சீரியம் மோனோசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரியம் மோனோசல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
சீரியம் சல்பைடு (CeS), சீரியம்(3+) முச்சல்பைடு
இனங்காட்டிகள்
12014-82-3
InChI
  • InChI=1S/Ce.S
    Key: INJMJSIZAXAEMH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • S=[Ce]
பண்புகள்
CeS
வாய்ப்பாட்டு எடை 172.18 g·mol−1
தோற்றம் Yellow crystalline solid
அடர்த்தி 5.9 கி/செ.மீ3
உருகுநிலை 2,445 °C (4,433 °F; 2,718 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சீரியம் மோனோசெலீனைடு
சீரியம்மோனோதெல்லூரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீரியம் மோனோசல்பைடு (Cerium monosulfide) என்பது CeS என்ற என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓர் இருமச் சேர்மமான இது சீரியமும் கந்தகமும் வினை புரிவதால் உருவாகிறது.[1][2][3][4] அறியப்பட்டுள்ள சீரியத்தின் சல்பைடு உப்புகளில் மிகவும் எளிய உப்பு சீரியம் மோனோசல்பைடாகும்.

தயாரிப்பு[தொகு]

  • 2450 °செல்சியசு வெப்பநிலையில் தூய சீரியம் உலோகத்தையும் கந்தகத்தையும் விகிதவியல் அளவுகளில் சேர்த்து வினைபுரியச் செய்தால் சீரியம் மோனோசல்பைடு உருவாகும்:
Ce + S -> CeS
  • இருசீரியம் முச்சல்பைடுடன் சீரியம் ஐதரைடைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினாலும் சீரியம் மோனோசல்பைடு உருவாகும்:[5]
Ce2S3 + CeH2 -> 3CeS + H2

இயற்பியல் பண்புகள்[தொகு]

சீரியம் மோனோசல்பைடு நீரில் கரையாது, மஞ்சள் நிறத்தில் படிகத் திண்மமாகக் காணப்படுகிறது. 2445 பாகை செல்சியசு வெப்பநிலையில் உருகத் தொடங்கும்.

வேதிப் பண்புகள்[தொகு]

சீரியம் மோனோசல்பைடு உலோகங்களின் மீது ஈரமாக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும் இது பிளாட்டினத்தைத் தவிர மற்ற உலோகங்களுக்கு ஒப்பீட்டளவில் நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது. மேலும் பிளாட்டினத்துடன் தீவிரமாக வினைபுரிந்து பிளாட்டினம் சீரியம் என்ற இடை உலோக கலவையை உருவாக்குகிறது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Perry, Dale L. (19 April 2016) (in en). Handbook of Inorganic Compounds. CRC Press. பக். 105. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4398-1462-8. https://books.google.com/books?id=SFD30BvPBhoC&dq=Cerium+monosulfide+CeS&pg=PA105. பார்த்த நாள்: 4 April 2023. 
  2. Pauling, Linus (24 November 2014) (in en). General Chemistry. Courier Corporation. பக். 635. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-486-13465-9. https://books.google.com/books?id=FjKlBQAAQBAJ&dq=Cerium+monosulfide+CeS&pg=PA635. பார்த்த நாள்: 4 April 2023. 
  3. Kariper, İshak Afşin (1 December 2014). "Synthesis and characterization of cerium sulfide thin film" (in en). Progress in Natural Science: Materials International 24 (6): 663–670. doi:10.1016/j.pnsc.2014.10.005. பன்னாட்டுத் தர தொடர் எண்:1002-0071. 
  4. "Cerium Monosulfide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 4 April 2023.
  5. 5.0 5.1 Gibbard, Kevin B.; Allahar, Kerry N.; Kolman, David; Butt, Darryl P. (September 2008). "Kinetics of thermal synthesis of cerium sulfides". Journal of Nuclear Materials 378 (3): 291–298. doi:10.1016/j.jnucmat.2008.05.013. Bibcode: 2008JNuM..378..291G. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0022311508003565. பார்த்த நாள்: 4 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்_மோனோசல்பைடு&oldid=3898265" இலிருந்து மீள்விக்கப்பட்டது