சுய்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Suina|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
Suina
புதைப்படிவ காலம்:Late Eocene to Holocene, 33.9–0 Ma
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Suina
Genera and families

சுயினா (சுயிபார்மிசு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது அனைத்துண்ணி வகையினைச் சேர்ந்த அசைவில்லா இரட்டைப்படைக் குளம்பி பாலூட்டிகளின் துணைவரிசையாகும். இதில் வீட்டுப் பன்றி மற்றும் ஈட்டிப்பல் பன்றிகள் அடங்கும். இந்த உயிரலகின் உறுப்பினர்கள் சுயின் என்று அழைக்கப்படுகின்றன. சுயிடே பன்றி மற்றும் ஈட்டிப்பல் பன்றி குடும்பத்தையும் உள்ளடக்கியது. தயாசூயிடே குடும்பம் தாயாச்யிடுகள் அல்லது பெக்காரியிசு என அழைக்கப்படுகிறது. சூயின்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. காட்டுப்பன்றி ஐரோப்பா மற்றும் ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. வட அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வீட்டுப் பன்றிகளின் துணையினங்கள் விவசாயத்தில் பரவலான பயன்பாடு உடையது. சுயினா உயிரினங்கள் 55 செ.மீ. முதல் (குள்ள காட்டுப் பன்றி) 83 செ.மீ. (பெரும் காட்டுப் பன்றிகள்) நீளமுடையன. இவை முதன்மையாகக் காடு, புதர் நிலம் மற்றும் புல்வெளி உயிர்வாழ்விடங்களில் காணப்படுகின்றன, இருப்பினும் சில பாலைவனங்கள், ஈரநிலங்கள் அல்லது கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன. பெரும்பாலான சிற்றினங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற மதிப்பீட்டைக் கொண்டிருக்கவில்லை, இருப்பினும் தோராயமாக இரண்டு பில்லியன் வீட்டுப் பன்றிகள் விவசாயத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் பல சிற்றினங்கள் 100க்கும் குறைவான எண்ணிக்கையுடன் அருகிய இனம் அல்லது மிக அருகிவிட்ட இனமாகக் கருதப்படுகின்றன. ஒரு சிற்றினம், ஹியூடின் காட்டுப் பன்றி, 20 ஆம் நூற்றாண்டில் அழிந்துவிட்டதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் கருதப்படுகிறது.

வகைப்பாடு[தொகு]

ஆர்டியோடாக்டைலாவிற்குள் சுய்னாவின் இடத்தை பின்வரும் கிளை வரைபடத்தில் குறிப்பிடலாம்.[1][2][3][4][5]

தைலோபோடா (ஒட்டகம்)

 ஆர்டியோபேபுலா 

  சுய்னா (பன்றி)

 செட்ரூமினாண்டியா 

 ரூமினாண்டியா (அசைபோடும் விலங்குகள்)  

 செட்டான்கோடோண்டா/விப்போமார்பா 

 கிப்போபொட்டாமிடே (நீர்யானை)

 சீட்டேசியா (திமிங்கலம்)

சுய்னாவின் துணைவரிசை ஒன்பது பேரினங்களில் தற்போதுள்ள 21 சிற்றினங்களைக் கொண்டுள்ளது. இவை 6 பேரினங்களில் 18 சிற்றினங்களைக் கொண்ட சூயிடே குடும்பத்திற்கும், 3 சிற்றினங்கள் கொண்ட 3 பேரினங்களுடன் கூடிய தயாசூயிடே குடும்பத்திற்கும் இடையில் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் காட்டுப்பன்றி-பன்றி கலப்பினங்கள் அல்லது அழிந்துபோன வரலாற்றுக்கு முந்தைய சிற்றினங்கள் போன்ற இல்லை. கூடுதலாக, ஒரு சிற்றினம், ஹியூட் பன்றி, 20ஆம் நூற்றாண்டில் அழிந்தது.

 

  • குடும்பம் சூயிடே (பன்றிகள்)
    • பேரினம் பேபிரூசா: 4 சிற்றினங்கள்
    • பேரினம் கைலோகோரசு: 1 சிற்றினம்
    • பேரினம் பாகோகோரசு: 2 சிற்றினங்கள்
    • பேரினம் போர்குலா: 1 சிற்றினம்
    • பேரினம் பொட்டாமோகோரசு: 2 சிற்றினங்கள்
    • பேரினம் சுசு: 9 சிற்றினங்கள்
  • குடும்பம் தயாசுயிடே (பெக்காரியசு)
    • பேரினம் கேட்டகோனசு: 1 சிற்றினம்
    • பேரினம் தைகோடைல்சு: 1 சிற்றினம்
    • பேரினம் தயாசசு: 1 சிற்றினம்
சுய்னா  
சூயிடே  

சுசு

போர்குலா

பொட்டாமோகோரசு

கைலோகோரசு

பாகோகோரசு

பேபிரூசா

தயாசுயிடே  

தைகோடைல்சு

தயாசசு

கேட்டகோனசு

மேற்கோள்கள்[தொகு]

  1. Beck, N.R. (2006). "A higher-level MRP supertree of placental mammals". BMC Evol Biol 6: 93. doi:10.1186/1471-2148-6-93. பப்மெட்:17101039. 
  2. O'Leary, M.A.; Bloch, J.I.; Flynn, J.J.; Gaudin, T.J.; Giallombardo, A.; Giannini, N.P.; Goldberg, S.L.; Kraatz, B.P. et al. (2013). "The Placental Mammal Ancestor and the Post-K-Pg Radiation of Placentals". Science 339 (6120): 662–667. doi:10.1126/science.1229237. பப்மெட்:23393258. Bibcode: 2013Sci...339..662O. 
  3. Song, S.; Liu, L.; Edwards, S.V.; Wu, S. (2012). "Resolving conflict in eutherian mammal phylogeny using phylogenomics and the multispecies coalescent model". Proceedings of the National Academy of Sciences 109 (37): 14942–14947. doi:10.1073/pnas.1211733109. பப்மெட்:22930817. Bibcode: 2012PNAS..10914942S. 
  4. dos Reis, M.; Inoue, J.; Hasegawa, M.; Asher, R.J.; Donoghue, P.C.J.; Yang, Z. (2012). "Phylogenomic datasets provide both precision and accuracy in estimating the timescale of placental mammal phylogeny". Proceedings of the Royal Society B: Biological Sciences 279 (1742): 3491–3500. doi:10.1098/rspb.2012.0683. பப்மெட்:22628470. 
  5. Upham, N.S.; Esselstyn, J.A.; Jetz, W. (2019). "Inferring the mammal tree: Species-level sets of phylogenies for questions in ecology, evolution, and conservation". PLOS Biology 17 (12): e3000494. doi:10.1371/journal.pbio.3000494. பப்மெட்:31800571. (see e.g. Fig S10)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுய்னா&oldid=3930084" இலிருந்து மீள்விக்கப்பட்டது