கொத்தவாசல் ஊராட்சி
கொத்தவாசல் | |
— ஊராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] |
ஊராட்சித் தலைவர் | |
மக்களவைத் தொகுதி | நாகப்பட்டினம் |
மக்களவை உறுப்பினர் | |
சட்டமன்றத் தொகுதி | நன்னிலம் |
சட்டமன்ற உறுப்பினர் | |
மக்கள் தொகை | 1,311 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கொத்தவாசல் ஊராட்சி (Kothavasal Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1311 ஆகும். இவர்களில் பெண்கள் 672 பேரும் ஆண்கள் 639 பேரும் உள்ளனர்.
அடிப்படை வசதிகள்
[தொகு]தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]
அடிப்படை வசதிகள் | எண்ணிக்கை |
---|---|
குடிநீர் இணைப்புகள் | 100 |
சிறு மின்விசைக் குழாய்கள் | 3 |
கைக்குழாய்கள் | 30 |
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் | 4 |
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் | |
உள்ளாட்சிக் கட்டடங்கள் | 10 |
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் | 3 |
ஊரணிகள் அல்லது குளங்கள் | 9 |
விளையாட்டு மையங்கள் | |
சந்தைகள் | |
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் | 50 |
ஊராட்சிச் சாலைகள் | 9 |
பேருந்து நிலையங்கள் | |
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் | 3 |
சிற்றூர்கள்
[தொகு]இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:
- ஒத்தவீடு
- கொத்தவாசல் - நன்னிலம் வட்டத்திற்கு உட்பட்ட இவ்வூர் ருத்திரகங்கை என்ற ஊருக்கு தெற்காக அரசலாற்றின் வடகரையில் உள்ள கொத்தவாசல் ஊராட்சியின் தலைமை ஊராகும். இவ்வூர் இடைக்காலத்தில் கொற்றமங்கல் என்ற பெயரில் அம்பர் நாட்டிற்கு உட்பட்ட ஊராக(தெ.இ.க.8-243) இருந்ததை அறியமுடிகிறது. இடைக்காலத்தில் (12 ஆம் நூற்றாண்டு) இவ்வூரில் புகழிஸ்வரமுடையார் என்ற பெயரில் சைவக் கோயில் ஒன்று இருந்துள்ளது. இவ்வூரை சார்ந்த கொற்றமங்கலங்கிழான் திருபமுடையான் கருவூர் நாயகன், திருவேகம்பமுடையான் குலோத்துங்கன், மற்றும் கோவிந்தன் என்ற மூவர் இரண்டாம் இராசராசசோழனின்(1163-1174) ஆட்சிச்காலத்தில் திருச்சிற்றம்பலம் விக்கரம சோழிஸ்வரமுடையார் (ருத்திரகங்கை -ஆபத்சகாயேஸ்வர்) கோயிலுக்கு திருமுற்றம், திருமடைவிளாகம் , திருநந்தவனம், மடம் மற்றும் மண்டபங்கள் செய்வித்து தந்துள்ளனர். மூன்றாம் இராஜராஜசோழன் காலத்தில் இதே ஊரை சார்ந்த அபிமுக்கிநாயன் என்பவன் இக்கோயிலில் அமாவசை தோறும் நெய்யமுது வழங்குவதற்கு நிலம் வழங்கியுள்ளான்.
- கோவில்தோப்பு
- மேலருத்ரகங்கை -திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொத்தவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட ஓர் சிற்றுராக ருத்திரகங்கை (ந.க.தொ.1-186) உள்ளது. நன்னிலம் நகரப்பகுதியில் இருந்து தோராயமாக 9 கி.மீ வடகிழக்கு திசையில் பூந்தோட்டம் என்ற சிறு நகரப்பகுதிக்கு கிழக்காக அரசலாற்றின் தென்கரையில் அமையப் பெற்றுள்ளது. இவ்வூரில் ”ஆபத்சகாயேசுவரர்” என்ற பெயரில் சைவக்கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் உள்ள கல்வெட்டின் வாயிலாக இக்கோயிலின் இறைவனது இடைக்கால பெயர் ”விக்கரம சோழிஸ்வரமுடையார்” என்று அறியமுடிகிறது. மேலும் இவ்வூர் அம்பர்நாட்டின் கீழ் கூற்றுப் பகுதியில் திருச்சிற்றம்பலம் (ந.க.தொ.1-186) என்ற பெயரில் இருந்ததையும் அறியமுடிகிறது இவ்வூர் விக்கிரமசோழன் காலத்தில் இருந்து சிறப்புடன் விளங்கியுள்ளதை அறியமுடிகிறது. இக்கோயிலுக்கு அச்சுதமங்கலத்து எல்லைக்குத் தெற்கில், நிலமும், புளியங்கொல்லை நத்தமும் நத்தத்தின் அருகில், பிடாரிகோயிலும், அதற்குறிய நிலமும் இருந்தததை கி.பி.2 - 13 - ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளால் அறிய முடிகிறது . இப் புளியங்கொல்லை நத்தத்திற்கு அருகிலேயே குடியிருப்பு நத்தமும் இருந்திருக்கிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "நன்னிலம் வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ 6.0 6.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
5.நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி-! 1978 தமிழ்நாட்டு தொல்லியல் துறை -சென்னை. 6.இரா.சுரேஷ் -நன்னிலம் வட்டார உழுகுடி சமூகமும் வாழ்விடங்களும் (சோழமண்டலம்) வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வுகள் பொ.ஆ600-பொ.ஆ1600 )முனைவர் பட்ட ஆய்வேடு,கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை ,தமிழ்ப்பல்கலைக்கழகம் -தஞ்சாவூர்-613010