"இரண்டாம் இராசாதிராச சோழன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
குலசேகரப் பாண்டியன் சோழனின் உதவியை நாடினான். பராக்கிரம பாண்டியன் [[சிங்களவர்|சிங்களன்]] பராக்கிரம பாகுவின் உதவியை நாடினான். இவ்வாறு இந்த இரண்டு மன்னர்கள் பொருட்டு சோழர்களும் சிங்களர்களும் மோதிக் கொள்ள ஆரம்பித்தனர்.
 
தாயாதி சண்டையினில் பாண்டிய தேசத்தினை ஆண்டுக்ஆண்டு கொண்டிருந்த பராக்கிரம பாண்டியனை குலசேகரப் பாண்டியன் முற்றுகை இட்டான். பராக்கிரம பாண்டியன் சிங்கள மன்னனாகிய பராக்கிரம பாகுவின் உதவியை கோரினான். அவனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிங்களன், தனது மாதண்ட நாயகனை பெரும் படையுடன் பாண்டிய தேசத்துக்கு அனுப்பித்தான். சிங்களப் படை நுழைவதற்குள் குலசேகரன், பராக்கிரம பாண்டியனையும் அவனது உற்றத்தையும் கொன்று ஆட்சியை கைப்பிடித்தான். இதனை அறிந்த சிங்கள மாதண்டன் மதுரை நகரத்தினுள் நுழைந்து பாண்டிய படைகளை அழித்தான், பராக்கிரமனின் புதல்வனாகிய வீர பாண்டியனை ஆட்சிப் பொறுப்பில் எற்றுவித்தான்.
 
பராக்கிரம பாண்டியனின் ஆட்சியை விரும்பாத பாண்டியர்கள் அவனது மகனாகிய வீரப் பாண்டியனின் ஆட்சியை விரும்பவில்லை. அவர்கள் குலசேகர பாண்டியனையே மன்னனாக்க விரும்பினர், அவர்கள் ஒரு பெரும் படை சேர்த்து வீரப் பாண்டியனை ஆட்சியில் இருந்து அகற்றினர். இதனை உணர்ந்த சிங்கள மாத்தண்டன் உதவிப் படை கோரி சிங்களனிடம் விண்ணப்பித்தான். அதனால், சிங்கள மன்னன் ஜகத்விஜயன் என்ற தண்டனாயகனை சிங்கள மாதண்டனாயகனுக்கு துணை அனுப்பித்தான். இந்த இரண்டு வீரர்களிடம் ஈடுக் கொடுக்க முடியாத குலசேகரன் தனது அரியாசனத்தை இழக்க வேண்டி இருந்தது.
4,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2767699" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி