முன்தகைப்புக் காங்கிறீற்று
Appearance

வழமையான வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று என்பது, வலுவூட்டற் கம்பிகளை சாதாரண நிலையில், காங்கிறீற்றுக்குள் வைத்து வார்ப்புச் செய்வதை அடிப்படையாகக் கொண்டது. இங்கே, குறிப்பிட்ட காங்கிறீற்றுக் கட்டிடக் கூறுகளிலுள்ள வலுவூட்டற்கம்பிகள், சுமையேற்றப்பட்ட பின்பே விசைகளை உணரத் தொடங்குகின்றன. தூண்கள், உத்தரங்கள், தளங்கள் போன்ற கட்டடக் கூறுகளை, அவை சுமைதாங்கத் தொடங்க முன்பே வலுவூட்டற் கம்பிகளை இழுவிசைக்கு உட்படுத்தி கட்டிடக் கூறுகளில் தகைப்பை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டதே முன்தகைக்கப்பட்ட காங்கிறீற்று ஆகும். முன் தகைக்கப்பட்ட காங்கிறீற்று மூன்று வகைகளாக உள்ளன.[1][2][3]
- முன்னிழுத்த காங்கிறீற்று (Pre-tensioned concrete)
- பிணைப்புள்ள பின் இழுத்த காங்கிறீற்று (Bonded post-tensioned concrete)
- பிணைப்பற்ற பின்னிழுத்த காங்கிறீற்று (Unbonded post-tensioned concrete)
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lin, T.Y.; Burns, Ned H. (1981). Design of Prestressed Concrete Structures (Third ed.). New York, US: John Wiley & Sons. ISBN 0-471-01898-8. Archived from the original on 8 February 2017. Retrieved 24 August 2016.
- ↑ Federation Internationale du Beton (February 2005). fib Bulletin 31: Post-tensioning in Buildings (PDF). FIB. ISBN 978-2-88394-071-0. Archived from the original (PDF) on 8 February 2017. Retrieved 26 August 2016.
- ↑ American Concrete Institute. "CT-13: ACI Concrete Terminology". American Concrete Institute. Farmington Hills, Michigan US: ACI. Archived from the original on 11 December 2016. Retrieved 25 August 2016. Post-tensioned concreted is "structural concrete in which internal stresses have been introduced to reduce potential tensile stresses in the concrete resulting from loads."