சதுர அவரை
சதுர அவரை | |
---|---|
![]() | |
சதுர அவரை பூக்கள், இலைகள் மற்றும் விதைகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
குடும்பம்: | பபேசியே |
இனம்: | P. tetragonolobus |
இருசொற் பெயரீடு | |
Psophocarpus tetragonolobus (கரோலஸ் லின்னேயஸ்) D.C. |
சதுர அவரை (Winged_bean) இதன் தாவரவியல் பெயர் சோஃபோசார்ப்பஸ் டெட்ராகொனலோபஸ். இது கோவா அவரை, ஐவிரலி அவரை, இறகு அவரை, மணிலா அவரை, கடல்நாக அவரை, சதுரப் பயறு என்று அழைக்கப்படுகிறது. இது ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் நியூ கினியா என்று கருதப்படுகிறது.[1]
இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. குறைந்த நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இத்தாவரத்தின் அனைத்து பகுதிகளும் உண்ண ஏற்றவை. இலைகள் கீரையாகவும், பூக்கள் பச்சைக்காய்கறியாகவும், கிழங்குகள் வேக வைக்கப்பட்டும், விதைகள் சோயா மொச்சையைப் போலவும் உண்ணப்படுகின்றன. இதன் வேர்கள் கிழங்குகளாகவும், காய்கள் இறகுகளுடனும் காணப்படுகின்றன. இது படரும் தாவரமாகும்.
இது வெப்பமண்டலப் பயிராகும். இதன் நீர்த்தேவை அதிகம். ஆனால், நீர்த்தேங்குதல் இதன் வளர்ச்சியைப் பாதிக்கும். இது வளர்வதற்கு 25°செ வெப்பம் தேவை.
-
சதுர அவரை
-
ஒரு இளம் பர்மா பெண் சதுர அவரையின் வேர்களை விற்கிறார்.
-
வேக வைக்கப்பட்ட சதுர அவரை வேர்கள் சிற்றுண்டியாக பர்மாவில் சாப்பிடப்படுகிறது.
-
பிலிப்பைன்ஸில் சது அவரையை தேங்காய் பாலுடன் சேர்த்து சமைத்த ஒரு பதார்தம்.
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 1,711 kJ (409 kcal) |
41.7 g | |
நார்ப்பொருள் | 25.9 g |
16.3 g | |
நிறைவுற்றது | 2.3 g |
ஒற்றைநிறைவுறாதது | 6 g |
பல்நிறைவுறாதது | 4.3 g |
புரதம் | 29.65 g |
உயிர்ச்சத்துகள் | |
தயமின் (B1) | (90%) 1.03 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (38%) 0.45 mg |
நியாசின் (B3) | (21%) 3.09 mg |
(16%) 0.795 mg | |
உயிர்ச்சத்து பி6 | (13%) 0.175 mg |
இலைக்காடி (B9) | (11%) 45 μg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (44%) 440 mg |
இரும்பு | (103%) 13.44 mg |
மக்னீசியம் | (50%) 179 mg |
மாங்கனீசு | (177%) 3.721 mg |
பாசுபரசு | (64%) 451 mg |
பொட்டாசியம் | (21%) 977 mg |
சோடியம் | (3%) 38 mg |
துத்தநாகம் | (47%) 4.48 mg |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Hymowitz, T; Boyd, J. (1977). "Ethnobotany and Agriculture Potential of the Winged Bean". Economic Botany 31 (2): 180–188. doi:10.1007/bf02866589.
குறிப்புகள்[தொகு]
- Venketeswaran, S., M.A.D.L. Dias, and U.V. Weyers. The winged bean: A potential protein crop. p. 445. In: J. Janick and J.E. Simon (eds.), Advances in new crops. Timber Press, Portland, OR (1990).
- Verdcourt, B.; Halliday, P. (1978). "A revision of Psophocarpus (Leguminosae-Papilionoideae-Phaseoleae)". Kew Bulletin. 33: 191–227. doi:10.2307/4109575