உள்ளடக்கத்துக்குச் செல்

சின்கான்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு ஜப்பானிய இரும்புவழியின் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு, அக்டோபர் 2012
மேற்கு ஜப்பானிய இரும்புவழியின் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு, அக்டோபர் 2008

சின்கான்சென் (சப்பானிய மொழி: 新幹線, புதிய பெருந்தடம்) என்பது ஜப்பானிய இரும்புப்பாதை குழும நிறுவனங்களால் இயக்கப்படும், ஜப்பானின் அதிவேக இரும்புவழித்திட பிணையம் (network) ஆகும். 1964-ஆம் ஆண்டு டோகாய்டோ சின்கான்சென் (515.4 கி.மீ.) தொடங்கியது முதல்,[1] இதன் பிணையம் விரிவாக்கப்பட்டு, தற்போது 2,615.7 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 240–320 கி.மீ. வேகமும் கொண்ட சின்கான்சென் தடங்களையும்; 283.5 கி.மீ. நீளமும், அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகமும் கொண்ட சிறு-சின்கான்சென் தடங்களையும் கொண்டுள்ளது. [2] தற்போது இப்பிணையம் ஓன்சூ மற்றும் கியூஷூ தீவுகளில் உள்ள முக்கிய நகரங்களை, வட தீவான ஹொக்கைடோவில் புதிதாக கட்டப்பட்ட விரிவாக்கத்துடன் இணைக்கிறது. இந்த பிணையங்களில் ஓடும் அதிவேக தொடருந்துகள்தான், தோட்டா தொடருந்து (ஆங்கிலம்: bullet train, புல்லெட் இரயில்) எனும் அடைப்பெயரால் அழைக்கபடுகிறது.

வரலாறு 

[தொகு]
1964 அக்டோபரின், முந்தைய - தற்போதுள்ள டோகாய்டோ சின்கான்சென் தடமும் (செந்நிறத்தில்) வழக்கமான தடங்களும் கொண்ட  ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின்  ஆங்கில வரைபடம்.

உலகில் அதிவேகப் பயணத்திற்கான தனிப்பயனுள்ள இரும்புவழித் தடத்தை நிறுவிய முதல் நாடு ஜப்பான் ஆகும். 

முதற்கட்ட கருத்துருக்கள் 

[தொகு]

சின்கான்சென்  எனும் பெயர் முதன்முதலில் 1940-ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. 

கட்டுமானம் 

[தொகு]

அரசாங்க அனுமதி 1958, டிசம்பர்-ல் பெறப்பட்டு, தோக்கியோ-ஒசாக்கா இடையேயான முதற்கட்ட டோகாய்டோ சின்கான்சென்னின் கட்டுமானம் 1959, ஏப்ரல்லில் தொடங்கியது. சின்கான்சென் கட்டுவதற்காக கணிக்கப்பட்ட உத்தேச செலவு சுமார் ¥200 பில்லியன்  ஆகும். இத்தேவை கடன், இரும்புவழிப் பத்திரங்கள் மற்றும் குறைந்த-வட்டிக் கடனாக உலக வங்கியிடம் $80 மில்லியன் மூலம் பெறப்பட்டது. முதற்கட்ட யூகிப்புகளை குறைத்து மதிப்பிடவே, செலவு இரட்டிப்பான ¥400 பில்லியனாக உயர்ந்தது. 1963-ல் இதானால் ஆனா நிதிப் பற்றாக்குறைக்கு பொறுப்பேற்று சோகோ பதவிவிலகினார்.[3]

முதற்கட்ட வெற்றி 

[தொகு]
1964 ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின்   பயணிகள் கால அட்டவணை 1, புதிய டோகாய்டோ தடத்தின் சின்கான்சென் சேவைகளை காட்டுகிறது

முதல் தோக்கியோ ஒலிம்பிக்குக்காக, 1 அக்டோபர், 1964 அன்று டோகாய்டோ சின்கான்சென் சேவையை தொடங்கியது.[4] தோக்கியோ -ஒசாக்கா இடையே வழக்கமான விரைவுச் சேவை ஆறு  மணிநேரம் 40 நிமிடங்கள் ஆனது, அனால் சின்கான்சென் இப்பயணத்தை வெறும் 4 மணிநேரத்தில் முடித்தது. இது இவ்விரு பெருநகரில் உள்ள மக்களின் வணிகம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இச்சேவை மாபெரும் வெற்றி அடைந்தது. 1992-ல் ஒவ்வொரு மார்க்கத்திலும், மணிக்கு 23,000 பயணிகளை சராசரியாகக் கொண்டு, டோகாய்டோ சின்கான்சென் உலகின் பரபரப்பான இரும்புத்தடம் ஆனது.[5]

பிணைய விரிவாக்கம்

[தொகு]

டோகாய்டோ சின்கான்சென்னின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, ஒக்காயாமா, ஹிரோஷிமா மற்றும் புக்குவோக்கா (சான்யோ சின்கான்சென்) இணைக்கும் வகையில் மேற்கில் விரிவாக்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, 1975-ல் இது செய்து முடிக்கப்பட்டது. இத்திட்டத்தை தொடருந்து டோஹோகூ சின்கான்சென் மற்றும் ஜோஎட்சு சின்கான்சென் என்று இரு புதிய தடங்கள் கட்டப்பட்டது. மேலும், 1970களின் முடிவில் பல திட்டங்கள்ஜப்பானிய தேசிய இரும்புவழித்துறையின் (JNR) கடன் பாக்கிகளால், தாமதிக்கப் பட்டன. இந்த பிரச்னை 1987-ன் தனியார்மயமாக்கும் கொள்கையால் முடிவு பெற்றது. 

வழித் திட்டமிடல் 

[தொகு]

சின்கான்சென்னின் வழித்தடம், மற்ற வழக்கமான இரும்புத்தடத்தில் இருந்து தனியாக அமைக்கப்பட்டது (வழக்கமான இரும்புத்தடத்தில் ஓடும் சிறு-சின்கான்சென்னை தவிர்த்து). இதனால், வேகம் குறைவான தொடருந்துகளால் பாதிப்படையாமல், நேரம் தவறாமையை பெற்றது. இந்த வழித்தடம் சமமட்டக் கடவுகள் இல்லாமல் அமைக்கப்பட்டது. இவை சுரங்கப்பாதைகள்  மற்றும் 4000மீட்டருக்குக் குறைவான வளைவு ஆரம் கொண்ட ஏதண்டங்களை (டோகாய்டோ சின்கான்சென்னுக்கு 2500மீ.) உபயோகித்து தடைகளை ஊடுருவியும் தாண்டியும் செல்லுகின்றன.[6]

தடம் 

[தொகு]
சின்கான்சென்னின் செந்தர இரும்புப்பாதை, அதிர்வுகளை குறைக்க உருக்கியிணைக்கப்பட்டது 

1067மி.மீ. (3 அடி 6 அங்குலம்) பழைய தடங்களின் குறுகிய இரும்புப்பதைக்கு பதில், 1435மி.மீ. (4 அடி 8 1⁄2 அங்குலம்) கொண்ட செந்தர இரும்புப்பாதையை சின்கான்சென் பயன்படுத்துகிறது. தொடர்ச்சியான உருக்கியிணைக்கப்பட்ட இரும்புப்பாதை மற்றும் நகரும் ஆப்புக் கடவு புள்ளிகள் பொருத்தப்பட்டு, இரும்புத்தட நிலைமாற்றிகள் மற்றும் கடவுகளின் இடைவெளிகள் நிரப்பப்பட்டன. 

குற்றியுள்ள மற்றும் குற்றியில்லா தடங்கள் என இரண்டும் பயன்பாட்டில் உள்ளன. குற்றியில்லாத் தடங்கள் சுரங்கப்பாதைகளிலும் ஏதண்டங்களிலும் உபயோகிக்கப்படுகிறது.

சமிக்ஞை அமைப்பு 

[தொகு]

சின்காசென் தானியங்கி தொடருந்து கட்டுப்பாட்டுக்கருவியை (Automatic Train Control) கொண்டு பாதையின் ஓரத்தில் உள்ள சமிக்ஞைகளின் தேவையற்றதாக ஆக்கியது. இது முழுமையான தானியங்கி தொடருந்து பாதுகாப்பு (Automatic Train Protection) அமைப்பை உபயோகிக்கிறது.[3] 

மின்சார அமைப்புகள் 

[தொகு]

சின்கான்சென், அதன் மேலுள்ள 25கி.வோ. மாறுமின்னோட்ட (சிறு-சின்கான்சென்னில் 20கி.வோ. மாறுமின்னோட்டம்) மின்னாற்றல் மூலத்தை உபயோகிக்கின்றன. இந்த ஆற்றல் தொடருந்தின் சக்கர அச்சுக்கு பகிரபடுகிறது.[3] டோகாய்டோ சின்கான்சென்னின் ஆற்றல்வழங்கியின் திறன் 60 ஹெர்ட்ஸ் ஆகும்.

தொடருந்துகள் 

[தொகு]

சின்கான்சென் தொடருந்துகள், வேகமான வேகமுடுக்கம், ஒடுக்கம் மற்றும் குறைவான எடையால் குறைவான சேதத்தை தடத்திற்கு அளிக்கும், தன்னுந்து பெட்டிகளை கொண்டிருக்கும்.  அதிவேகத்தில் சுரங்கப்பாதைக்குள் நுழைகையில், நிலையான காற்றழுத்தத்தை உறுதிசெய்ய, பெட்டிகள் காற்றுப்புகா வண்ணம் தயாரிக்கப்டுகின்றன.

பயணியின் பார்வையில் சின்கான்சென் பெட்டிகள்

நேரம் தவறாமை 

[தொகு]

சின்கான்சென் பல காரணிகளால் மிகவும் நம்பகமானது, ஏனெனில் இது முழுவதுமாக பொறுமையான போக்குவரத்துகளில் இருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளது. 2014-ல், மத்திய ஜப்பானிய இரும்புவழித்துறையின் அறிக்கையின்படி சின்கான்சென்னின் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணையைவிட சராசரியான தாமத நேரம் 54 நொடிகள். இது இயற்கை பேரிடர் போன்று கட்டுபடுத்த முடியாத காரணங்களையும் உள்ளடக்கியது.[7] 1997-ன் பதிவுகளின்படி இது 18 நொடிகளாக இருந்தது.

இழுவை 

[தொகு]

ஆரம்பம் முதலே சின்கான்சென் மின்தன்னுந்து பெட்டி வடிவமைப்பை பயன்படுத்தின. 0 வரிசை சின்கான்சென்னின் அனைத்து சக்கர அச்சுக்களுக்கும் ஆற்றல் செலுத்தப்படும். பெரும்பாலான சக்கர அச்சுகள் ஆற்றல் பெறுவது, அதிக வேகமுடுக்கதிற்கு வித்திட்டது. இதனால் சின்கான்சென்னை அடிக்கடி நிறுத்துவதால், அவ்வளவாக நேரம் விரயமாவதில்லை. 

பாதுகாப்புச் சாதனை 

[தொகு]

50 வருடங்களுக்கும் மேலான சின்கான்சென்னின் வரலாற்றில், 10 பில்லியன் பயணிகளுக்கு மேல் சுமக்கையிலும், அடிக்கடி பூகம்பங்களும் புயல்களும் தாக்கியபோதும், இதுவரை எந்த பயணியும் தடம்புரள்வதாலோ அல்லது மொதல்களாலோ இறந்ததில்லை.[8] ஒரு இறப்பும், பலரின் காயங்களும் கதவுகளை மூடும் போது நிகழ்ந்துள்ளது; இத்தகைய விபத்துகளை தடுக்க நடைமேடைகளில் ஊழியர்களை நியமித்துள்ளனர். பயணிகள், ஓடும் தொடருந்தின் முன் அல்லது அதிலிருந்து குதித்த தற்கொலைகள் நடந்துள்ளன.[9] 

இதுவரை இருமுறை சின்கான்சென் தொடருந்துகள் தடம்புரண்டுள்ளன. முதலாவது, 23 அக்டோபர் 2004 அன்று ச்சூஎட்சு நிலநடுக்கத்தின்போது  நிகழ்ந்தது. டோக்கி எண். 325 தொடருந்தின் பத்தில் எட்டு பெட்டிகள் ஜோஎட்சு சின்கான்சென்னில் தடம்புறண்டது. 154 பயணிகளும் சிறு காயங்களுடன் தப்பினர்.[10]

இரண்டாவது, 2 மார்ச் 2013 அன்று ஆகிட்டாவில் பனிப்புயலால் கோமாச்சி எண். 25 தொடருந்து ஆகிட்டா சின்கான்சென்னில் நிகழ்ந்தது. இதில் எந்த பயணியும் காயம் அடையவில்லை.[11]

பூகம்பத்தின்போது, பூகம்ப எச்சரிக்கை அமைப்பினால் தொடருந்தை மிக வேகமாக நிருத்த முடியும். ஜோஎட்சு தடம்புறளை நன்றாக ஆராய்ந்து, தடம்புறளைத் தடுக்கும் ஒரு புதிய கருவி பொருத்தப்பட்டது.

சுற்றுசூழலில் தாக்கம் 

[தொகு]

டோக்கியோ-ஒசாக்கா சின்கான்சென் தடங்களில் பயணிக்கையில், மகிழுந்துப் பயணத்தின்போது வெளியாகும் கரியமிலவாயுவின் அளவில், வெறும் 16 சதவிகிதத்தை மட்டுமே வெளியிடுகிறது. இதனால் வருடத்திற்கு 15,000 டன்கள் CO2 அளவு குறைகிறது.[5]

எதிர்கொண்ட சவால்கள் 

[தொகு]

இரைச்சல் மாசு 

[தொகு]

இரைச்சல் மாசு நேரடியாக வேகத்தை பாதிக்கும். ஆகையால், வழுக்கி மின்சேகரிப்பானின் (pantograph) மேம்பாடு, எடைகுறைவான பெட்டிகள் மற்றும் இரைச்சல் தடைகளின் (noise barriers) கட்டுவது போன்றவைகள் செயல்படுத்தப்பட்டன.

பூகம்பம் 

[தொகு]

பூகம்பத்தால் ஏற்படும் அபத்துகளால், அவசரமாக பூகம்ப உணரும் மற்றும் எச்சரிக்கும் அமைப்பை (earthquake warning system) 1992-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பெரும் பூகம்பத்தின்போது தோட்டா தொடருந்தின் தானியங்கி வேகத்தடுப்பான்களை இயக்க்கும்.

அடர்ந்த பனி 

[தொகு]

பனிக்காலத்தில் மைபாரா நிலையத்தை ஒட்டியப்பகுதியில், டோகாய்டோ சின்கான்சென் அடர்ந்த பனியை எதிர்கொள்ளும். தொடருந்துகள் வேகத்தை குறைத்தாக வேண்டும், அனால் இது கால அட்டவனையை பாதிக்கும். இதை எதிர்கொள்ள தெளிப்பான் அமைப்புகள் பின்னர் பொருத்தப்பட்டன. இதனால் அடர்ந்த பனி என்ற தடை விலகியது.

பயணியர் எண்ணிக்கை 

[தொகு]

கூட்டுப் பயனுடைய ஒப்பீடு 

[தொகு]
கூட்டுப் பயனுடைய அதிவேக தொடருந்துப் பயணிகள் (பத்து இலட்சங்களில்)[12][13]
வருடம்  சின்கான்சென்  (குறிப்புகளைப் பார்க்க ) ஆசியா (மற்றவை) ஐரோப்பா  உலகம்  சின்கான்சென் பங்கு  (%)
1964 11.0 0 0 11.0 100%
1980 1,616.3 0 0 1,616.3 100%
1985 2,390.3 0 45.7 2,436.0 98.1%
1990 3,559.1 0 129.9 3,689.0 96.5%
1995 5,018.0 0 461 5,479 91.6%
2000 6,531.7 0 1,103.5 7,635.1 85.5%
2005 8,088.3 52.2 2,014.6 10,155.1 79.6%
2010 9,651.0 965 3,177.0 15,417 70.8%
2012 10,344 2,230 3,715 16,210 64.5%
2014 11,050 3,910 4,300 19,260 57.4%

குறிப்புகள் :

  • சாய்வெழுத்துகலில் உள்ள தரவுகள்,  தொலைந்தத் தரவுகளின் நீட்டல்கணிப்பு மதிப்பீடுகளை உள்ளடக்கியது. துருக்கி மற்றும் ரஷ்யாவின் தரவுகள் இங்கே "ஐரோப்பா" செங்குத்து வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ. வேகம் மற்றும் அதற்கும்மேல் உள்ளவன மட்டும் கணக்கில் எடுக்கபட்டுள்ளது.
  • "சின்கான்சென் பங்கு (%)" என்பது "உலகம்"-ன் மொத்தத்தில் உள்ள, சின்கான்சென் பயணிகளின் சதவிகிதத்தை குறிக்கிறது.
  • "ஆசியா (மற்றவை)" என்ற செங்குத்து வரிசை, சின்கான்சென் அல்லாத, ஆசியாவில் உள்ள மற்ற அதிவேக இரும்புவழித் தடங்களின்  மொத்த பயணிகளை குறிக்கிறது.

வருடாந்திரம் 

[தொகு]
ஜப்பானின் உச்சகட்ட அதிவேக தொடருந்துப் பயணிகள் எண்ணிக்கை (பத்து இலட்சங்களில்)
டோகாய்டோ டோஹோகூ  சான்யோ ஜோஎட்சு நாகானோ கியூசு மொத்தம் (தோராயமான கூட்டுத்தொகை )
2007 151.32[14] 84.83[14] 64.43[14] 38.29[14] 10.13[14] 4.18[14] 353.18
  • குறிப்பு: தனிப்பட்ட தடங்களின் பயணியர் கூட்டு எண்ணிக்கை, அவ்வமைப்பின் கூட்டு எண்ணிக்கை ஆகாது, ஏனெனில் ஒரு பயணி இச்சேவையைப் பலமுறை பயன்படுத்தலாம். ஆகையால் மேற்கூறிய நிகழ்வை, ஒரு முறை என்றே எடுத்துக் கொள்ளப்படுகிறது.

எதிர்காலம் 

[தொகு]

ஒக்கூரிக்கூ விரிவாக்கம் 

[தொகு]

டோஹோகூ விரிவாக்கம் /ஹொக்கைடோ சின்கான்சென்

[தொகு]

நாகாசாகி சின்கான்சென் 

[தொகு]

காந்தமிதவுந்து (சூஓ சின்கான்சென்)

[தொகு]

சிறு-சின்கான்சென் 

[தொகு]

சிறு-சின்கான்சென் (ミニ新幹線) என்பது முன்னாள் குற்றகலப் பாதைகள், செந்தரப் பாதைகளாக மாற்றி அமைக்கப்பட்ட தடங்களுக்கு இட்ட பெயர் ஆகும். இதன்மூலம் சின்கான்சென் தொடருந்துகள், குறைவான கட்டுமான செலவில் நகரங்களுக்குள் பயணித்தது. 

இரு சிறு-சின்கான்சென் தடங்கள் உள்ளன:

யமகாடா சின்கான்சென் மற்றும் ஆக்கிட்டா சின்கான்சென்.

ஜப்பானின் சின்கான்சென் தொடருந்துகள் உபயோகிக்கும் 1067மி.மீ. (3அடி 6அங்குலம்) உள்ள குற்றகல பாதையிலும், 1435மி.மீ. (4அடி 8 1⁄2 அங்குலம்) உள்ள செந்தரப் பாதையிலும் ஓட சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு தொடருந்துதான், அச்சு-அகலம் மாறும் தொடருந்துகள். இத்தொடருந்திலுள்ள  பெட்டிகளின் சக்கரங்கள், அதன் அச்சிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தேவைக்கேற்ப குறுகி அல்லது அகன்று, மீண்டும் அச்சுடன் பொருந்திக்கொள்ளும். இதனால் அச்சு-அகலம் மாறும் தொடருந்து, செந்தரப் பாதை மற்றும் குற்றகலப் பாதை என இரண்டிலும் ஓட முடியும். இதனால் தடத்தை மாற்றும் செலவு மிச்சமாகிறது.

தடங்களின் பட்டியல்

[தொகு]

முக்கிய சின்கான்சென் தடங்கள்:

தடம் ஆரம்பம் முடிவு நீளம் இயக்குபவர் துவங்கப்பட்டது  வருடாந்திர பயணிகள்

[15]

கி.மீ. மைல்
டோகாய்டோ சின்கான்சென்
தோக்கியோ புது-ஒசாக்கா 515.4 320.3 மத்திய ஜப்பானிய இரும்புவழி  1964 143,015,000
சான்யோ சின்கான்சென் 
புது-ஒசாக்கா ஹக்காட்டா 553.7 344.1 மேற்கு ஜப்பானிய இரும்புவழி 1972–1975 64,355,000
டோஹோகூ சின்கான்சென்  தோக்கியோ புது-ஆமோரி 674.9 419.4 கிழக்கு ஜப்பானிய இரும்புவழி
1982–2010 76,177,000
ஜோஎட்சு சின்கான்சென்
ஓமியா நீகாடா 269.5 167.5 1982 34,831,000
ஒக்கூரிக்கூ சின்கான்சென்
தகாசாகி கனசாவா 345.4 214.6 கிழக்கு ஜப்பானிய இரும்புவழி மற்றும் மேற்கு ஜப்பானிய இரும்புவழி
1997–2015 9,420,000
கியூசூ சின்கான்சென்
ஹக்காட்டா ககோசீமா-ச்சூஒ
256.8 159.6 கியூசூ ஜப்பானிய இரும்புவழி
2004–2011 12,143,000
ஹக்காட்டா-மினாமி தடமும் காலா-யூசாவா தடமும் தவிர்த்து, சின்கான்சென் தடங்களின் வரைபடம் (ஆங்கிலத்தில்)

தொடருந்து ரகங்களின் பட்டியல்

[தொகு]

தொடருந்துகள் 16 பெட்டிகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு பெட்டியும் 25மீ. நீளமும், மொத்த நீளம் 400மீ. இருக்கும். இதற்கு ஏற்றவாறு நிலையங்களும் நீளாமாக இருக்கும். ஜப்பானின் சில அதிவேக காந்தமிதவுந்துகள் சின்காசென் என குறிப்பிடபடுகின்றன,[16] (லினிமோ காந்தமிதவுந்துகளை போல்) இதர மெதுவான காந்தமிதவுந்துகள், வழக்கமான விரைவுப் போக்குவரத்துக்கு  மாற்றாக விளங்குகின்றன.

2004-ல் சின்கான்சென் தொடருந்துகளின் அணிவகுப்பு
0 வரிசை, பழமையான ரகம் (இடது) மற்றும் என்700 வரிசை, புத்தம்புதிய ரகம் (வலது), அக்டோபர் 2008

பயணியர் தொடருந்துகள் 

[தொகு]

டோகாய்டோ மற்றும் சான்யோ சின்கான்சென்

[தொகு]
  • 0 வரிசை: 1964-ல் சேவைக்கு வந்த முதல் சின்கான்சென். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 220கி.மீ. ஆகும். 3200க்கும் மேல் இதன் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. 2008-ல் திரும்பப் பெறபட்டது. 
  • 100 வரிசை: 1985-ல் சேவைக்கு வந்தது.இரு நிலை தொடருந்தான இது உணவகப் பெட்டியுடன் இருந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 230கி.மீ. ஆகும். 2012-ல் திரும்பப் பெறபட்டது.
  • 300 வரிசை: 1992-ல் சேவைக்கு வந்தது, தொடக்கத்தில் நோசோமி சேவைகளில் மணிக்கு 270கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்டது. 2012, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.
  • 500 வரிசை: 1997-ல் நோசோமி சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும். 2008-ஆம் ஆண்டு முதல், இதன் 16 பெட்டிகள், எட்டாகக் குறைக்கப்பட்டு சான்யோ சின்கான்சென்னின் கொடமா சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
  • 700 வரிசை: 1999-ல் சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 285கி.மீ. ஆகும். தற்போது ஹிக்காரி மற்றும் கொடமா சேவைகளில் ஈடுபடுகிறது.
  • என்700 வரிசை: சமீபத்திய டோகாய்டோ மற்றும் சான்யோ சின்கான்சென்னின் வகை, 2007-ல் சேவைக்கு வந்தது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 300கி.மீ. ஆகும்.

கியூசூ சின்கான்சென்

[தொகு]

டோஹோகூ, ஜோஎட்சு மற்றும் ஒக்கூரிக்கூ சின்கான்சென்

[தொகு]
ஈ5 வரிசை
  • 200 வரிசை: இதன் முதல் வகை டோஹோகூ மற்றும் ஜோஎட்சு சின்கான்சென்களில் 1982-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.
  • ஈ1 வரிசை: 12 இரு நிலை பெட்டிகள் கொண்ட தொடருந்து 1994-ல் அறிமுகமானது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது. 2012, செப்டெம்பரில் திரும்பப் பெறபட்டது. 
  • ஈ2 வரிசை: 8/12 பெட்டிகளை கொண்ட இது 1997-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 275கி.மீ. ஆகும்.
  • ஈ4 வரிசை: 8 இரு நிலை பெட்டிகளை கொண்ட இது  1997-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 240கி.மீ. ஆகும். 2013, மார்ச்-ல் திரும்பப் பெறபட்டது.
  • ஈ5 வரிசை: 10 பெட்டிகளை கொண்ட இது மார்ச், 2011-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 320கி.மீ. ஆகும்.
  • ஈ7 வரிசை: 12 பெட்டிகளுடைய தொடருந்துகள் ஒக்கூரிக்கூ சின்கான்சென்னில், மார்ச் 2014-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260கி.மீ. ஆகும்.
  • டபள்யூ7 வரிசை: 12 பெட்டிகளுடைய தொடருந்துகள் ஒக்கூரிக்கூ சின்கான்சென்னில், மார்ச் 2015-ல் இருந்து சேவை புரிகிறது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 260கி.மீ. ஆகும்.[17]

யமகாடா  மற்றும் ஆக்கிட்டா சின்கான்சென்

[தொகு]
ஈ6 வரிசை மற்றும் ஈ3 வரிசை

ஹொக்கைடோ சின்கான்சென்

[தொகு]

சீனக் குடியரசு அதிவேக இரும்புவழி

[தொகு]

வெள்ளோட்ட தொடருந்துகள்

[தொகு]
யமானாஷி வெள்ளோட்ட தடத்தில் MLX01, நவம்பர் 2005
  • LSM200 – 1972
  • ML100 – 1972
  • ML100A – 1975
  • ML-500 – 1977
  • ML-500R – 1979
  • MLU001 – 1981
  • MLU002 – 1987
  • MLU002N – 1993
  • MLX01 – 1996
  • எல்0 வரிசை – 2012

பராமரிப்பு வாகனங்கள்

[தொகு]
  • 911 வகை டீசல் உந்துப்பொறி
  • 912 வகை டீசல் உந்துப்பொறி
  • திதி18 வகை டீசல் உந்துப்பொறி
  • திதி19 வகை டீசல் உந்துப்பொறி
  • 941 வகை (மீட்பு தொடருந்து)
  • 921 வகை (தட ஆய்வு பெட்டி)
  • 922 வகை (Doctor Yellow sets T1, T2, T3)
  • 923 வகை (Doctor Yellow sets T4, T5)
  • 925 வகை (Doctor Yellow sets S1, S2)
  • ஈ926 வகை (East i)

வேகச் சாதனைகள் 

[தொகு]

வழக்கமாக சக்கரம் கொண்டவை 

[தொகு]
பிரிவு 955 "300எக்சு"
வேகம் [20] தொடருந்து இடம் திகதி கருத்துக்கள்
கி.மீ.-ல் மைல்கலில்
200 120 பிரிவு 1000 சின்கான்சென்
ஒடவாராவில் உள்ள கமொநோமியா வெள்ளோட்ட தடம். இப்போது டோகாய்டோ சின்கான்சென்னின் அங்கமாக உள்ளது. 31 அக்டோபர் 1962
256 159 பிரிவு 1000 சின்கான்சென்
கமொநோமியா வெள்ளோட்ட தடம் 30 மார்ச் 1963 மின்தன்னுந்து தொடருந்துக்கான முந்தைய உலக வேக சாதனை
286 178 பிரிவு 951 சின்கான்சன்
சான்யோ சின்கான்சென் 24 பிப்ரவரி  1972 மின்தன்னுந்து தொடருந்துக்கான முந்தைய உலக வேக சாதனை
319.0 198.2 பிரிவு 961 சின்கான்சென் ஒயாமா வெள்ளோட்ட தடம். இப்போது டோஹோகூ சின்கான்சென்னின் அங்கமாக உள்ளது 7 டிசம்பர் 1979 மின்தன்னுந்து தொடருந்துக்கான முந்தைய உலக வேக சாதனை
325.7 202.4 300 வரிசை டோகாய்டோ சின்கான்சென் 28 பிப்ரவரி 1991
336.0 208.8 400 வரிசை ஜோஎட்சு சின்கான்சென் 26 மார்ச் 1991
345.0 214.4 400 வரிசை
ஜோஎட்சு சின்கான்சென் 19 செப்டம்பர் 1991
345.8 214.9 500-900 வரிசை "வின்350" சான்யோ சின்கான்சென் 6 ஆகஸ்ட் 1992
350.4 217.7 500-900 வரிசை "வின்350" சான்யோ சின்கான்சென் 8 ஆகஸ்ட் 1992
352.0 218.7 பிரிவு 952/953 "ஸ்டார்21"  ஜோஎட்சு சின்கான்சென்
30 அக்டோபர் 1992
425.0 264.1 பிரிவு 952/953 "ஸ்டார்21" ஜோஎட்சு சின்கான்சென் 21 டிசம்பர் 1993
426.6 265.1 பிரிவு 955 "300எக்சு"
டோகாய்டோ சின்கான்சென் 11 ஜூலை 1996
443.0 275.3 பிரிவு 955 "300எக்சு" டோகாய்டோ சின்கான்சென்
26 ஜூலை 1996

காந்தமிதவுந்து  

[தொகு]
அதிவேக சாதனையை நிகழ்த்திய, எல்0 வரிசை சின்கான்சென் (மணிக்கு 603 கி.மீ.)
வேகம்  தொடருந்து  இடம்  திகதி  கருத்துக்கள்
கி.மீ.-ல்  மைல்கலில் 
550 340 MLX01
ச்சூஓ சின்கான்சென்  (யமானஷி சோதனைத் தடம்) 24 டிசம்பர் 1997 முந்தைய உலக வேக சாதனை
552 343 MLX01 ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 14 ஏப்ரல் 1999 முந்தைய உலக வேக சாதனை
581 361 MLX01 ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 2 டிசம்பர்  2003 முந்தைய உலக வேக சாதனை
590 370 எல்0 வரிசை
ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 16 ஏப்ரல் 2015[21] முந்தைய உலக வேக சாதனை
603 375 எல்0 வரிசை ச்சூஓ சின்கான்சென் (யமானஷி சோதனைத் தடம்) 21 ஏப்ரல் 2015[22] வேகத்திற்கான உலக சாதனை

ஜப்பானுக்கு வெளியே சின்கான்சென் தொழில்நுட்பம் 

[தொகு]
2006-ல் சீனக் குடியரசின் அதிவேக இரும்புவழித்தடத்தில் சின்கான்சென் 700டி வரிசை தொடருந்தின் சோதனை ஓட்டத்தின் போது. 
ஐக்கிய இராச்சியத்திலுள்ள பிரிவு 395, செப்டம்பர் 2009

சின்கான்சென் தொழில்நுட்பத்துடனான இரும்புவழிதடம், ஜப்பானுடன் அடங்கி விடவில்லை. 

சீனக் குடியரசின் அதிவேக இரும்புவழித்துறை இயக்கும், சின்காசென் 700டி வரிசை, கவாசாகி கனரக தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

சீனா 

[தொகு]

ஐக்கிய இராச்சியம் 

[தொகு]

பிரேசில் 

[தொகு]

அமெரிக்க ஐக்கிய நாடு மற்றும் கனடா

[தொகு]

வியட்நாம் 

[தொகு]

இந்தியா 

[தொகு]

2015 டிசம்பரில், இந்தியாவின் முதல் அதிவேக இரும்புவழிதடமாக மும்பை-அகமதாபாத் அதிவேக தொடருந்து வழித்தடத்தின் கட்டிமானத்திற்கு இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.[23][24]

தாய்லாந்து 

[தொகு]

சிங்கப்பூர்–மலேசியா

[தொகு]

இதையும் பார்க்க 

[தொகு]
  • Transport in Japan
  • Rail transport in Japan
  • Shanghai Maglev Train

மேற்கோள்கள் 

[தொகு]
  1. "About the Shinkansen Outline".
  2. "JR-EAST:Fact Sheet Service Areas and Business Contents" (PDF).
  3. 3.0 3.1 3.2 Smith, Roderick A. (2003).
  4. Fukada, Takahiro, "Shinkansen about more than speed", The Japan Times, 9 December 2008, p. 3.
  5. 5.0 5.1 "Features and Economic and Social Effects of The Shinkansen" பரணிடப்பட்டது 2011-01-10 at the வந்தவழி இயந்திரம்.
  6. "Railway Modernization and Shinkansen" பரணிடப்பட்டது 2011-06-13 at the வந்தவழி இயந்திரம்.
  7. "Central Japan Railway Company Annual Report 2014" (PDF). p. 10.
  8. "Safety".
  9. "SHINKANSEN (JAPANESE BULLET TRAINS) AND MAGLEV MAGNETIC TRAINS". Archived from the original on 2013-01-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.
  10. Report on Niigata Chuetsu Earthquake PDF (43.8 KB)
  11. "High-speed bullet train derails in Japan: Media".
  12. "KTX vs 新幹線 徹底比較".
  13. http://www.mlit.go.jp/common/000232384.pdf
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 "国土交通省鉄道輸送統計年報(平成19年度)" பரணிடப்பட்டது 2011-05-14 at the வந்தவழி இயந்திரம். 
  15. "鉄道輸送統計調査(平成23年度、国土交通省) Rail Transport Statistics (2011, Ministry of Land, Infrastructure and Transport) (Japanese)".
  16. "FY2009 Key Measures and Capital Investment - Central Japan Railway Company".
  17. 北陸新幹線用の新型車両について [New trains for Hokuriku Shinkansen] (PDF).
  18. 北海道新幹線用車両について [Hokkaido Shinkansen Train Details] பரணிடப்பட்டது 2014-04-16 at the வந்தவழி இயந்திரம் (PDF).
  19. 北海道新幹線「H5系」、内装には雪の結晶も [Hokkaido Shinkansen "H5 series" - Interiors to feature snowflake design] பரணிடப்பட்டது 2014-04-15 at Archive.today.
  20. Semmens, Peter (1997).
  21. リニア「L0系」、世界最高の590キロ記録 [L0 series maglev sets world speed record of 590 km/h].
  22. "Japan's maglev train breaks world speed record with 600km/h test run".
  23. http://www.hindustantimes.com/india/india-bites-the-18-6-billion-high-speed-bullet/story-pLq1MHnB98MFbicQJOlFGJ.html
  24. http://www.railwaygazette.com/news/single-view/view/india-and-japan-sign-high-speed-rail-memorandum.html

வெளி இணைப்புகள் 

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்கான்சென்&oldid=3792547" இலிருந்து மீள்விக்கப்பட்டது