உள்ளடக்கத்துக்குச் செல்

வேலு பிரபாகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேலு பிரபாகரன்
Velu Prabakaran
பிறப்புவேலு பிரபாகரன்
(1957-05-06)6 மே 1957
இறப்பு18 சூலை 2025(2025-07-18) (அகவை 68)
இருப்பிடம்சென்னை, இந்தியா
பணிஇயக்குநர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1984–2025
வாழ்க்கைத்
துணை
செர்லி தாசு

வேலு பிரபாகரன் (6 மே 1957 – 18 சூலை 2025, Velu Prabakaran) என்பவர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், நடிகர் என பல பரிமானங்களைக் கொண்டவராவார். சர்ச்சைக்குரிய கருப்பொருள்களுக்காக அறியப்படுகிறார், பெரும்பாலும் நாத்திகம், புரட்சிகரச் செய்திகளை இவரது படங்களில் எடுத்துக்காட்டுகிறார்.[1].

வாழ்க்கைக் குறிப்புகள்

[தொகு]

வேலு பிரபாகரன் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1989-ஆம் ஆண்டு திகில் திரைப்படமான நாளை மனிதன் திரைப்படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக 1990 ஆம் ஆண்டு அதிசய மனிதன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் ஆர். கே. செல்வமணியின் தயாரிப்பில் அசுரன், ராஜாளி ஆகிய இரண்டு அதிரடித் திரைப்படங்களை இயக்கினார். இரண்டுமே தோல்விப் படங்களாக அமைந்தன[2]. பின்னர் அதிரடி படங்களில் இவர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். பெரும்பாலும் புரட்சியாளராக நடித்தார். கடவுள் (1997), சிவன் (1999), புரட்சிக்காரன் (2000) ஆகிய திரைப்படங்களை உருவாக்கினார். 2000 ஆம் ஆண்டில் தீபாவளி என்ற திரைப்படத்திற்கான முன் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிய இவர், நடிகர் கமலகாசனை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினார். இருப்பினும், நடிகரின் நிராகரிப்பால் அந்தப் படத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டது [3]. 2004 ஆம் ஆண்டில் வேலு பிரபாகரன் காதல் அரங்கம் என்ற திரைப்படத்தைத் தயாரிக்கும் பணியைத் தொடங்கினார். இந்தத் திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதினார்.[4] புதுமுகங்கள் பிரீத்தி ரங்காயணி, செர்லி தாசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் சமூகத்தில் காமத்தின் மீதான தவறான எண்ணங்களை அம்பலப்படுத்தும் என்பதை முன்னிறுத்தினார். ஆனால் பின்னர் அவர் படத்தின் இயக்குநர் என்ற தகுதியை தனது சகோதரர் வேலு ராசாவுக்கு வழங்கினார். மேலும், இப்படம் நடைமுறையில் உள்ள சாதி முறையையும் எடுத்துக்காட்டி பாலுணர்வு தொடர்பான கருத்துகளையும் ஆராய்கிறது. எனவே தணிக்கை செய்யும் காட்சிகள் காரணமாக திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழை வழங்கவில்லை. இதனால் 2004 திசம்பரில் தணிக்கை வாரியத்துடன் போர் நடக்கத் தொடங்கியது[5].

இந்தப் படம் சமூக அக்கறை தொடர்பான பிரச்சினைகளைத் தொட்டது என்றும் இளைஞர்களிடையே பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது என்றும் 2006 திசம்பரில் வேலு பிரபாகரன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஓர் உணர்ச்சிபூர்வமானதாகக் கூறினார்[6]. படக்குழு இறுதியாக 2009 ஆம் ஆண்டில் சில காட்சிகளைக் குறைக்கவும், சில உரையாடல்களை முடக்கவும் ஒப்புக்கொண்டு தணிக்கைகளுடன் திரைப்படத்தை வெளிட சமரசம் செய்து கொண்டது. காதல் அரங்கம் என்று வைக்கப்பட்டிருந்த படத்தின் தலைப்பு காதல் கதை என்று மாற்றப்பட்டது[7]. திரைப்படம் வெளியிடுவது தொடர்பான கருத்துகளையும் சிரமங்களையும் இத்திரைப்படத்தின் நீட்டிப்பு காட்சிகளாக வேலு பிரபாகரன் இப்படத்தில் சேர்த்தார். துணிச்சலான இயக்குநர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் அவர் நடித்துள்ள கதைப் பாத்திரம் தன்னுடைய சுயசரிதை என்று குறிப்பிடுகிறார்.[8] இந்தப் படம் விமர்சகர்களிடமிருந்து மிகவும் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படத்திற்கென்று தனியாக திரைக்கதை ஏதும் இல்லை என்று ஒரு விமர்சகர் விமர்சித்தார். பாலியல் காட்சிகளுடன் ஒன்றிணைந்த நிகழ்வுகளின் ஒரு தொகுப்பு என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்"[9]. இத்திரைப்படம் பாலியல் திரைப்படம் என்ற ஒரு தகுதியைப் பெற்றாலும்கூட பார்ப்பதற்கு மிகவும் சலிப்பைத் தருகிறது. படத்தை பார்க்கவே முடியவில்லை என்று மற்றொரு விமர்சகர் குறிப்பிட்டார்[10].

2009 ஆம் ஆண்டில் சே.எசு.கே திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக தேவதாசி என்ற திரைப்படத்தை இயக்க சம்மதித்து கையெழுத்திட்டார். இப்படம் 16 16 ஆம் நூற்றாண்டின் காதல் கதையைச் சொல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. திட்டமிட்டபடி படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இவர் முகமூடிக் கூத்து என்ற பெயரில் மற்றொரு திரைப்பட திட்டத்தையும் பின்னர் முக்கிய வேடமேற்று நடிக்கும் கலைஞனின் காதல் என்ற மற்றொரு திரைப்படத் திட்டத்தையும் தொடங்கினார்[11]. படத்திட்டங்கள் தொடங்குவதில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்ததால் 2017 ஆம் ஆண்டு ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற திரைப்படத்தின் முன்னோடிக் காட்சி விளம்பரம் வெளியிடப்படும்வரை இவர் பல ஆண்டுகளாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

பிரபாகரன் ஒரு காலத்தில் நடிகையும் இயக்குநருமாக இருந்த பி. ஜெயதேவியை மணந்தார். பின்னர் தான் இயக்கிய காதல் கதை (2009) திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்த செர்லி தாசை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தன் அறுபது வயதில் 2017 ஆம் ஆண்டு சூன் மாதம் வேலுப்பிரபாகரன் அறிவித்தார்[12][13].

நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரபாகரன், தனது 68வது வயதில் 2025 சூலை 18 அன்று அதிகாலையில் இறந்தார்.[14]

திரைப்பட வரலாறு

[தொகு]
ஆண்டு தலைப்பு பங்கேற்பு குறிப்புகள்
இயக்குநர் கதாசிரியர் ஒளிப்பதிவாளர் நடிகர் கதைப் பாத்திரம்
1989 நாளை மனிதன் Green tickY Green tickY Green tickY
1989 சரியான ஜோடி Green tickY Green tickY Green tickY
1989 பிக்பாக்கெட் Green tickY
1990 அதிசய மனிதன் Green tickY
1991 உருவம் Green tickY
1993 உத்தம ராசா Green tickY
1995 புதிய ஆட்சி Green tickY Green tickY Green tickY Green tickY தமிழ்மணி
1995 அசுரன் Green tickY Green tickY
1996 ராசாளி Green tickY Green tickY
1997 கடவுள் (திரைப்படம்) Green tickY Green tickY Green tickY ராஜபாண்டி தமிழக அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது
1999 சிவன் Green tickY Green tickY Green tickY
2000 புரட்சிக்காரன் Green tickY Green tickY Green tickY தமிழ்மணி
2007 நாளைய பொழுதும் உன்னோடு Green tickY
2009 காதல் கதை Green tickY Green tickY Green tickY இவரே
2011 பதினாறு (திரைப்படம்) Green tickY
2017 ஒரு இயக்குனரின் காதல் டைரி Green tickY Green tickY Green tickY
2019 காங்சு ஆப் மெட்ராஸ் Green tickY
2021 ஜாங்கோ Green tickY
2021 ஆன்டி இந்தியன் Green tickY ஆஜியார்
2022 காடவர் Green tickY
2023 பீட்சா 3 Green tickY
2023 ரெய்டு Green tickY
2024 வெப்பன் Green tickY ஓம்கார்
2024 அப்பு VI ஸ்டான்ர்ட் Green tickY
2025 கஜானா Green tickY

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kumar, S.R.Ashok. "Film runs into trouble with Censor Board". The Hindu (india). Retrieved 4 January 2014.
  2. "reference". Indolink.com. Archived from the original on 27 செப்டெம்பர் 2013. Retrieved 4 சனவரி 2014.
  3. https://web.archive.org/web/20030214172201/http://cinematoday2.itgo.com/33Hot%20News%20Just%20for%20U3.htm
  4. "Making a mark". தி இந்து. 2004-05-24. Archived from the original on 30 October 2004. Retrieved 4 January 2014.
  5. "Velu Prabhakaran's clash with censors". IndiaGlitz. Archived from the original on 27 திசம்பர் 2013. Retrieved 4 January 2014.
  6. "Censors' 'No' to 'Kadal Arangam". Nowrunning.com. Archived from the original on 27 திசம்பர் 2013. Retrieved 4 January 2014.
  7. "Velu Prabakaran's bold film gets censor nod!". Sify. Retrieved 4 January 2014.
  8. "Grill Mill". தி இந்து. 2009-06-26. Archived from the original on 28 December 2013. Retrieved 4 January 2014.
  9. "KADHAL KADHAI MOVIE REVIEW". Behindwoods. Retrieved 4 January 2014.
  10. "Kadhal Kadhai — Perverse, uninteresting and badly made". IndiaGlitz. Archived from the original on 25 சூன் 2009. Retrieved 4 January 2014.
  11. "Velu Prabakaran's 'Mugamoodi Koothu'". IndiaGlitz. Archived from the original on 14 செப்டெம்பர் 2009. Retrieved 4 January 2014.
  12. "60-year-old director Velu Prabhakaran marries actress Shirley Das". 4 June 2017.
  13. "Tamil director Velu Prabhakaran marries his Kadhal Kadhai heroine Shirley Das". India Today.
  14. Tamil filmmaker-cinematographer Velu Prabhakaran passes away

புற இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலு_பிரபாகரன்&oldid=4364113" இலிருந்து மீள்விக்கப்பட்டது