கோழியின வளர்ப்புப் பறவைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலகக் கோழியின வளர்ப்புப் பறவைகள்

கோழி வளர்ப்பு(Poultry) (/ˈpltri//ˈpltri/) என்பது கோழி, கோழியினப் பறவைகளை மனிதர்கள் முட்டை, இறைச்சி, முடிக்காக வளர்ப்பது சார்ந்த சொல் தொடராகும். இவ்வாறு வளர்க்கப்படும் பறவைகள் கேலோயன்சிரி வரிசையைச் சார்ந்த, அதிலும் குறிப்பாக, கல்லிபார்மஸ் வரிசையைச் (கோழி, காடை, துருக்கி இனப்பறவைகளை உள்ளடக்கியவை) சார்ந்தவையாகும்.

இது இறைச்சிக்காகக் கொல்லப்படும் புறாக்குஞ்சு போன்ற பிற பறவையினங்களையும் உள்ளடக்கியதாகும். ஆனாலும், இந்த இனங்களைச் சார்ந்த, வேட்டையாடி உண்ணப்படும், கான்பறவைகளை இது உள்ளடக்குவதில்லை. புல்லுஸ் (pullus - சிறிய விலங்கு) எனப் பொருள்படும் இலத்தீன் மொழிச் சொல்லில் இருந்து தோன்றிய பிரெஞ்சு மொழி ச் சொல்லான பெளல் (poule) என்பதிலிருந்து இது பெறப்பட்டது.

பறவைகள் வீட்டின விலங்குகளாக வளர்க்கப்படுவது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றுள்ளது. மனிதர்கள் தாங்கள் காட்டுப் பகுதிகளில் கிடைத்த முட்டைகளைக் குஞ்சு பொரிப்பதற்காகத் தங்களது வீட்டில் கொண்டு வந்து வைத்ததன் விளைவாக இது தொடங்கியிருக்க வேண்டும். பிறகு, இது பறவைகளை மனிதன் தன் வசம் சிறைப்பிடித்து வைத்துக்கொள்வதையும் சேர்த்துக் கொண்டது. வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகளை சேவல் சண்டையிடவும், பின்னர் குயில்களை அவற்றின் இசைக்காகவும் பழக்கப்படுத்தினர். விரைவிலேயே, பறவைகள் வளர்ப்பது உணவுக்கான மூலமாக இருப்பது உணரப்பட்டது. வேகமான வளர்ச்சி, முட்டையிடும் திறன், இணக்கம், சிறகுகளின் தோற்றம், அமைதியான குணம் ஆகியவற்றிற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் பல நூற்றாண்டுகளாக நடந்துவருகிறது. நவீன இனங்கள் தங்கள் காட்டு மூதாதையர்களிடமிருந்து மிகவும் வேறுபட்டனவாக இருந்தன. சில பறவைகள் இன்னும் சிறு கூட்டங்களாக அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. இன்று சந்தையில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான பறவை இனங்கள் வணிக நோக்கத்துடன் அமைந்துள்ள நிறுவனங்களில் வளர்க்கப்பட்டவையேயாகும். உலகளாவிய நிலையில் கோழி இறைச்சி மிகப் பரவலாக சாப்பிடப்படும், இரண்டாவது இடத்தைப் பிடித்த, இறைச்சி வகையாகிறது. முட்டையும் கோழி இறைச்சியும் ஊட்டச்சத்து நிறைந்த, ஆனால் கொழுப்பு குறைந்த புரதத்துடனான உணவாக அமைகிறது. அனைத்து கோழி இறைச்சி வகையும் ஒழுங்காக கையாளப்பட்டு, போதுமான அளவு சமைக்கப்படுவது, உணவு நஞ்சாகும் இடரைக் குறைக்கும்.

வரையறை[தொகு]

"கோழியின வளர்ப்புப் பறவைகள்" என்பது காலங்காலமாகச் சில பயன்பாடுகளுக்காக நிலத்தில் வாழும் வனப்பறவைகள் (கல்லிபார்மஸ்), நீரில் வாழும் கோழியினப் பறவைகள் (அன்செரிபார்மஸ்) பிடிக்கப்பட்டு வீட்டில் வளர்க்கப்படுவதைக் குறிக்கப் பயன்பட்டு வந்த சொல்லாகும். ஆனால் பாடும் பறவைகள் மற்றும் கிளிகள் போன்ற கூண்டில் வாழும் பறவைகள் இவ்வகைப்பாட்டில் வராது. இறைச்சி அல்லது முட்டையின் உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட கோழிகள், வான்கோழிகள் மற்றும் வாத்துகள் உள்ளிட்ட வீட்டு வளர்ப்புப் பறவைகள் என "கோழியினப் பறவைகள்" வரையறுக்கப்பட முடியும். மேலும் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் இத்தகைய பறவைகளின் தசைக்கும் இதே சொல் பயன்படுத்தப்படுகிறது.[1] பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் மேலே குறிப்பிட்ட அதே பறவைக் குழுக்களைப் பட்டியலிடுகிறது. ஆனால், அது கினிக்கோழி, புறாக்குஞ்சு (இளம் புறாக்கள்) ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.[2] ஆர். டி. கிராஃபோர்டின் கோழி இனப்பெருக்கம் மற்றும் மரபியல் என்ற நூலில் இளம்புறாக்கள் தவிர்க்கப்பட்டாலும், சப்பானியக் காடை, பெருஞ்செம்போத்து போன்றவை பட்டியலுக்குள் சேர்க்கப்படுகின்றன, பிந்தையது பெரும்பாலும் கைப்பற்றி வளர்க்கப்பட்டு, பின்னர் காடுகளில் விடப்படுகிறது.[3]

எடுத்துகாட்டுகள்[தொகு]

பறவை காட்டு மூதாதை விட்டினமாக்கம் பயன்பாடு படம்
கோழி செங்காட்டுக் கோழிl தென் கிழக்காசியா முட்டையும் இறைச்சியும் Female pair.jpg
துருக்கை காட்டுத் துருக்கை மெக்சிகோ இறைச்சி Bronzepute 04.jpg
பெண்வாத்து மல்லார்டு பல இடம் முட்டையும் இறைச்சியும் Taiwanese duck farm.jpg
வாத்து கிரேலாகு வாத்து பல இடம் முட்டையும் இறைச்சியும் Neugierige Hausgans.JPG
கினியாக் கோழி கொண்டைக் கினியாக் கோழி ஆப்பிரிக்கா இறைச்சி Guinea fowl.jpg
புறா கல்புறா நடுவண் கிழக்குப் பகுதி இறைச்சி Homing pigeon.jpg

கோழிகள்[தொகு]

கொண்டையும் தாடியும் உள்ள சேவல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Poultry". The American Heritage: Dictionary of the English Language 4th edition. (2009). Houghton Mifflin Company. 
  • "Poultry". Encyclopædia Britannica. (June 6, 2013). Encyclopædia Britannica, Inc.. 
  • Crawford, R. D. (1990). Poultry Breeding and Genetics. Elsevier. பக். 1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-88557-9. http://www.cabdirect.org/abstracts/19900183085.html.