சக்சஸ்
சக்சஸ் | |
---|---|
இயக்கம் | சுரேஷ் பிரசன்னா |
தயாரிப்பு | இசக்கி சுந்தர் |
இசை | தேவா |
நடிப்பு | துஷ்யந்த் சோனியா அகர்வால் நந்திதா |
ஒளிப்பதிவு | இரவீந்தர் |
கலையகம் | இசக்கி கிரியேசன்ஸ் |
விநியோகம் | இசக்கி கிரியேசன்ஸ் |
வெளியீடு | 5 செப்டம்பர் 2003 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சக்சஸ் என்பது சுரேஷ் பிரசன்னா எழுதி இயக்கிய 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இந்த படத்தில் நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் புதுமுகம் துஷ்யந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சோனியா அகர்வால் மற்றும் நந்தனா துணை வேடங்களில் நடித்தனர். படம் 2003 செப்டம்பரில் விமர்சகர்களிடமிருந்து சராசரி விமர்சனங்களைப் பெற்று வெளியானது.[1][2]
நடிப்பு
[தொகு]- துஷ்யந்த் கணேசாக
- சோனியா அகர்வால் சுவேதாவாக
- நந்தனா மகாவாக
- ரோஜா ராதிகாவாக
- கருணாஸ் கணேசின் நண்பனாக
- ஊர்வசி கிச்சாவின் மனைவியாக
- ஒய். ஜி. மகேந்திரன் கிச்சா & மகாவின் தந்தையாக
- ரியாஸ் கான் கிச்சாவாக
- அபிநய்
- நந்திதா ஜெனிபர் போதை கொஞ்சும் போதே பாடலில் குத்தாட்டப் பாடலில்
- மகாநதி சங்கர் உள்ளூர் ரவுடியாக
தயாரிப்பு
[தொகு]தயாரிப்பாளர் இசக்கி சுந்தர் சிவாஜி புரொடக்சன்சு அலுவலகத்தில் இராம்குமார் கணேசனின் மகனும், சிவாஜி கணேசனின் பேரனான துஷ்யந்தைப் பார்த்து, அவருக்கு அறிமுக வாய்ப்பை வழங்கினார். ஆரம்பத்தில் இந்த வாய்ப்பை நிராகரித்த, அவர் இறுதியில் அவரது சித்தப்பா பிரபு, உறவினர் விக்ரம் பிரபு ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகு ஒப்புக்கொண்டார்.[3] படத்தின் தயாரிப்பின் போது துஷ்யந்த் ஜூனியர் சிவாஜியாகவும் பாராட்டப்பட்டார். பராசக்தி (1952) திரைப்படத்தில் சிவாஜியின் முதல் திரை உரையாடலான சக்சஸ் என்று இப்படத்திற்கு பெயரிடப்பட்டது.[4][5]
வெளியீடு
[தொகு]படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது "திரைப்படம் ஒரு திருப்பத்துடன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இது நிச்சயமாக உற்சாகப்படுத்துவதாகவும், ஆர்வத்தைத் தருவதாகவும் உள்ளது. இதற்குப் பிறகு முதல் பாதியைத் திரும்பிப் பார்க்கும்போது, திரைப்படத்தில் உண்மையில் நல்ல கதா பாத்திரங்களை அமைப்பதில் மிகுந்த புத்திசாலித்தனமாக இருந்ததை உணரமுடிகிறது. ஆனால் சற்று வித்தியாசமான முறையிலான திருப்பம் வியக்க வைக்கிறது. " [6] மற்றொரு விமர்சகர் "சக்சஸ் படமானது ஜூனியர் கணேசன் வெற்றிபெற சரியான படம் அல்ல" என்று குறிப்பிட்டார்.[7]
இசை
[தொகு]வாலி, கபிலன், சினேகன், விவேகா ஆகியோரால் பாடல் வரிகள் எழுதப்பட, தேவா இசையமைத்தார்.[8]
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் | நீளம் (m: ss) |
---|---|---|---|---|
1 | ஹே உன் வயசென்ன | கார்த்திக், மாதங்கி | விவேகா | 05:01 |
2 | ஒத்து கொஞ்சம் ஒத்து | உதித் நாராயண் | வாலி | 05:16 |
3 | கோடி முப்பது | திப்பு, கோவை கமலா | 05:09 | |
4 | மராத்தி குட்டி | கே.கே., மகாலட்சுமி ஐயர் | சிநேகன் | 04:32 |
5 | கண்ணா உன் | அனுராதா ஸ்ரீராம், பி. உன்னிகிருஷ்ணன் | கபிலன் | 05:27 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ HostOnNet.com. "BizHat.com - Success Review. Junior Sivaji, Sonia Agarwal, Nandana, Urvasi, Roja, Y.G.Mahendran". movies.bizhat.com. Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
- ↑ https://web.archive.org/web/20041023122342/http://www.chennaionline.com/Moviereviews/tammov293.asp
- ↑ "'They can call me Junior, not Sivaji'". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
- ↑ "Welcome to Sify.com". sify.com. Archived from the original on 2004-04-28. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
- ↑ "Enter junior Sivaji". தி இந்து. 2003-01-27. Archived from the original on 2003-11-04. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
- ↑ "bbreviews/2003/success". reocities.com. Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
- ↑ "AllIndianSite.com - Success - It's All About movie". kollywood.allindiansite.com. Archived from the original on 2014-03-01. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
- ↑ "Success Songs - S.A.Rajkumar - Success Tamil Movie Songs - Oosai.com - A Sound of Tamil Music - An Online Tamil songs Portal, Carries more than 4600 Tamil Movie Songs Online". oosai.com. Archived from the original on 2013-09-18. பார்க்கப்பட்ட நாள் 2014-03-30.