹோலி (2006) படத்தில் நவோமி கேம்பல் உடன் இணைந்து நடித்தார், அதன் பின் ராம்கோபால் வர்மா கி ஆக் (2007) ஆகிய படங்களில் நடித்தார். இப்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட துல்ஹா மில்கயா (2010) திரைப்படத்தில் ஷாருக் கானுடன் இணைந்து நடிக்கிறார்.

மறைந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனாசீர் பூட்டோ கதாபாத்திரத்தை ஏற்று ஒரு திரைப்படத்தில் சுஷ்மிதா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தை ஜாகித் அஜீஸ் மற்றும் ஜென்னா ராய் ஆகியோர் இணைந்து, முறையே கராச்சி தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ் விஷன் மற்றும் லீசெஸ்டரைச் சேர்ந்த சன் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக இணைந்து தயாரிக்கின்றனர். உறுதியாக கூறப்படாத வகையில், "பெனாசீர் பூட்டோ: தி மூவி" என்று தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம், பூட்டோ மாணவியாகவும், நாடு கடத்தப்பட்ட நிலையில் ஓர் அரசியல் தலைவராகவும் பல ஆண்டுகள் செலவிட்டிருந்த பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் துபாயின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட இருந்தது. இந்த பெரிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறித்து சுஷ்மிதா சென்னிடம் கேட்கப்பட்ட போது, "ஆம், நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்." என்று உற்சாகமாக தெரிவித்தார்.[213][9]

சமீபத்தில் இவர் டூ நாட் டிஸ்டர்ப் என்ற திரைப்படத்தில், பல திரைப்படங்களில் இவருடன் இணைந்த கோவிந்தா உடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது.[10]

ஷிம்மர் என்ற வெற்றிகரமான மாடல் நங்கையாக 'துல்ஹா மில்கயா' திரைப்படத்தில் நடித்தார்[11]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்[தொகு]

பிலிம்ஃபேர் விருதுகள்[தொகு]

2000: சிறந்த துணை நடிகை வெற்றி/1}, பிவி நம்பர்.1 (1999) திரைப்படத்துக்காக

2000: சிறந்த துணை நடிகை பரிந்துரை, சிர்ஃப் தும் (1999)திரைப்படத்துக்காக

2003: சிறந்த துணை நடிகை பரிந்துரை, ஃபில்ஹால் (2002) திரைப்படத்துக்காக

ஸ்டார் ஸ்கிரீன் விருதுகள்[தொகு]

2001 சிறந்த துணை நடிகை வெற்றி ,பிவி நம்பர்.1

2004 சிறந்த நடிகை பரிந்துரை Samay: When Time Strikes

ஐஐஎப்ஏ விருதுகள்[தொகு]

2000 ஐஐஎப்ஏ சிறந்த துணை நடிகை விருது வெற்றி , பிவி நம்பர்.1

ஜீ சினி விருதுகள்[தொகு]

2000: சிறந்த துணை நடிகை வெற்றி , பிவி நம்பர்.1 (1999)

2003: சிறந்த துணை நடிகை வெற்றி , ஃபில்ஹால் (2002)

2005: சிறந்த துணை நடிகை பரிந்துரை, மைன் ஹூன் நா (2004)

தேசிய அங்கீகாரங்கள்[தொகு]

2006: பாலிவுட்டில் சாதித்ததற்காக ராஜீவ்காந்தி விருது[12]

திரைப்படப் பட்டியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் இதர குறிப்புகள்
1996 தஸ்தக் சுஷ்மிதா சென்
1997 ஸோர் ஆர்த்தி
ரட்சகன் சோனியா தமிழ்த் திரைப்படம்
தெலுங்கில் ரக்ஷகுடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது
1999 சிர்ஃப் தும் நேஹா பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார்
ஹிந்துஸ்தான் கி கசம் பிரியா
பீவி நம்பர் 1 ரூபாலி வெற்றி : பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது
2000 ஆகாஸ் சுதா
ஃபிஸா கவுரவத் தோற்றம் (பாடல்)
2001 க்யூன்...! கி மைன் ஜூத் நஹி போல்தா சோனம்
Nayak: The Real Hero சிறப்புத் தோற்றம் (பாடல்)
முதல்வன் தமிழ்த் திரைப்படம்
சிறப்புத் தோற்றம் (பாடல்)
பஸ் இத்னா சா க்வாப் ஹை லாரா ஓபராய்
2002 ஆங்கேன் நேஹா ஸ்ரீவத்சவ்
தும்கோ நா பூல் பாயேங்கே மெஹாக்
ஃபில்ஹால்... சியா ஷேத் பரிந்துரை, பிலிம் ஃபேர் சிறந்த நடிகை விருது
2003 Samay: When Time Strikes ஏசிபி மால்விகா சவுஹான்
பிரான் ஜாயே பர் ஷான் நா ஜாயே சொந்த வேடம் சிறப்புத் தோற்றம்
2004 வாஸ்து சாஸ்திரா ஜில்மில் ராவ்
மை ஹூன் நா சாந்தினி
பைசா வசூல் பேபி
2005 சிங்காரி(2005) பாசந்தி
மைனே பியார் கியூன் கியா? நயினா
மைன் ஐசா ஹி ஹூன் நீத்தி கன்னா
பேவஃபா ஆர்த்தி
கிஸ்னா நய்மா பேகம் சிறப்புத் தோற்றம் (பாடல்)
இட் வாஸ் ரெய்னிங் தட் நைட்
2006 ஜிந்தகி ராக்ஸ் கிரியா
அலக் சிறப்புத் தோற்றம் (பாடல்)
2007 ராம் கோபால் வர்மா கி ஆக் துர்கா
2009
கர்மா, கன்ஃபெஷன்ஸ் அண்டு ஹோலி மீரா ஆங்கில திரைப்படம்
டூ நாட் டிஸ்டர்ப் கிரண்
மர்மயோகி போர் வீரர் தமிழ்த் திரைப்படம்
2010 துல்ஹா மில் கயா ஷிம்மர் வெளியிடப்பட்டு விட்டது

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "Sharmila Tagore to Sushmita Sen, Bollywood divas born in Hyderabad". https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/sharmila-tagore-to-sushmita-sen-these-8-bollywood-divas-were-born-in-hyderabad/photostory/81495750.cms?picid=81495780. 
 2. "সুস্মিতা সেন".
 3. "Unseen Pictures From Sushmita Sen's Brother Rajeev And Charu Asopa's Wedding". Archived from the original on 24 June 2019.
 4. "Sushmita Sen turns a year older: Lesser known facts". Archived from the original on 30 March 2019.
 5. "MCH bulldozers may force St. Ann's to relocate" இம் மூலத்தில் இருந்து 29 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029205210/http://articles.timesofindia.indiatimes.com/2006-02-12/hyderabad/27814807_1_mch-hyderabad-public-school-compound-wall. 
 6. "No college degree for Sushmita Sen" இம் மூலத்தில் இருந்து 17 August 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130817111446/http://articles.timesofindia.indiatimes.com/2010-03-06/news-interviews/28145558_1_sushmita-sen-renee-and-alisah-maitreyi-college. 
 7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-22.
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
 9. Punn, Goher (28 January 2009). "Sushmita Sen roped in to play Benazir Bhutto". Radio Sargam. http://www.radiosargam.com/films/archives/32433/suhsmita-sen-roped-in-to-play-benazir-bhutto.html. பார்த்த நாள்: 28 January 2009. 
 10. http://www.boxofficeindia.com/
 11. "Dulha Mil Gaya is my project out and out: Sushmita Sen". பார்க்கப்பட்ட நாள் 2010-02-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 12. "ஜான் ஆபிரஹாம், ராஜீவ்காந்தி விருதளித்து கவுரவிக்கப்பட்டார்". Archived from the original on 2007-10-16. பார்க்கப்பட்ட நாள் 2010-02-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுஷ்மிதா_சென்&oldid=3884276" இலிருந்து மீள்விக்கப்பட்டது