ரன்தீப் ஹூடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ரன்தீப் ஹூடா (Randeep Hooda ; பிறப்பு 20 ஆகஸ்ட் 1976) ஒரு இந்திய நடிகர் மற்றும் குதிரையேற்ற வீரர் ஆவார். இந்தி திரைப்படத் துறையில் பணியாற்றியதற்காக மிகவும் பரவலாக அறியப்படும் இவர், இரண்டு ஸ்டார்டஸ்ட் விருதுகள் பெற்றுள்ளார். மேலும் பிலிம்பேர் மற்றும் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகளுக்கு தலா ஒரு முறை பரிந்துரை செய்யப்பட்டார்.

ஹரியானாவின் ரோத்தக்கில் பிறந்த ஹூடா, சோனேபத்தில் உள்ள நேரு பள்ளியில் படித்தார். பின்னர் இவர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் மனிதவள மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பியதும் விளம்பரம் மற்றும் நாடக தயாரிப்புகளில் நடிக்கத் தொடங்கினார். மீரா நாயரின் மான்சூன் வெட்டிங் (2001) இந்தி திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். இவரின் டி (2005) மற்றும் கர்மா அவுர் ஹோலி (2009) உள்ளிட்டவை விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வி அடைந்தன.

வணிக ரீதியாக வெற்றி பெற்ற ஒன்ஸ் அபான் எ டைம் இன் மும்பை (2010) இல் ஹூடா நடித்தபோது அவரது திரைப்பட வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. பின்னர் சாஹேப், பிவி அர் கேங்க்ஸ்டர் (2011) இல் இவர் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இது அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஐஃபா விருதைப் பெற்றுத்தந்தது. ஜன்னத் 2 (2012) மற்றும் ஜிஸ்ம் 2 (2012) ஆகிய வெற்றிப் படங்களில் இவர் நடித்தார்.

ஹூடா தனது திரைப்படங்கள் தவிர்த்து பல மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். மேலும் லீ பிளெசிங்கின் எ வாக் இன் தி வூட்ஸ் தழுவலுடன் நாடக ஆசிரியராக அறிமுகமானார். இவர் ஒரு தொழில்முறை குதிரையேற்ற வீரர், ஆவார். இவர் வழக்கமாக போலோ, ஷோ ஜம்பிங் மற்றும் டிரஸ்ஸேஜ் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கிறார். இந்திய குதிரையேற்றம் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த புதுடில்லியில் நடந்த அலங்கார நிகழ்ச்சியில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி[தொகு]

ரந்தீப் சிங் ஹூடா ஆகஸ்ட் 20, 1976 அன்று இந்தியாவின் ஹரியானாவின் ரோத்தக்கில் பிறந்தார். ரன்தீப் ஹூடாவின் பெற்றோர் ரன்பீர் ஹூடா மற்றும் ஆஷா தேவி ஹூடா ஆவர். இவரது தந்தை மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவரின் தாயார் சமூக சேவகர். [1] இவர் தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை தனது பாட்டியுடன் கழித்தார். ஏனெனில் அவரது பெற்றோர் பல இடங்களுக்குப் பயணம் செய்து மத்திய கிழக்கில் வசித்து வந்தனர். [2] அவருக்கு அஞ்சலி ஹூடா சங்வான் எனும் ஒரு மூத்த சகோதரி இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பயிற்சி பெற்ற (எம்பிபிஎஸ், எம்.டி) மருத்துவர் ஆவார். [3] [4] [5] சந்தீப் ஹூடா எனும் இளைய சகோதரர் சிங்கப்பூரில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிகிறார்.

ஹூடா ஒரு ஜாட் குடும்பத்தைச் சேர்ந்தவர். [6] ஹரியானாவின் ராய் நகரில் உள்ள போர்டிங் பள்ளியான மோதிலால் நேரு ஸ்கூல் ஆப் ஸ்போர்ட்ஸ் (எம்.என்.எஸ்.எஸ்) என்பதில் இவர் கல்வி பயின்றார். அங்கு இவர் நீச்சல் மற்றும் குதிரையேற்ற விளையாட்டுகளில் பங்கேற்று தேசிய அளவில் பதக்கங்களை வென்றார். [7]

ரெடிஃப்.காமுக்கு அளித்த பேட்டியில், மக்கள் முன் தோன்றுவதை இவர் ரசிப்பதாக கூறினார். இருப்பினும், இவர் ஒரு மருத்துவராக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பியதாகவும் கூறினார்.

திரைப்படங்கள்[தொகு]

இந்தியா திரும்பியதும் விளம்பரம் மற்றும் நாடக தயாரிப்புகளில் நடிக்கத் தொடங்கினார். மீரா நாயரின் மான்சூன் வெட்டிங் (2001) இந்தி திரைப்படத்தில் இவர் அறிமுகமானார். இவர் டி (2005) மற்றும் கர்மா அவுர் ஹோலி (2009) உள்ளிட்ட படங்களில் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தோல்வி அடைந்தன.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரன்தீப்_ஹூடா&oldid=3180272" இருந்து மீள்விக்கப்பட்டது