மாதங்கி ஜெகதீஷ்
மாதங்கி ஜெகதீஷ் என்கிற மா.ஜெ | |
---|---|
இசை வடிவங்கள் | திரைப்படப் பாடல், ஜாஸ், புளூஸ் ஆர் & பி, இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | பாடுதல் |
இசைத்துறையில் | 2001லிருந்து |
இணைந்த செயற்பாடுகள் | கோக் ஸ்டுடியோ, இந்தியா [1] |
இணையதளம் | http://www.mathangijagdish.in |
மாதங்கி ஜெகதீஷ் (Mathangi Jagdish) ஒரு பாடகரும், பாடலாசிரியரும், கோக் ஸ்டுடியோ கலைஞருமாவார். ஒரு மேடை கலைஞராக 475 பாடல்களை இவர் பாடியுள்ளார். மேலும் இவரது மேடையில் முழுமையான பாடகராக உள்ளார்.
கொல்கத்தாவில் பிறந்து தில்லியில் வளர்ந்த மாதங்கி அங்கேயேப் பள்ளிப் படிப்பையும், பெங்களூரில் இளங்கலை பட்டப்படிப்பையும், சென்னையில் முதுகலைப் பட்டத்தையும் முடித்தார். பின்னர், ஒரு முன்னணி பன்னாட்டு நிறுவனத்தில் விளம்பரத் துறையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.
தொழில்[தொகு]
இசை இயக்குனர் தேவாவின் இசையில் சாக்லேட் படத்தில் இடம்பெற்ற "அஞ்சு மணி அஞ்சு மணி " என்றத் தனிப்பாடலைப் பாடினார். அதே படத்தில் இடம்பெற்ற "கொக்கரி கிரி கிரி கிரி" என்ற பாடலைப் பாடும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ப்பு மற்றும் இந்தி, ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளை சரளமாக பேசும் திறன் காரணமாக, இவர் தனது வாழ்க்கையில் 17க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ளார். கஜினி என்ற படத்தில் "எக்ஸ் மச்சி" என்றப் பாடலைப் பாடினார். [2] 2011ஆம் ஆண்டில், இவர் கோக் ஸ்டுடியோ @ எம்டிவி என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருந்தார். அதில் இவர் கில்டே ஹைன் குல் யஹான் பாடலைப் பாடினார். து ஹை யஹானின் அசல் இசையமைப்பின் பகுதிகளுடன் மூன்றாவது பகுதியில் கருநாடக இசையில் அமைந்த தியாகராஜ கீர்த்தனையான "புரோவ பாரமா இரகுராமா " என்ற பாடலை டோச்சி ரெய்னா என்பவருடன் இணைந்து பாடினார். இந்தப் பகுதி கோக் ஸ்டுடியோ @ எம்டிவியின் தொடக்க அத்தியாயத்தில் இடம்பெற்றது. இது தவிர, இவர் நாடு முழுவதும் உள்ள நேரடி கோக் ஸ்டுடியோ @ எம்டிவி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவும் இருந்தார்.
கடந்த 11 ஆண்டுகளில், ஆஸ்கார் விருது பெற்ற ஏ. ஆர். ரகுமான், இளையராஜா, அவரது மகன்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, அவரது மகள் பவதாரிணி ஆகியோருக்காக பாடியிருந்தார். முன்னணி இசை இயக்குனர்களான ஹாரிஸ் ஜயராஜ், வித்தியாசாகர், பரத்வாஜ், எஸ். ஏ. ராஜ்குமார், டி. இமான், இரமேஷ் விநாயகம், சபேஷ் முரளி, சிற்பி, பரணி, தினா, ஜோஷ்வா ஸ்ரீதர், தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் இவர் பணியாற்றியுள்ளார்.
மலையாள இசைத் தொலைக்காட்சியான கப்பா தொலைக்காட்சியில் "மியூசிக் மோஜோ" என்ற நிகழ்ச்சியின் முதல் பருவத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தார். அந்த நிகழ்ச்சியில் 7 பாடல்களைப் பாடினார்.
தொலைக்காட்சி[தொகு]
சன் தொலைக்காட்சியின்" சங்கீத மகாயுத்தம்", ஏர்டெல்லின் சூப்பர் சிங்கர் பருவம் 2 உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய இசைப் போட்டித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் இருந்துள்ளார். ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட "கர்நாடக இசைப் போட்டி" என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான "தனிஷ்க் சொர்ண சங்கீதம்" நிகழ்ச்சியின் முதல் பருவத்திலும் இவர் தொகுப்பாளராக இருந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Minicerts". MTV India இம் மூலத்தில் இருந்து 2011-12-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111229013520/http://mtvindia.com/cokestudio/minicerts.php. பார்த்த நாள்: 2012-01-09.
- ↑ "X-Machi - Ghajini songs". YouTube. 2009-02-03. https://www.youtube.com/watch?v=n4FrmH3YuHI.