குறுக்குக் குற்றி
குறுக்குக் குற்றி அல்லது குறுக்குத் தாங்கி (வடக்கு அமெரிக்காவில் இரயில்ரோடு இட்டை ஆங்கிலம்:railroad tie/ இரயில்வே இட்டை ஆங்கிலம்:railway tie அல்லது ஐரோப்பாவில் இரயில்வே சிலீப்பர் ஆங்கிலம்:railway sleeper) தொடர்வண்டிப் போக்குவரத்தில் என்பது இரு தண்டவாளங்களைத் தாங்கிப் பிடிக்கும் மரத்தால் அல்லது காங்கிறீற்றால் ஆன செவ்வக வடிவிலமைந்த தாங்கிகளாகும். பொதுவாகத் தண்டவாளங்களுக்குச் செங்குத்தாக இடப்படும் இந்தக் குற்றிகள் வண்டி பாரத்தைக் கீழேயுள்ள சரளைக் கற்களுக்கும் பதப்படுத்தப்பட்ட நிலப் பரப்பிற்கும் மாற்றுகிறது. மேலும் தண்டவாளங்களை இறுகப் பிணைத்தும், அகலப்பாட்டை, குறுகிய பாட்டை, மீட்டர் பாட்டை போன்ற வரையறுக்கப்பட்ட சரியான அளவையில் தண்டவாளங்களுக்கிடையேயான தொலைவைப் பராமரித்தும் சிக்கலற்ற தொடர்வண்டி இயக்கத்திற்கு அடிகோலுகின்றன.
வழமையாக மரத்தால் உருவாக்கப்பட்ட குற்றிகள், அண்மைக்காலத்தில், குறிப்பாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முன்தகைப்புக் காங்கிறீற்றால் உருவாக்கப்படுகின்றன. இரும்பினால் ஆன குற்றிகள் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம்நிலை வழித்தடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. குற்றிகள் நெகிழிக் கலவைகளாலும் செய்யப்படுகின்றன, ஆனால் அவை மிகக் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
குற்றியில்லா தடங்கள்
[தொகு]குறுக்குக் குற்றி இல்லாமல் வடிவமைக்கப்பட்ட இரும்புப்பாதை குற்றியில்லா தடங்கள் எனப்படும். முதலில் இவ்வகைத் தடங்கள் மலை இரயில்பாதையில், தண்டவாளங்களை நேரடியாக மலையின் பாறைகளில் பொருத்தப்பட்டன (1889-ல் கட்டப்பட்ட பிளடஸ் (ஆங்கிலம்:Pilatus) இரும்புவழியைப் போன்றது). 1960-களில் நெடுநாட்கள் உழைக்கும் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள் போன்றவைக்கு தீர்வைத் தேடி, ஜெர்மானிய, ஆங்கிலேய, ஜப்பானிய இரும்புவழித்துறைகள், அதி துல்லிய, பாரம்பரிய குறுக்குக் குற்றிகளுக்கு மாற்றைக் கொண்டுவரச் சோதித்து வந்தன.[1]
இதுதான் குற்றியில்லா இரும்புத்தடங்களைத் தோற்றுவித்தது. இவ்வகை இருப்புத்தடங்களில், குற்றிகளின்றி தண்டவாளங்கள் திண்காறைத் (ஆங்கிலம்:concrete) தகடுகளில் நேரடியாகப் பொருத்தப்பட்டன.
வெளி இணைப்புகள்
[தொகு]- Die Y-Stahlschwelle in der Schweiz பரணிடப்பட்டது 2010-08-27 at the வந்தவழி இயந்திரம் Y sleepers in Switzerland - rack and normal railways.
- ↑ Eisenmann, J.; Leykauf, G. (2000). "Feste Fahrbahn für Schienenbahnen". In Eibl, J (ed.). Betonkalender 2000 (in ஜெர்மன்). Vol. 2. Berlin: Ernst & Sohn. pp. 291–298. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-433-01427-1.