வீரராஜேந்திர சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28: வரிசை 28:


====சாளுக்கியப் போர்கள்====
====சாளுக்கியப் போர்கள்====
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய [[கல்வெட்டு]]க்கள் எடுத்தியம்புகின்றன. வீரராஜேந்திரன் மன்னன் ஆகுமுன்பே, அப்போதைய முடிக்குரிய இளவரசனான இராஜமகேந்திரனின் தலைமையில் சாளுக்கியருடன் போரிட்டுள்ளான். இப்போரில் சாளுக்கியரை முறியடித்துச் சோழப்படை வெற்றி பெற்றது.
வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய [[கல்வெட்டு]]க்கள் எடுத்தியம்புகின்றன. வீரராஜேந்திரன் மன்னன் ஆகுமுன்பே, அப்போதைய முடிக்குரிய இளவரசனான இராஜமகேந்திரனின் தலைமையில் சாளுக்கியருடன் போரிட்டுள்ளான். இப்போரில் சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே [[கூடல் சங்கமம்]] என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.


அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான 10 செப்டெம்பர் 1067 அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.

தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.


[[பகுப்பு:சோழ அரசர்கள்]]
[[பகுப்பு:சோழ அரசர்கள்]]

19:54, 19 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம்

வீரராஜேந்திர சோழன்


கி.பி 1069 சோழர் ஆட்சிப்பகுதிகள்
ஆட்சிக்காலம் கி.பி 1063 - கி.பி 1070
பட்டம் ராஜகேசரி
தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம்
அரசி அருள்மொழிநங்கை
பிள்ளைகள் மதுராந்தகன்
கங்கைகொண்ட சோழன்
இராஜசுந்தரி
முன்னவன் இராஜேந்திர சோழன் II
பின்னவன் அதிராஜேந்திர சோழன்
தந்தை இராஜேந்திர சோழன் I
பிறப்பு அறியப்படவில்லை
இறப்பு கி.பி 1070


இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன் (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரராஜேந்திரன் அரசனாக்கப்பட்டான்.

இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

போர்கள்

வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கிழக்குச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

ஆரம்பகாலப் போர்கள்

இவனுடைய ஆரம்ப காலத்தில், சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கே சென்று போரிட்டான். பாண்டி நாட்டிலும், சில பாண்டிய இளவரசர்களின் கிளர்ச்சிகளை முறியடித்தான். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மேற்குச் சாளுக்கிய மன்னனான முதலாம் சோமேஸ்வரன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்.

சாளுக்கியப் போர்கள்

வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. வீரராஜேந்திரன் மன்னன் ஆகுமுன்பே, அப்போதைய முடிக்குரிய இளவரசனான இராஜமகேந்திரனின் தலைமையில் சாளுக்கியருடன் போரிட்டுள்ளான். இப்போரில் சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.

அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான 10 செப்டெம்பர் 1067 அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான்.

தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரராஜேந்திர_சோழன்&oldid=71669" இலிருந்து மீள்விக்கப்பட்டது