"ஹாத்திகும்பா கல்வெட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[File:Hatigumfa.jpg|thumb|300px|கலிங்கத்துக் காரவேல மாமன்னரின் அத்திக்கும்பா கல்வெட்டு, உதயகிரிக் குன்று]]
[[File:Kharabela inscription, Hatigumpha, Khandagiri, Bhubaneswar.jpg|thumb|உதயகிரிக் குன்றில் காரவேல மாமன்னரின் அத்திக்கும்பா கல்வெட்டு, ''"Corpus Inscriptionum Indicarum'', Volume I: Inscriptions of Asoka by [[அலெக்சாண்டர் கன்னிங்காம்]]", 1827 நூலில் வரைந்த படி]]
'''ஹாத்திகும்பா கல்வெட்டு''' அல்லது '''அத்திக்கும்பா கல்வெட்டு''' (''Hathigumpha inscription'', "யானைக்குகை" கல்வெட்டு) என்பது [[ஒரிசா]]வில் [[புவனேசுவரம்]] அருகே [[உதயகிரி, கண்டகிரி குகைகள்|உதயகிரி]]யில், அன்றைய [[கலிங்க நாடு|கலிங்க]]ப் பேரரசர் [[காரவேலன்]] என்பவரால் கிமுகி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட [[கல்வெட்டியல்|கல்வெட்டு]] ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது. பண்டைய [[பிராமி எழுத்துமுறை|பிராமி]] எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் [[குடைவரைக் கோவில்|குடைவரை]]க் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் [[தௌலி]]யில் உள்ள [[அசோகர்|அசோக]] மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.
 
இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழமையானபழைமையான கலிங்க [[பிராமி எழுத்துமுறை|பிராமி]] எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையைதொன்மையைக் கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது.<ref>[http://www.proel.org/index.php?pagina=alfabetos/dravidi Silabario Dravidi O Kalinga]</ref>
 
இந்தக் கல்வெட்டின் காலம் [[மௌரியப் பேரரசு|மௌரிய]] மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், [[காரவேலர்]] மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால், [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்த மௌரிய]] மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், [[யவனர்|யவன]] மன்னர் [[பாக்திரியாவின் முதலாம் திமெத்ரியசு|திமெத்ரியசுவுடன்]] நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது.<ref>Rapson, "Catalogue of the Indian coins of the British Museum. Andhras etc...", p XVII.</ref>
 
== பின்புலம் ==
[[உதயகிரி, கந்தகிரி குகைகள்|உதயகிரி]] குடைவரைக்கோவிலில் உள்ள அத்திக்கும்பா கல்வெட்டுதான் [[கலிங்கம்|கலிங்க]] மன்னர் [[காரவேலர்]] பற்றிய செய்திகளைத் தருகிறது. வேறு எங்கும் இந்த மன்னரைப் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தொன்மைப் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக்கோவிலின் முகப்பிலும், எஞ்சியது அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சம காலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை என்கிறார் சசிகாந்து<ref>Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Revised Edition, 2000, p 3</ref>. [[சாணக்கியர்|சாணக்கியரின்]] [[அர்த்தசாஸ்திரம்|அர்த்தசாத்திரத்தில்]] ஒரு பொது அறிவிப்புக்கு இருக்க வேண்டிய அறுவகை இலக்கணங்களான ஒழுங்கு, தொடர்பு, நிறைவு, இனிமை, மாட்சிமை, தெளிவு(அர்த்தக்கிரமம், சம்பந்தம்,பரிபூர்ணம், மதுரம், ஔதார்யம், ஸ்பஷ்டத்வம்) என்ற அனைத்துக்கும் இலக்கணமாகத் திகழ்கிறது இந்தக் கல்வெட்டு என்று போற்றுகிறார் சசிகாந்து.
 
இந்தக் கல்வெட்டை ஸ்டர்லிங் 1825ல் முதன்முதல் பார்த்துப் பதிவு செய்தார்<ref>Stirling, Asiatic Researches, XV</ref>. பின்னர் [[கிட்டோ]] கண்ணால் பார்த்து எழுதியதை [[ஜேம்ஸ் பிரின்செப்]] 1837ல் பதிப்பித்தார். பிரின்செப் இந்தக் கல்வெட்டை ஐரா என்ற மன்னனுடையது என்று தவறாக எழுதினார். பின்னர் 1871ல் [[எச். லாக்]] என்பவர் எடுத்த இந்தக் கல்வெட்டின் மாக்கட்டுப் படியை (plaster-cast) இன்றும் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர். 1877ல் [[அலெக்சாண்டர் கன்னிங்காம்|அலெக்சாண்டர் கன்னிங்காம்]] இந்தக் கல்வெட்டின் எழுத்துப்படியை (tracing) Corpus Inscriptionum Indicarum Vol. I என்ற நூலில் பதிப்பித்தார். அதைத் தொடர்ந்து 1880ல் ராஜா ராஜேந்திர லாலா மித்ரா இதன் திருத்திய வடிவத்தைப் பதிப்பித்தார் (Antiquities of Orissa, Vol. II.).
:”தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணை(கிருஷ்ணவேணி) ஆற்றை அடைந்ததும் [[மூசிகர்|மூசிக]] நகரத்தைக் கலங்கடித்தார்.”<ref>எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக்கம் 86</ref>
 
இந்தக் கல்வெட்டு மேலும் காரவேலர், இந்திய-கிரேக்க [[யவனர்|யவன]] மன்னரான [[பாக்திரியாவின் முதலாம் திமெத்ரியசு|திமெத்ரியசு]] மன்னரைப் [[பாடலிபுத்திரம்|பாடலிபுரத்திற்கு]] {{convert|70|km|mi|abbr=on}} தென்கிழக்கே இருந்த [[ராசகிரி]]யிலிருந்து பின்வாங்கி [[மதுரா, உத்தரப் பிரதேசம்|மதுரா]] பகுதிக்கு விரட்டினார் என்கிறது.
 
:”பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு, ராசகிருகத்துக்கும் நெருக்கடி கொடுத்தார். இந்த வீரப்போர் பற்றிக் கேட்டு அதிர்ந்த யவன (கிரேக்க) மன்னன் டிமி(தா) தன் மனம் தளர்ந்த படையைத் தப்ப வைத்துக் கொண்டு மதுரா நகரப்பகுதிக்குப் பின்வாங்கினான்."<ref>எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக்கம் 86</ref>
 
==குறிப்பிடத் தக்க செய்திகள்==
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2616345" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி