கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு
Appearance
கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு (வாகரை) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 16 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- அம்மன்தனாவெளி,
- காட்டுமுறிவு,
- கதிரவெளி,
- காயாங்கேணி,
- கிரிமிச்சை,
- மாங்கேணி,
- மருதங்கேணிக்குளம்,
- பால்சேனை,
- பனிச்சங்கேணி,
- புனானை,
- ஊரியங்கட்டு,
- வட்டவான்,
- வாகரை,
ஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவும், மேற்கில் பொலநறுவை மாவட்டமும், வடக்கில் திருகோணமலை மாவட்டமும், கிழக்கில் இந்தியப் பெருங்கடலும்,எல்லைகளாக உள்ளன.
இப்பிரிவு 589 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].