ஏறாவூர் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு
Appearance
ஏறாவூர் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர் நகரம் பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 15 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
ஏறாவூர் நகரப் பகுதிகளை மட்டுமே இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கில் நீரேரி அமைந்திருக்க ஏனைய மூன்று பக்கங்களிலும் இதனை ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் பிரிவு சூழ்ந்து உள்ளது.
இப்பிரிவு 3 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட சிறிய பிரதேச செயலாளர் பிரிவு ஆகும்[1].