உள்ளடக்கத்துக்குச் செல்

காதியன், நகரம்

ஆள்கூறுகள்: 31°49′N 75°23′E / 31.82°N 75.39°E / 31.82; 75.39
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதியன்
நகரம்
ஒரு இந்துக் கோவில் மற்றும் குருத்துவாரவுடன் அமைந்துள்ள அக்ஸா மசூதியின் மினரதுல் மசூதி, காதியனின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.
ஒரு இந்துக் கோவில் மற்றும் குருத்துவாரவுடன் அமைந்துள்ள அக்ஸா மசூதியின் மினரதுல் மசூதி, காதியனின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.
காதியன் is located in பஞ்சாப்
காதியன்
காதியன்
இந்தியாவின் பஞ்சாபில் உள்ள இடம்
காதியன் is located in இந்தியா
காதியன்
காதியன்
காதியன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°49′N 75°23′E / 31.82°N 75.39°E / 31.82; 75.39
நாடுகள் இந்தியா
Stateபஞ்சாப்
மாவட்டம்குர்தாஸ்பூர்
ஏற்றம்
250 m (820 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்21,899
Languages
 • Officialபஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

காதியன் (ஆங்கிலம் : Qadian ) என்பது பஞ்சாபியிலுள்ள அமிர்தசரசின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சியாகும். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பட்டாலா நகரிலிருந்து 18 கிலோமீட்டர் (11 மைல்) வடகிழக்கில் அமைந்துள்ளது.

காதியன் அகமதிய இயக்கத்தின் நிறுவனர் மிர்சா குலாம் அகமதுவின் பிறப்பிடம் ஆகும். 1947 இல் இந்தியப் பிரிவினை வரை இது அகமதியா இயக்கத்தின் மையமாகவும் இருந்தது.

வரலாறு

[தொகு]

1530 ஆம் ஆண்டில் இஸ்லாத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மத அறிஞரும், அப்பகுதியின் முதல் ஆளுநருமான (காசி) மிர்சா காதி பேக் என்பவரால் காதியன் நிறுவப்பட்டது. மிர்சா காதி பேக் முகலாய சாம்ராஜ்யத்தின் மிர்சாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் சமர்கந்துவிலிருந்து குடிபெயர்ந்து பஞ்சாபில் குடியேறினார். பாபர் பேரரசரால் அங்கு அவருக்கு 80 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த நிலம் வழங்கப்பட்டது. தனது மத நம்பிக்கைகள் காரணமாக, 80 கிராமங்களின் மையத்திற்கு 'இஸ்லாம் புர் காசி' என்று பெயரிட்டு, அங்கிருந்து ஆட்சி செய்தார். காலப்போக்கில், நகரத்தின் பெயர் 'காசிமாஜி' என்று மாற்றப்பட்டது ('மாஜி' என்றால் 'காளை', இது காதியனில் இன்னும் ஏராளமாகக் காணப்படும் விலங்கைக் குறிக்கிறது). பின்னர், இது வெறும் 'காதி' என்று அழைக்கப்பட்டு இறுதியில் 'காதியன்' என்று அறியப்படுகிறது.

காதியனும் அதைச் சுற்றியுள்ள இரண்டு கிராமப் பகுதிகளும் பின்னர் இராம்காரியா சீக்கியர்களிடம் விழுந்தன. அவர்கள் இப்பகுதியில் ஆளுநர்களாக பணி புரிய வழங்கிய வாப்புகளை இரு கிராமங்கள் மறுத்தன. 1834 ஆம் ஆண்டில், மகாராஜா ரஞ்சித் சிங்கின் ஆட்சியின் போது, காதியன் மற்றும் அருகிலுள்ள ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய பகுதி காஷ்மீர், மகாதி, குலு பள்ளத்தாக்கு, பெசாவர் மற்றும் கசாராவில் இராணுவ ஆதரவுக்கு ஈடாக குலாம் அஹ்மதின் தந்தையான மிர்சா குலாம் முர்தாசாவுக்கு வழங்கப்பட்டது. [2]

காதியனில் 47 வெவ்வேறு மொழிகளைப் பேசிய அகமதியா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

அகமதியா இயக்கத்தின் இல்லமாக

[தொகு]

தொலைதூர மற்றும் அறியப்படாத நகரமான காதியன் 1889 ஆம் ஆண்டில் மிர்சா குலாம் அகமத் அகமதியா முஸ்லீம் சமூகத்தை நிறுவியபோது மதக் கற்றல் மையமாக உருவெடுத்தது. மேலும் 1891 ஆம் ஆண்டில் இது சமூகத்தின் வருடாந்திர கூட்டங்களுக்கான இடமாக மாறியது. 1947 ஆம் ஆண்டில் இந்தியா பிரிக்கப்படும் வரை, அகமதிய கலிபாவின் நிர்வாக தலைமையகமாகவும், தலைநகராகவும் காதியன் இருந்தது. சமூகத்தின் பெரும்பகுதி பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தது. பிரிவினையைத் தொடர்ந்து, சமூகத்தின் இரண்டாவது கலீபாவான மிர்சா பசீர்-உத்-தின் முகமது அகமத், காதியனில் இருந்து புதிதாக நிறுவப்பட்ட மாநிலத்திற்கு அகமதியர்களின் பாதுகாப்பான இடம்பெயர்வு குறித்து கவனமாக மேற்பார்வையிட்டார். மேலும் தனது சொந்த மகன்கள் உட்பட 313 பேரை காதியனில் தங்குமாறு அறிவுறுத்தினார். அகமதியர்களுக்கு புனிதமான தளங்களைக் காத்து, அவர்களுக்கு தர்வேசான்-ஐ காதியன் (காதியனின் மத உறுப்பினர்கள்) என்ற தலைப்பை வழங்கி, இறுதியில் தலைமையகத்தை பாக்கித்தானின் இரப்பாவுக்கு நகர்த்தினார். [3]

நிலவியல்

[தொகு]

கடியன் 31°49′N 75°23′E / 31.82°N 75.39°E / 31.82; 75.39 இல் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 250 மீட்டர் (820 அடி) ஆகும். [4] [5]

புள்ளி விவரங்கள்

[தொகு]

2013 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, [6] காதியன் மக்கள் தொகை 40,827 பேர் ஆகும். ஆண்களில் 54 சதவீத மக்களும் பெண்கள் 46 சதவீதமாகவும் உள்ளனர். காதியனின் சராசரி கல்வியறிவு விகிதம் 75 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 74.04 சதவீதததை விட சற்றே அதிகம்: ஆண் கல்வியறிவு 78 சதவீதம், மற்றும் பெண் கல்வியறிவு 70 சதவீதம். மக்கள் தொகையில் 6 வயதுக்கு குறைவானவர்கள் 10 சதவீதம் ஆகும்

காதியனைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்கள்

[தொகு]
அகமதியா முஸ்லிம் இயக்கத்தின் நிறுவனர் மிர்சா குலாம் அகமது

காதியன் ஒப்பீட்டளவில் தொலைதூர மற்றும் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்டது என்றாலும், இதில் குறிப்பிடத்தக்க பல வரலாற்று, மத மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளனர்;

மதத் தலைவர்கள்

[தொகு]

காதியனைச் சேர்ந்த மிர்சா குலாம் அகமதுவுக்கு கலீபாக்கள்

  • 1908 முதல் 1914 வரை கக்கீம் நூர்-உத்-தின்
  • மிர்சா பசீர்-உத்-தின் மஹ்மூத் அகமது 1914 முதல் 1965 வரை
  • மிர்சா நசீர் அகமது 1965 முதல் 1982 வரை
  • மிர்சா தாகீர் அகமது 1982 முதல் 2003 வரை

பிரபலமான நபர்கள்

[தொகு]

கவிஞர்கள்

[தொகு]

இராணுவத் தலைவர்கள்

[தொகு]

அரசியல்வாதிகள்

[தொகு]

குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னங்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. "Census of India: Search Details". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 11 August 2019.
  2. Shahid, Dost Mohammad (2007) [2000]. Taareekhe–Ahmadiyyat (Tareekh E Ahmadiyyat) (PDF) (in Urdu). Vol. 1. India: Nazarat Nashro Ishaat Qadian. p. 40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7912-121-6. ISBN incorrectly printed in the book as 181-7912-121-6. Complete PDF: 19 Volumes (11,600 pages) (541.0 M). (Volume 14 meta-data appeared to closely match the original reference, but is unverified as the correct volume).{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. "From Sufism to Ahmadiyya: A Muslim Minority Movement in South Asia". பார்க்கப்பட்ட நாள் 20 September 2015.
  4. "Qadian in India is Situated Exactly to the East of Damascus in Syria". Flickr. பார்க்கப்பட்ட நாள் 2009-07-03.
  5. "The Divine guidance about leadership in the latter days". Ahmaddiya Muslim Community. பார்க்கப்பட்ட நாள் 2009-07-03.
  6. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதியன்,_நகரம்&oldid=2877410" இலிருந்து மீள்விக்கப்பட்டது