லலித் மோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லலித் மோதி
இந்தியன் பிரீமியர் லீக் ஆணையர்
பதவியில்
2008–2010
ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தலைவர்
பதவியில்
2005–2009
பதவியில்
2014–2015
பஞ்சாப் கிரிக்கெட் சங்கத் துணைத் தலைவர்
பதவியில்
2004–2012
மோடி குழும நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்
பதவியில்
1991–2022
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 நவம்பர் 1963 (1963-11-29) (அகவை 60)
புது தில்லி, இந்தியா
துணைவர்(கள்)
மினல் சாக்ராணி
(தி. 1991; இற. 2018)
பிள்ளைகள்2
பெற்றோர்கிரிசன் குமார் மோடி
பினா மோடி
வாழிடம்லண்டன்
வேலை
 • வணிகர்
 • விளையாட்டு நிர்வாகம்

லலித் மோதி (பிறப்பு: 29 நவம்பர் 1963) ஒரு இந்தியத் தொழிலதிபர் மற்றும் முன்னாள் துடுப்பாட்ட நிர்வாகி ஆவார். 2013 ஆம் ஆண்டு இந்திய அமலாக்க இயக்குனரகம் இவரது நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு, லண்டன் தப்பியோடிய இவர் அங்கேயே வசித்து வருகிறார்.

இவர் இந்தியன் பிரீமியர் லீகின் தலைவர் மற்றும் ஆணையராக செப்டம்பர் 2008 முதல் 2010 வரை பணியாற்றினார். 2005 முதல் 2010 வரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத் துணைத் தலைவராகவும், 2005 முதல் 2009 வரை மற்றும் 2014 முதல் 2015 வரையிலும் ராஜஸ்தான் துடுப்பாட்ட சங்கத் தலைவராகவும், 2004 முதல் 2012 வரை பஞ்சாப் துடுப்பாட்ட சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். அத்துடன் இவர் மோடி குழும நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும், கோட்பிரே பிலிப்சு இந்தியா நிறுவனத்தின் செயல்நிர்வாக இயக்குநராகவும் இருக்கிறார்.

ஐபிஎல் 2010 முடிவடைந்த சிறிது காலத்தில், முறைகேடு, ஒழுக்கமின்மை, நிதி முறைகேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளால் மோடி துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு எதிராக விசாரணையைத் தொடர்ந்து, 2013 இல் இவர் குற்றவாளி என்று கண்டறிந்ததை அடுத்து இவருக்கு இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

லலித் மோடி டெல்லியில் 29 நவம்பர் 1963 அன்று கிரிசன் குமார் மோடி - பினா மோடி இணையருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.[1] இவருக்கு சாரு என்ற ஒரு சகோதரியும், சமீர் என்ற ஒரு இளைய சகோதரரும் இருக்கின்றனர்.[2] இவரது தாத்தா குசர் மால், மோடி வணிக நிறுவனத்தை நிறுவினார்.[3][4]

மோடி 1971 இல் சிம்லாவில் உள்ள பிசப் காட்டன் பள்ளியில் சேர்ந்தார்.[5] பின்னர் இவரது குடும்பத்தினர் இவரை நைனிடால் புனித சோசப் கல்லூரிக்கு மாற்றினர். 1980 ஆம் ஆண்டில், திரைப்படம் பார்ப்பதற்காக பள்ளிக்கு விடுப்பு எடுத்த காரணத்தினால், இவர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.[6] 1983 - 1986 ஆண்டுகளுக்கு இடையில், மோடி அமெரிக்காவில் மின் பொறியியல் மற்றும் வணிக நிர்வாகத்தைப் படித்தார். இவர் நியூயார்க்கில் உள்ள பேசு பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டுகளும், டியூக் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆண்டு படித்த போதிலும் பட்டப் படிப்பை முடிக்கவில்லை.[7][8]

தொழில்முறை வாழ்க்கை[தொகு]

1986 இல், மோடி மீண்டும் டெல்லிக்கு வந்து, குடும்பத் தொழிலில் சேர்ந்தார். 21 ஆகத்து 1989 இல், இவர் காட்பிரே பிலிப்சு புகையிலை நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி 1992 இல், இவர் அதே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.[9] பின்னர், மோடி தனது குடும்பத்தால் நடத்தப்படும் தொழில்துறை நிறுவனமான மோடி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் ஆனார்.[10][11]

விளையாட்டு நிர்வாகம்[தொகு]

2004 இல், மோடி பஞ்சாப் துடுப்பாட்ட சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; 2008 தேர்தலில் இந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.[12] 2005 இல் ராஜஸ்தான் துடுப்பாட்ட சங்கத்தின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13] இதையடுத்து, இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத் துணைத் தலைவராக மோடி நியமிக்கப்பட்டார்.[14]

2008 இல், இருபது20 துடுப்பாட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தியன் பிரீமியர் லீக்கை (ஐபிஎல்) தொடங்குவதில் லலித் மோடி முக்கியப் பங்காற்றினார். இவர் இந்தியன் பிரீமியர் லீகின் தலைவர் மற்றும் ஆணையராக செப்டம்பர் 2008 முதல் 2010 வரை பணியாற்றினார்.[15][16]

ஐபிஎல் 2010 முடிவடைந்த சிறிது காலத்தில், முறைகேடு, ஒழுக்கமின்மை மற்றும் நிதி முறைகேடுகள் போன்ற குற்றச்சாட்டுகளால் மோடி துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.[17] இவருக்கு எதிராக விசாரணையைத் தொடர்ந்து, 2013 இல் இவர் குற்றவாளி என்று கண்டறிந்ததை அடுத்து இவருக்கு இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. 2013 ஆம் ஆண்டு இந்திய அமலாக்க இயக்குனரகம் இவரது நிதி முறைகேடுகள் தொடர்பாக விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு, லண்டன் தப்பியோடிய இவர் அங்கேயே வசித்து வருகிறார்.[18][19][20][21]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Lalit Modi, profile". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 30 August 2009.
 2. Debaashis Bhattacharya (19 April 2009). "Who's this man?". The Telegraph. Archived from the original on 12 December 2009.
 3. "The other side of Lalit Modi". Indian Express. 16 May 2012. Archived from the original on 10 January 2014. பார்க்கப்பட்ட நாள் 10 January 2013.
 4. James Astill (2013). The Great Tamasha. Bloomsbury. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781408192207.
 5. Sharma, Surender (26 April 2010). "Lalit Modi never gave up without a fight". Mid-day.com. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
 6. Vineet Upadhyay (19 June 2015). "Lalit Modi wasn't one to follow rules even as a boy". The Times of India.
 7. Tomar, KS (18 April 2010). "Is this man a genius or a bad guy?". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 28 August 2017.
 8. Abhishek Dubey (2011). The IPL Story: Cricket, Glamour and Big Money. Pearson Education India. pp. 33–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-5800-7.
 9. Lalit Kumar Modi. "Lalit Modi: Executive Profile & Biography – Businessweek". Investing.businessweek.com. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
 10. Blakely, Rhys (12 March 2010). "Lalit Modis vision of world domination for Indian Premier League". The Times. London.
 11. "Lalit will head family flagship, says father". The Economic Times. 27 April 2010. பார்க்கப்பட்ட நாள் 10 January 2014.
 12. "Bindra remains Punjab Cricket Association president. Cricket News. Global". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 December 2013.
 13. Nagraj Gollapudi and Amol Karhadkar (5 January 2014). "FAQs: The Rajasthan Cricket Association election case". ESPN.
 14. "Lalit Modi has no problem with IPL cash flows". cricket20. பார்க்கப்பட்ட நாள் 19 March 2014.
 15. Hoult, Nick (22 May 2009). "Lalit Modi unveils ambitious IPL plans for global domination". The Daily Telegraph. London.
 16. "IPL confirms South Africa switch". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 10 January 2014.
 17. Samanth Subramanian (1 March 2011). "The Confidence Man".
 18. "The IPL founder, the fugitive: Who is Lalit Modi?". The Indian Express (in ஆங்கிலம்). 2022-07-14. பார்க்கப்பட்ட நாள் 2023-03-30.
 19. Prabhakar, Vinay (2020-08-08). "#Exclusive: Who is Protecting Fugitive Lalit Modi? RTI Reveals No Action On Request For CBI Probe Against Modi". thelogicalindian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-30.
 20. "13 years on, Baroda Cricket Association (BCA) realizes fugitive Lalit Modi is still its patron". The Times of India. 2023-02-28. பன்னாட்டுத் தர தொடர் எண் 0971-8257. பார்க்கப்பட்ட நாள் 2023-03-30.
 21. "Cricket czar to fugitive: Lalit Modi's meteoric rise, momentous fall". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லலித்_மோடி&oldid=3952693" இலிருந்து மீள்விக்கப்பட்டது