கண்ணாடியிழைக் காங்கிறீற்று
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்ணாடியிழைக் காங்கிறீற்று (Glass Fibre Reinforced Concrete) என்பது கண்ணாடி இழைகளால் வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று ஆகும். இது ஒரு கூட்டுப் பொருள். இழை வலுவூட்டிய காங்கிறீற்று (Fibre-Reinforced Concrete) வகையைச் சேர்ந்தது.
பயன்கள்[தொகு]
கண்ணாடியிழைக் காங்கிறீற்று, பலவகையான முன்வார்ப்புக் (precast) கட்டிடப் பொருட்களையும், குடிசார் பொறியியல் துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களையும் உற்பத்தி செய்வதற்குப் பயன்படுகின்றது. தடிப்புக் குறைந்த வார்ப்புக்களாக உருவாக்கப்படக்கூடியதால், நிறை குறைவாக இருக்கும் பொருட்களைச் செய்வதற்கு கண்ணாடியிழைக் காங்கிறீற்று பெரிதும் விரும்பப்படுகின்றது. இது விரும்பப்படுவதற்கான மேலும் சில காரணிகள் பின்வருமாறு:
- இது நுணுக்க வேலைப்பாடுகளுடன் கூடிய பல்வேறு வடிவங்களிலும், மேற்பரப்பு இயல்புகளைக் கொண்டதாகவும் வார்க்கப்படக் கூடியது.
- குறைந்த தடிப்புடன், கூடிய வலுவுடன் அமைவதால், உருவாக்கப்படும் கூறு, நிறை குறைந்ததாகவும், கையாளுவதற்கு இலகுவாகவும் அமைகின்றது.
- நிறத் தூள்களைப் பயன்படுத்தியோ, நிறப் பூச்சுக்களினாலோ, வேண்டிய நிறங்களில் கூட்டுப் பொருள்களைச் (aggrigates) சேர்த்து அவற்றைக் காங்கிறீற்று மேற்பரப்பில் வெளித்தெரியச் செய்வதன் மூலமோ உற்பத்தி செய்யப்படும் கூறுகள் இலகுவாக நிறமூட்டப்படலாம்.
- பாரந்தாங்காத, அல்லது அமைப்புசார் பயன்பாடு இல்லாத கட்டிடக் கூறுகளை கண்ணாடியிழைக் காங்கிறீற்றுக் கொண்டு அமைப்பதனால் தேவையற்ற சுமையைக் குறைக்கமுடியும்.
- சாதாரண வாலுவூட்டப்பட்ட காங்கிறீற்றுடன் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
- துருப்பிடியாது, குறைவான பராமரிப்புத் தேவையுடையது.
உற்பத்தி முறைகள்[தொகு]
கண்ணாடியிழைக் காங்கிறீற்று வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. அதிகம் பயன்படுத்தப்படும் முறைகள்:
- விசிறல் முறை (Spray)
- முன்கலப்பு முறை (Premix)
- முன்கலப்பு விசிறல் முறை (Sprayed Premix)