தமிழரசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{Infobox officeholder|office=தலைவர்,
[[தமிழ்நாடு விடுதலைப்படை]]|termstart=மே 1984 (?)|termend=1 செப்டம்பர் 1987|predecessor=''பதவி உருவாக்கம்''|successor=லெனின் (எ) தெய்வசிகாமணி|birth_date=14 ஏப்ரல் 1945|birth_place=[[மதகளிர்மாணிக்கம் ஊராட்சி|மதகளிர்மாணிக்கம்]],
[[தென் ஆற்காடு மாவட்டம்]],
[[சென்னை மாகாணம்]],
[[பிரித்தானிய இந்தியா]], (தற்போது [[கடலூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]])|death_date={{death date and age|1987|09|1|1945|4|14|df=y}}|death_place=[[பொன்பரப்பி]], பிரிக்கப்படாத [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] (தற்போது [[அரியலூர் மாவட்டம்]]), [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[தமிழர்]]|parents=பாதுசாம்பாள் (தாய்)
துரைசாமி (தந்தை)|mainwidth=26em|relations=அன்பழகி (தங்கை)|name=து. தமிழரசன்|image name=}}
{{Infobox officeholder|office=தலைவர்,
[[தமிழ்நாடு விடுதலைப்படை]]|termstart=மே 1984 (?)|termend=1 செப்டம்பர் 1987|predecessor=''பதவி உருவாக்கம்''|successor=லெனின் (எ) தெய்வசிகாமணி|birth_date=14 ஏப்ரல் 1945|birth_place=[[மதகளிர்மாணிக்கம் ஊராட்சி|மதகளிர்மாணிக்கம்]],
[[தென் ஆற்காடு மாவட்டம்]],
[[சென்னை மாகாணம்]],
[[பிரித்தானிய இந்தியா]], (தற்போது [[கடலூர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]])|death_date={{death date and age|1987|09|1|1945|4|14|df=y}}|death_place=[[பொன்பரப்பி]], பிரிக்கப்படாத [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]] (தற்போது [[அரியலூர் மாவட்டம்]]), [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|nationality=[[தமிழர்]]|parents=பாதுசாம்பாள் (தாய்)
துரைசாமி (தந்தை)|mainwidth=26em|relations=அன்பழகி (தங்கை)|name=து. தமிழரசன்|image name=}}
[[File:தலைவர்கள்.svg|thumb|தமிழக தலைவர்கள் வரிசையில் வரையப்பட்டுள்ள தமிழரசனின் படம் (முதலில் இருப்பவர்)]]
[[File:தலைவர்கள்.svg|thumb|தமிழக தலைவர்கள் வரிசையில் வரையப்பட்டுள்ள தமிழரசனின் படம் (முதலில் இருப்பவர்)]]
'''தமிழரசன்''' (14 ஏப்ரல் 1945 – 1 செப்டம்பர் 1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக [[தமிழ்நாடு விடுதலைப்படை]]யை நிறுவியவர். [[இந்தியா|இந்தியாவிலிருந்து]] [[தமிழ்நாடு]] அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினிசம்|லெனினிய]] சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.
'''தமிழரசன் படையாட்சி''' (14 ஏப்ரல் 1945 – 1 செப்டம்பர் 1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக [[தமிழ்நாடு விடுதலைப்படை]]யை நிறுவியவர். [[இந்தியா|இந்தியாவிலிருந்து]] [[தமிழ்நாடு]] அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை [[மார்க்சியம்|மார்க்சிய]], [[லெனினிசம்|லெனினிய]] சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

== குடும்பம் ==
== குடும்பம் ==

10:29, 17 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்

து. தமிழரசன்
தலைவர்,
தமிழ்நாடு விடுதலைப்படை
பதவியில்
மே 1984 (?) – 1 செப்டம்பர் 1987
முன்னையவர்பதவி உருவாக்கம்
பின்னவர்லெனின் (எ) தெய்வசிகாமணி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 ஏப்ரல் 1945
மதகளிர்மாணிக்கம்,
தென் ஆற்காடு மாவட்டம்,
சென்னை மாகாணம்,
பிரித்தானிய இந்தியா, (தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு1 செப்டம்பர் 1987(1987-09-01) (அகவை 42)
பொன்பரப்பி, பிரிக்கப்படாத திருச்சிராப்பள்ளி மாவட்டம் (தற்போது அரியலூர் மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா
தேசியம்தமிழர்
உறவுகள்அன்பழகி (தங்கை)
பெற்றோர்பாதுசாம்பாள் (தாய்)
துரைசாமி (தந்தை)
தமிழக தலைவர்கள் வரிசையில் வரையப்பட்டுள்ள தமிழரசனின் படம் (முதலில் இருப்பவர்)

தமிழரசன் படையாட்சி (14 ஏப்ரல் 1945 – 1 செப்டம்பர் 1987) தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் பொதுச் செயலர் பொறுப்பிலிருந்தவர். அக்கட்சியின் ஆயுதப்பிரிவாக தமிழ்நாடு விடுதலைப்படையை நிறுவியவர். இந்தியாவிலிருந்து தமிழ்நாடு அரசியல் விடுதலை பெற வேண்டும் எனும் கருத்தியலை மார்க்சிய, லெனினிய சிந்தனையோட்டத்தின் வழியே முன்வைத்தவர் என்ற வகையிலும் அதற்கான போராட்டத்தில் நடைமுறைத் தீவிரம் மிக்கவர் என்ற வகையிலும் தமிழ்நாட்டு வரலாற்றில் இவர் குறிப்பிடத்தகுந்தவராவார்.

குடும்பம்

தமிழ்நாட்டின் இன்றைய கடலூர் மாவட்டத்தில் உள்ள மதகளிர்மாணிக்கம் என்ற சிற்றூரைச் சேர்ந்த பாதுசாம்பாள் - துரைசாமி இணையருக்கு மகனாக 14 ஏப்ரல் 1945 அன்று தமிழரசன் பிறந்தார்.[1] இவருக்கு அன்பழகி என்ற தங்கை உள்ளார்.[2]

பாதுசாம்பாள், 31 அக்டோபர் 2020 அன்று தன் 100-ஆம் அகவையில் காலமானார்.[3]

நக்சல் இயக்கத்தில்

தமிழரசன் கோயம்புத்தூர் மாநகரில் பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள மாநிலம் நக்சல்பாரி கிராமத்தில் 1967-ல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து "கல்லூரியைவிட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்குச் செல்வோம் "என்று சாரு மசூம்தார் வேண்டுகோளை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் எனப்படும் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) (இ.க.க.(மா.லெ); CPI - ML) இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். தமிழரசனும் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இயக்கத்தில் இணைந்தார்.[4] சாருமஜும்தாரின் கோட்பாட்டின்படி மக்களை வாட்டும் பணக்காரர்களையும், கந்துவட்டிக்காரர்களையும் "அழித்தொழிப்பு" செய்துவந்தார்.

கைது

இந்திய நெருக்கடி நிலை காலகட்டத்தில் உள் நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் (மிசா) அரசியல் கைதியான தமிழரசன், திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த புலவர் கலியபெருமாள் போன்றோருடன் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க முயன்று அனைவரும் பிடிப்பட்டனர்.[5] நெருக்கடி நிலை நீங்கிய பின் விடுதலை அடைந்தார்.

கருத்து வேறுபாடுகள்

தேசிய இனவிடுதலைக் குறித்து இ.க.க.(மா.லெ) யுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழரசனும் அவரது தோழர்களும் தனியாக பிரிந்து தமிழ்த் தேசியத்துக்காகப் புது இயக்கம் கண்டனர். பொறியியலில் பட்டயதாரியான சுந்தரம் (எ) அன்பழகன், இவ்வியக்கத்துக்கு ஆயுதப் போராட்டத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தார்.[6]

மறைவு

தமிழகத்துக்குக் காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கருநாடகத்தின் அணைகளைத் தகர்க்கவும் வேறு சில திட்டங்களுக்காகவும் தேவைப்பட்ட பணத்திற்கு அவர் படித்த பொன்பரப்பி ஊரில் உள்ள வங்கியில் கொள்ளையிட தமிழரசன் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் கொண்ட குழுவினர் திட்டமிட்டனர். இச்செய்தி தமிழக உளவுப்பிரிவினருக்கு கசிந்தது. பின் 1 செப்டம்பர் 1987 அன்று தமிழரசனும் அவரது தோழர்களும் வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கைப்பற்றியதாக கூறி திட்டமிட்டு காவல் துறையினர் சாதாரண உடையில் பொதுமக்களுடன் கலந்து தமிழரசன் குழுவினரைச் சுற்றிவளைத்து அடித்துக் கொன்றனர்.[7] கையில் ஏ.கே.47 துப்பாக்கி வைத்திருந்த நிலையில் தமிழரசனும் அவரின் தோழர்களும் பொது மக்கள் தான் தங்களை அடிக்கிறார்கள் என நினைத்ததால் தங்களை அடித்தவர்களைச் சுட அதைப் பயன்படுத்தாமல் தமிழரசனும் பிற நண்பர்களும் இறந்தனர்.[8]

எழுதிய நூல்கள்

• சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும் (1985)

பரவலர் பண்பாட்டில்

கீழ்க்காணும் திரைப்படக் கதைமாந்தர்கள், தமிழரசனின் தழுவல்கள் ஆவர்.

ஆண்டு திரைப்படம் கதைமாந்தர் நடிகர்
1997 கடவுள் தமிழரசன் அருண் பாண்டியன்
2000 புரட்சிக்காரன் தமிழ்மணி (எ) இராமானுஜம் வேலு பிரபாகரன்
2023 விடுதலை பகுதி 1 டி.ஏ. (T.A.) சுந்தரேஸ்வரன் CVC[9]

மேற்கோள்கள்

1. Meyyarivan, Mayan (2020-06-13). "தோழர் தமிழரசன் கடந்து சென்ற பாதை". Tamilwing.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-22.
2. பதூசு அம்மையாருக்கு வீரவணக்கம், சிந்தனையாளன் (இதழ்), 2020 நவம்பர், பக்கம். 6
3. Maran, Mathivanan (2020-11-01). "தமிழ்நாடு விடுதலைப் படை தலைவர் தமிழரசனின் தாயார் மறைவு: வேல்முருகன், திருமாவளவன் இரங்கல்" (in ta). https://tamil.oneindia.com/news/chennai/tnla-president-thamizharasan-s-mother-passes-away-401914.html.
4. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.71
5. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.104
6. "சும்மா இருக்குமா சுந்தரம் படை?- உஷாராகும் போலீஸ்". Hindu Tamil Thisai. 2017-06-20. பார்க்கப்பட்ட நாள் 2023-05-26.
7. "வீரப்பனுடன் கூட்டு சேர்ந்த இந்த தமிழ்த் தீவிரவாதிகள் யார்?". செய்திக்கட்டுரை. ஒன் இந்தியா. 23 ஆகத்து 2000. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2017.
8. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.131
9. " வெற்றி மாறனோட அரசியலே வேற " - Viduthalai Makkal Padai Round Table | Vetrimaaran | Soori, பார்க்கப்பட்ட நாள் 2023-05-09

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழரசன்&oldid=3891736" இலிருந்து மீள்விக்கப்பட்டது