கடவுள் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடவுள்
இயக்கம்வேலு பிரபாகரன்
தயாரிப்புஎச். அன்ராஜ்
கதைவேலு பிரபாகரன்
இசைஇளையராஜா
நடிப்புவேலு பிரபாகரன்
அருண் பாண்டியன்
மணிவண்ணன்
மன்சூர் அலி கான்
ரோஜா
ஒளிப்பதிவுவேலு பிரபாகரன்
படத்தொகுப்புநந்தமுரி ஹரிபாபு
வெளியீடு05 திசம்பர் 1997
ஓட்டம்130
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கடவுள் (Kadavul) வேலு பிரபாகரன் இயக்கத்தில், எச். அன்ராஜ் தயாரிப்பில், வேலு பிரபாகரன், அருண் பாண்டியன், மணிவன்னன், மன்சூர் அலி கான், ரோஜா ஆகியோரின் நடிப்பில் வெளியான, நாத்திகம் குறித்த தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படம் இளையராஜாவின் இசையில், வேலு பிரபாகரனின் ஒளிப்பதிவில், நந்தமுரி ஹரிபாபுவின் படத்தொகுப்பில் 05 திசம்பர் 1997இல் வெளியானது.[1][2][3][4]

நடிப்பு[தொகு]

 • வேலு பிரபாகரன்- இராஜபாண்டியாக
 • மணிவன்னன்- கடவுளாக
 • அருண் பாண்டியன்- தமிழரசனாக
 • மன்சூர் அலி கான்-சண்முகமாக
 • ரோஜா- பார்வதியாக
 • இராகுல்- முத்துவாக
 • நந்தினி- தேன்மொழியாக
 • வி. கோபாலகிருஷணன்- பார்வதியின் தந்தையாக
 • கரிகாலன்- வேலுசாமியாக
 • நாக கண்ணன்
 • ரூபாஸ்ரீ-செண்பகமாக
 • ஜெ. இலிதா- தேன்மொழியின் அன்னையாக
 • சகீலா
 • வின்சென்ட் ராய்
 • மீசை முருகேசன்- நாயுடுவாக
 • பாண்டு

கதை[தொகு]

கடவுளை நம்பும் ஒரு இளம்பெண் பார்வதி. பார்வதியின் தந்தை ஒரு ஒரு கோயிலின் அர்ச்சகராக இருப்பவர். இரு சாதியினரிடையே கோயில் திருவிழாவில் ஏற்படும் முரண்பாடுகளினால், நீதிமன்ற ஆணையின்படி கோயில் இழுத்து மூடப்படப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்படுகின்றது. முத்துவாவும் தேன்மொழியும் இருவேறு சாதியைச்சார்ந்த காதலர்கள். முத்து, தேன்மொழியின் காதல் தேன்மொழியின் மாமாவிற்குத் தெரிந்துவிடுகின்றது; அவர் முத்துவை மணம் செய்துகொள்ள தேன்மொழியை வற்புறுத்துகின்றார்.

சண்முகமாக (மன்சூர் அலி கான்) ஊழல் செய்யும் ஒரு சட்டமன்ற உறுப்பினர், அவர் ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு தமிழரன் (அருண்பாண்டியன்) மீது பழியைச்சுமத்துகிறார். தமிழரன் அநீதிக்கெதிராக புரட்சியை முன்னெடுக்கும் ஒரு களப்போராளி.

தமிழரசன் அவரைக்கொல்ல முயற்சிக்கிறார், ஆனால் தோல்வி அடைந்து இறுதியில் சண்முகத்தின் பணத்தை திருடி விடுகின்கிறார். இந்தச்செயலில் தமிழரசன் காயமடைந்துவிடுகின்றார் அவரை, பாலியல் தொழிலாளர் செண்பகம் (ரூபஸ்ரீ) கவனித்துக் கொள்கிறார்.இப்படம் ஒரே நேரத்தில் மூன்று தடத்தில் மாறி, மாறிச் செல்கின்றது. இராஜபாண்டி (வேலு பிரபாகரன்), ஒரு நாத்திகர், கடவுளின் மறுப்புப்பரப்புரையைச் செய்கின்றார். ஒரு நாள், அவளது மாமா கே.சண்முகத்திடமிருந்து பார்வதியைக் காப்பாற்றுவதுடன், அவரையே (பார்வதியை) திருமணம் செய்துகொள்கிறார். விரைவில், இராஜபாண்டி பக்தர்களால் தாக்கப்படுகிறார். இச்சூழலில் கோபத்தில், இராஜபாண்டி கடவுளிடன் ஒரு மனிதனாக மாறி, மனிதர்களைப் புரிந்துகொள்ள இயலுமா என கடவுளிடன் சவால் விடுகின்றார், கடவுள் (மனிதனை) மனிதனாகத் தோன்றுகிறார். இறுதியில் என்ன நிகழ்ந்த்து என்பதே கதை.

இசை[தொகு]

இத்திரைப்படத்தில் ஆறு பாடல்களுக்கான இசை, பின்னணி இசை ஆகியப்பணிகளை இளையராஜா மேற்கொண்டுள்ளார், இப்படத்திற்கான பாடல்களை வாலியும், புலமைப்பித்தனும் எழுதியுள்ளனர்.[5][6][7]

சான்றுகள்[தொகு]

 1. "Kadavul (1997) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2013-04-21.
 2. "A-Z (III) - INDOlink". indolink.com. பார்த்த நாள் 2013-04-21.
 3. S. R. Ashok Kumar (2009-06-26). "Grill Mill". hindu.com. பார்த்த நாள் 2013-04-21.
 4. "‘Manaivikku nadanda thirumanam’". behindwoods.com (2007-07-19). பார்த்த நாள் 2013-04-21.
 5. "Kadavul — Illayaraja". thiraipaadal.com. பார்த்த நாள் 2013-04-20.
 6. "Kadavul Songs". raaga.com. பார்த்த நாள் 2013-04-20.
 7. "Download Kadavul by Various Artists on Nokia Music". music.ovi.com. பார்த்த நாள் 2013-04-20.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுள்_(திரைப்படம்)&oldid=2704118" இருந்து மீள்விக்கப்பட்டது