கீழையூர் (நாகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீழையூர்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் கீழ்வேளூர் வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர் பிரவீன் பி. நாயர், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கீழையூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் வட்டம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் அமைந்துள்ள கீழையூர் ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.

கீழையூர் பல்வேறு புகழ்மிக்க கோவில்களை கொண்டு விளங்குகிறது. வரலாற்றுப் புகழ்பெற்ற பூர்வரங்கநாதர் ஆலயம் உள்ளதால் கீழரங்கம் எனப் பெருமையுடன் அழைக்கப்பட்டது. இன்று மருவி கீழையூர் என்றானது. சிறப்பு வாய்ந்த சிவாலயம் உள்ளது. இன்னும் பல ஆலயங்களும் உள்ளன. அரசினர் மேனிலைப் பள்ளி உள்ளது.

அத்தியாவசியமான அரசு மருந்தகம், கால்நடை மருத்துவமனை, அங்காடி, கிராம நிர்வாக அலுவலகம், அரசு பள்ளி, காவல் நிலையம் மற்றும் பல அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளது

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழையூர்_(நாகை)&oldid=2831284" இருந்து மீள்விக்கப்பட்டது