தானியங்கி தொடருந்து பாதுகாப்பு


தானியங்கி தொடருந்து பாதுகாப்பு (ATP) என்பது ஒரு வகை தொடருந்து பாதுகாப்பு அமைப்பாகும். இது தொடருந்தின் வேகம், குறிப்பிட்ட சமிக்ஞை அம்சங்களில் தானியங்கி நிறுத்தம் உள்ளிட்ட, சமிக்கைகள் மூலம் அனுமதிக்கப்பட்ட வேகத்துடன் ஒத்துப்போகிறதா என்பதைத் தொடர்ந்து சரிபார்க்கிறது. அவ்வாறு இல்லையென்றால், தொடருந்தை நிறுத்த, அவசரகால தானியங்கி நெருக்கடித்-தடையனையை இயக்கி தொடருந்தை விபத்துகளிலிருந்து பாதுகாக்கிறது.[1]