காந்திநகர் மக்களவைத் தொகுதி
Appearance
காந்திநகர் மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தற்போது | அமித் சா |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1967–முதல் |
மாநிலம் | குசராத் |
மொத்த வாக்காளர்கள் | 1,733,972 |
சட்டமன்றத் தொகுதிகள் | காந்திநகர் வடக்கு, கலோல், சானாந்து, காட்லோடியா, வேசல்பூர், நாரண்புரா, மற்றும் சபர்மதி. |
காந்திநகர் மக்களவைத் தொகுதி மேற்கு இந்தியாவிலுள்ள குசராத் மாநிலத்தின் 26 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது.
சட்டசபைத் தொகுதிகள்
[தொகு]2014ல் காந்திநகர் மக்களவைத் தொகுதி பின்வரும் ஏழு சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.
சட்டமன்ற தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி பெயர் | ஓதுக்கீடு |
---|---|---|
36 | காந்திநகர் வடக்கு | இல்லை |
38 | கலோல் | இல்லை |
40 | சானாந்து | இல்லை |
41 | காட்லோடியா | இல்லை |
42 | வேசல்பூர் | இல்லை |
45 | நாரண்புரா | இல்லை |
55 | சபர்மதி | இல்லை |
பிரபலங்கள்
[தொகு]- 1996ல் அடல் பிகாரி வாச்பாய் ஒரு முறை இந்த தொகுதியில் நின்று வென்ற பிறகு, தேர்தல் ஆணையத்தின் சட்டவிதிகளுக்கேற்ப அதே தேர்தலில் அவர் லக்னோ மக்களவைத் தொகுதியிலும் வெற்றிபெற்றிருந்ததால் இத்தொகுதியை இராசினாமா செய்தார்.[1]
- 1991ல் லால் கிருட்டிண அத்வானி முதன் முறையாக இத்தொகுதியில் வெற்றி பெற்றார், 1996ல் அவாலா மோசடி குற்றச்சாட்டினால் அத்தேர்தலில் போட்டியிடவில்லை. பின்பு 1998 முதல் தொடர்ச்சியாக ஐந்து முறை வெற்றிபெற்றுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி | |
---|---|---|---|
1952-1962 | உருவாக்கப்படவில்லை | ||
1967 | சோம்சந்த்பாய் சோலங்கி | இந்திய தேசிய காங்கிரசு | |
1971 | நிறுவன காங்கிரசு | ||
1977 | புருசோத்தம் மாவலங்கர் | பாரதிய லோக் தளம் | |
1980 | அம்ரித் படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | ஜி. ஐ. படேல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1989 | சங்கர்சிங் வகேலா | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | லால் கிருஷ்ண அத்வானி | ||
1996 | அடல் பிஹாரி வாஜ்பாய் (லக்னோ தொகுதி தக்கவைக்கப்பட்டது) | ||
1996^ | விஜய்பாய் படேல் (இடைத்தேர்தல்) | ||
1998 | லால் கிருஷ்ண அத்வானி | ||
1999 | |||
2004 | |||
2009 | |||
2014[3] | |||
2019 | அமித் சா |
^ இடைத்தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "XI Lok Sabha Debates, Session I". National Informatics Centre. 22 May 1996. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ "No regret over not becoming PM, says LK Advani". CNN-IBN. 14 November 2014. Archived from the original on 17 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 7 December 2014.
- ↑ NDTV (16 May 2014). "Election Results 2014: Top 10 High-Profile Contests and Victory Margins" இம் மூலத்தில் இருந்து 9 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221109195341/https://www.ndtv.com/cheat-sheet/election-results-2014-top-10-high-profile-contests-and-victory-margins-562324.