போலோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போலோ

போலோ (Polo) என்பது குதிரையின் மீது அமர்ந்துகொண்டு, நீண்ட கழியினால் பந்தை அடித்து ஆடும் விளையாட்டு ஆகும்.

தோற்றம்[தொகு]

இது ஒரு பழமையான விளையாட்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரசீகர்கள் இந்த விளையாட்டை விளையாடினர்.[1][2] அங்கிருந்து இந்தியர்கள் இதை அறிந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து பிறகு ஆங்கிலேயர் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இந்த விளையாட்டு பரவியது.

போலோ ஆட்டக்களம்[தொகு]

போலோ ஆட்டக்களம் 275 மீட்டர் நீளமும் 138 மீட்டர் அகலமும் உள்ள புல் தரை. அகலப் பக்கங்களில் நடுவில் 8 மீட்டர் இடைவெளியில் இரண்டிரண்டு கம்பங்கள் நடப்பட்டிருக்கும். இக்கம்பங்களுக்கு இடையில் பந்து செல்லுமாறு அடித்து கோல் (Goal) போட வேண்டும். பந்து வெள்ளை வர்ணம் தீட்டப்பட்டிருக்கும். பந்தை அடிக்கப் பிரம்பு அல்லது மூங்கிலினாலான 3½ மீட்டர் நீளமுள்ள கழியை ஆட்டக்காரர்கள் பயன்படுத்துவர்.

விளையாடும் முறை[தொகு]

போலோ விளையாட்டில் இரு அணிகள் இருக்கும். ஒவ்வொரு அணியிலும் நான்கு ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். எதிர் அணியின் கோலினுள் பந்தை அடிப்பதே ஆட்டத்தின் குறிக்கோள். ஆட்டக்காரர்கள் விதிகளை மீறாமல் பார்த்துக்கொள்ள இரண்டு நடுவர்கள் இருப்பார்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிகமான கோல் போடும் அணியினர் வெற்றிபெற்றவர்களாவர்.

இயல்பு[தொகு]

போலோ மிக விரைவான ஓர் விளையாட்டு. இதை விளையாடுவதற்குக் குதிரைகள் தக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் பார்க்க[தொகு]

  1. https://en.wikipedia.org/wiki/Federation_of_International_Polo
  2. https://en.wikipedia.org/wiki/PIPA_Polo_Instructors_and_Players_Association
  3. https://en.wikipedia.org/wiki/World_Polo_Championship
  4. https://en.wikipedia.org/wiki/Dakyu

மேற்கோள்கள்[தொகு]

  1. "The History of Polo". பார்த்த நாள் 27 March 2015.
  2. "The origins and history of Polo". பார்த்த நாள் 27 March 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலோ&oldid=2724086" இருந்து மீள்விக்கப்பட்டது