கருந்தோள் பருந்து
கருந்தோள் பருந்து | |
---|---|
ஈ. சி. கேருலியஸ் வட்டமிட்டு அமர்ந்துள்ளது | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Elanus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/ElanusE. caeruleus
|
இருசொற் பெயரீடு | |
Elanus caeruleus (Desfontaines, 1789) | |
Subspecies | |
| |
Range of E. caeruleus | |
வேறு பெயர்கள் | |
|
கருந்தோள் பருந்து ( Elanus caeruleus ) என்பது பாறுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பகலாடி கொன்றுண்ணிப் பறவையாகும். மிகவும் சிறிய கரைவணைகளின் முறையில் திறந்த புல்வெளிகள் மீது வட்டமிடும் பழக்கத்துக்கு பிரபலமானது. இவை பாலியர்டிக் (வடமேற்குக் கடற்கரை நாடுகள்) மற்றும் ஆப்ரோட்ரோபிகல் (சகாராவுக்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்கா) பறவை இனங்களுடனும், சில நேரங்களில் ஆத்திரேலிய சிறிய கரும்பருந்து மற்றும் வட மற்றும் தென் அமெரிக்காவின் வெள்ளை வால் பருந்து ( எலானஸ் லியூகுரஸ் ) ஆகியவற்றுடன் இணைந்து கலப்பினத்தை உருவாக்குகின்றன. இந்த பருந்து தனித்துவமானது, நீண்ட இறக்கைகள் கொண்டது; வெள்ளை, சாம்பல், கருப்பு இறகுகள்; சிவப்பு கருவிழிகளுடன் ஆந்தை போன்ற முன்னோக்கி எதிர்கொள்ளும் கண்கள் கொண்டது. ஆந்தை போன்ற நடத்தையானது ஆத்திரேலியாவில் உள்ள இதன் உறவு இனமான லெட்டர் விங்ஸ் பருந்தில் ( எலானஸ் ஸ்கிரிப்டஸ் ) இன்னும் கூடுதலாக காணப்படுகிறது. கருந்தோள் பருந்துகள் முதன்மையாக சமவெளிகளில் காணப்பட்டாலும், இவை சில நேரங்களில் ஆசியாவின் உயரமான பகுதிகளில் மலைகளின் புல்வெளி சரிவுகளிலும் காணப்படுகின்றன. அவை வலசை சென்றவை அல்ல, என்றாலும் புயல் போன்றவற்றாலும், உணவு தேவைக்காவும் அலையும் நிலைக்கு உள்ளானவை. கொறிணிகளின் எண்ணிக்கையில் அவ்வப்போது ஏற்படும் எழுச்சியை இவை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன. மேலும் பெரும்பாலான வேட்டையாடிகளைப் போலன்றி ஒரே ஆண்டில் பல குஞ்சுகளை வளர்க்கின்றன. தெற்கு ஐரோப்பாவில் இவற்றின் எண்ணிக்கை மனித நடவடிக்கைகளின், குறிப்பாக வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றின் எதிரொளியாக உயர்ந்துள்ளது.
1789 ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ரெனே லூயிச் டெஸ்ஃபோன்டைன்ஸ் என்பவரால் கருந்தோள் பருந்து விவரிக்கபட்டு, ஃபால்கோ கேருலியஸ் என்ற இருமொழி பெயர் வழங்கப்பட்டது.[2] 1809 ஆம் ஆண்டில் பிரெஞ்சு விலங்கியல் வல்லுநர் ஜூல்ஸ்-சீசர் சாவிக்னியால் அறிமுகப்படுத்தப்பட்ட எலனஸ் பேரினத்தில் உள்ள நான்கு இனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இதில் மூன்று துணையினங்கள் உள்ளன:[3]
- ஈ. சி. கேருலியஸ் ( டெஸ்ஃபோன்டைன்ஸ், 1789) - தென்மேற்கு ஐபீரிய தீபகற்பம், ஆப்பிரிக்கா, தென்மேற்கு அரேபியா
- ஈ. சி. வோசிஃபெரஸ் ( லாதம், 1790) - பாக்கித்தான் முதல் கிழக்கு சீனா, மலாய் தீபகற்பம் மற்றும் இந்தோசீனா வரை.
- ஈ. சி. ஹைபோலூகஸ் கோல்ட், 1859 – பெரிய மற்றும் சிறு சுண்டாத் தீவுகள், பிலிப்பைன்ஸ், சுலாவெசி மற்றும் நியூ கினியா
விளக்கம்
[தொகு]காக்கையைவிட சற்று சிறிய இப்பறவையானது சுமார் 32. செ.மீ நாளம் கொண்டது. கருந்தோள் பருந்து நீண்ட இறக்கைகள் கொண்டது. இதன் உடல் பெரும்பாலும் சாம்பல் அல்லது வெண்மை நிறத்தில் இருக்கும். தோள்பட்டை, இறக்கை முனைகள், கண் பட்டை போன்றவை கருப்பாக இருக்கும். பறவை அமரும் போது வல்லூறுவின் இறக்கைகள் போன்று வாலுக்கு அப்பால் நீண்டிருக்கும். பறக்கும்போது, குட்டையான மற்றும் சதுரமான வால் தெரியும், மேலும் இதற்கு மில்வஸ் பேரினத்தின் வழக்கமான பருந்துகளைப் போல பிளவுபட்ட வால் இல்லை. பெரும்பாலும் சாலையோரக் கம்பிகளில் இது அமர்ந்திருக்கும் போது, அடிக்கடி தன் இறக்கைகளைச் சரிசெய்து, தன்னைத்தானே சமநிலைப்படுத்திக் கொள்வது போல் தன் வாலை மேலும் கீழும் அசைக்கிறது. இரு பாலினங்களுக்கும் இறகுகள் ஒரே மாதிரியாக இருக்கும். இவற்றிற்கு உள்ள பெரிய முன்னோக்கிய கண்கள் ஒரு எலும்பின் பாதுகாப்பின் கீழ் உள்ளன அது கண்களுக்கு நிழல் தரும்; இவற்றுக்கு உள்ள வெல்வெட்டு போன்ற இறகுகள் மற்றும் எதிரெதிரிணைக் கால் விரல்களையுடைய அடிகள் [4] போன்றவை ஆந்தைகளுடன் ஒத்த பண்புகள் ஆகும். பருவகால கொறிணிகளின் எண்ணிக்கை கூடுதலக இருக்கும் சவன்னா வாழ்விடங்களில் வாழ்வதற்கு ஏற்றதாக இதன் இந்தப் பண்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. இத்தகைய உணவு வகைகள் ஆந்தைகளால் விரும்பப்படுகின்றன.[5]
பரவலும் வாழ்விடமும்
[தொகு]கருந்தோள் பருந்து முதன்மையாக துணை- சகாரா ஆப்பிரிக்கா மற்றும் வெப்பமண்டல ஆசியாவில் உள்ள திறந்த வெளி மற்றும் அரை பாலைவனங்களில் காணப்படும் ஒரு பறவை இனமாகும். ஆனால் இது ஐரோப்பாவிற்குள் எசுபானியா மற்றும் போர்ச்சுகலிலும் கால் பதித்துள்ளது. இந்த இனங்கள் தெற்கு ஐரோப்பாவிலும் ஒருவேளை மேற்கு ஆசியாவிலும் விரிவடைந்திருப்பதாக தோன்றுகிறது. ஐரோப்பாவில் இவற்றின் இனப்பெருக்கம் பற்றிய முதல் பதிவுகள் 1860 களில் காணப்படுகின்றன. பின்னர் இவை மிகவும் பரவலாகி, இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நில பயன்பாட்டு மாற்றங்கள், குறிப்பாக வேளாண் மற்றும் மேய்ச்சல் நிலம் ஆகியவை இந்த இனங்களுக்கு உதவியதாக உள்ளதாக கருதப்படுகிறது.[6]
முக்கியமாக இவை சமவெளிகளில் காணப்பட்டாலும், சிக்கிமில் ( 3,650 m (11,980 அடி) ), நீலகிரி (தொட்டபெட்டா, 2,670 m (8,760 அடி) ), நாகாலாந்து ( 2,020 m (6,630 அடி) ) ஆகிய பகுதிகளில் அதிக உயரத்தில் காணப்படுகின்றன.
இவை மேற்குத் தொடர்ச்சி மலைகள் போன்ற சில பகுதிகளுக்கு குளிர்காலத்தில் வருவதாக கூறப்படுகிறது.
நடத்தையும், சூழலியலும்
[தொகு]கருந்தோள் பருந்து அதன் வாழுப் பரப்பில் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. இந்தியாவில் ஆண்டு முழுவதும் கூடு கட்டுவது குறிப்பிடப்பட்டாலும், இவை ஏப்ரல், மே மாதங்களில் இனப்பெருக்கம் செய்வதில்லை. ஆண் பறவைகள் தங்களுக்கான பிரதேசங்களை அமைத்துக்கொண்டு, மற்ற ஆண் பறவைகளின் போட்டியிலிருந்து அப்பகுதியைப் பாதுகாக்கின்றன. பெண் பறவைகள் ஆண் பறவைகளின் பிரதேசங்களுக்குள் செல்கிறன. ஆபிரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெண் பறவைகளை விட ஆண் பறவைகளே கூடுதல் எண்ணிக்கையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.[7] காதலூடாட்ட ஒலி மற்றும் துரத்தல்களுக்குப் பிறகு ஜோடிகள் உருவாகின்றன. பின்னர் இவை அடிக்கடி இணைகின்றன. சிறு மரங்களில் ஒன்பது மீட்டர் உயரத்துக்குள்ளாகவே கூடு கட்டுகின்றன. அதில் 3 அல்லது 4 முட்டைகள் இடப்படுகின்றன. கூடு கட்டுவதில் ஆணை விட பெண் அதிக முயற்சி எடுக்கிறது. முட்டைகள் வெளிர் நிறமாக அடர் சிவப்பு, புழுப்பு நிற புள்ளிகளுடன் இருக்கும். பெற்றோர் இரண்டும் அடைகாக்கும் ஆனால் குஞ்சுகள் குஞ்சு பொரிக்கும்போது, ஆண் பறவை உணவுக்காக அதிக நேரத்தை செலவிடுகிறது. பெண் பறவை துவக்கத்தில் குஞ்சுகளுக்கு உணவளிக்கிறது. சில சமயங்களில் கூட்டுக்கு அருகில் வேட்டையாடுகின்றன. ஆனால் பின்னர் குஞ்சுகளுக்கு ஆண் பறவையே உணவை அளிக்கும். இளம் பறவைகள் தானாக வேட்டையாக கற்கும் வரை அதாவது சுமார் 80 நாட்களுக்கு உணவிற்காக தந்தையையே சார்ந்து இருக்கும். முதலில் அமர்ந்த இடத்திலிருந்தும் பின்னர் பறக்கும் நிலையிலும் உணவை தந்தையிடம் பெறுகின்றன. இளம் பறவைகளின் மேல் பகுதியிலும் மார்பகத்திலும் சிவப்பு கலந்த பழுப்பு நிற இறகுகள் இருக்கும். இவை இளம் பறவைகளுக்கு ஓரளவு உருமறைப்பை வழங்குவதாக கருதப்படுகிறது.[4] இனப்பெருக்கம் முடிந்ததும், பெண் பறவைகள் பெரும்பாலும் புதிய பிரதேசங்களுக்குச் செல்கின்றன, சில சமயங்களில் இளம் குஞ்சுகள் முழுமையாள வளர்வதற்கு முன்பாக தாய் வெளியேறுகின்றது. இதனால் ஆண் பறவையே குஞ்சுகளுக்கு உணவளித்து குஞ்சுகளை வளர்க்கின்றது. ஆண், பெண் பறவைகள் கணிசமான நாடோடித்தனத்தைக் கொண்டுள்ளன.[7] பெரும்பாலான வேட்டையாடி பறவைகளைப் போலல்லாமல், இவை ஒரு ஆண்டில் பல குஞ்சுகளை வளர்க்கும் திறன் பெற்றவையாக இவை உள்ளன.[8]
இவற்றின் இரையில் வெட்டுக்கிளிகள், சிள்வண்டுகள் மற்றும் பிற புழு பூச்சிகள், பல்லிகள், கொறிணிகள் போன்றவை உள்ளன. காயமடைந்த பறவைகள், சிறிய பாம்புகள், தவளைகளும் இவற்றின் உணவாக பதிவாகியுள்ளன. கருந்தோள் பருந்து வேட்டையாடும் போது மெதுவாக பறக்கிறது, ஆனால் இது கரைவணை போல வட்டமிடும். பறந்துகொண்டே இரையை வேட்டையாடுவது அரிதான சந்தர்ப்பங்களில் அறியப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில், இவை உணவுக்காக சாலையோரங்களை விரும்புவதாகத் தோன்றுகிறது. இதனால் சில சமயங்களில் வாகனங்கள் மோதி இறக்கின்றன.
இந்தப் பறவைகள் 15 முதல் 35 (ஐரோப்பாவில் அதிக எண்ணிக்கையில் ) கொண்ட குழுக்களாக ஒரு பெரிய மரத்தில் ஒன்றுகூடுகின்றன. இவை மிகவும் அமைதியானவை. இவற்றின் பதிவுசெய்யப்பட்ட அழைப்புகளில் அதிக ஒலி எழுப்பும் சத்தம் அல்லது மென்மையான சீழ்கை ஆகியவை அடங்கும். அவை முக்கியமாக இனப்பெருக்க காலத்திலும், பறவைகள் தங்கும் இடத்திலும் ஒரி எழுப்புகின்றன. ஒரு வகை உருளைப்புழு, Physaloptera acuticauda, தென்னாப்பிரிக்காவில் உள்ள இனத்தின் ஒட்டுண்ணியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருந்தோள் பருந்தின் மென்மையான இறகுகளில் சில புல் விதைகள் ஒட்டிக்கொள்ள்கின்றன. அவை இவற்றினால் உதிர்க்கப்படலாம். இருப்பினும், அத்தகைய விதைகள் இவற்றின் இறக்கைகளில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2019). "Elanus caeruleus". IUCN Red List of Threatened Species 2019: e.T22695028A152521997. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T22695028A152521997.en. https://www.iucnredlist.org/species/22695028/152521997. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ René Louiche Desfontaines (1789). "Mémoire sur quelques nouvelles espèces d'oiseaux des côtes de Barbarie" (in fr). Histoire de l'Académie Royale des Sciences, Avec les Mémoires de Mathématique et de Physique: 503, Plate 15. https://biodiversitylibrary.org/page/28011233.
- ↑ Gill, Frank; Donsker, David, eds. (2017). "New World vultures, Secretarybird, kites, hawks & eagles". World Bird List Version 7.3. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 31 December 2017.
- ↑ 4.0 4.1 Negro, Juan J.; Bortolotti, Gary R.; Mateo, Rafael; García, Isabel M. (2009). "Porphyrins and pheomelanins contribute to the reddish juvenal plumage of black-shouldered kites". Comparative Biochemistry and Physiology Part B: Biochemistry and Molecular Biology 153 (3): 296–299. doi:10.1016/j.cbpb.2009.03.013. பப்மெட்:19351566.
- ↑ Negro, Juan J.; Pertoldi, Cino; Randi, Ettore; Ferrero, Juan J.; López-Caballero, José M.; Rivera, Domingo; Korpimäki, Erkki; Boal, Clint (2006-09-01). "Convergent evolution of Elanus kites and the owls". Journal of Raptor Research 40 (3): 222–225. doi:10.3356/0892-1016(2006)40[222:ceoeka]2.0.co;2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0892-1016.
- ↑ Balbontín, Javier; Negro, Juan José; Sarasola, José Hernán; Ferrero, Juan José; Rivera, Domingo (2008-10-01). "Land-use changes may explain the recent range expansion of the Black-shouldered Kite Elanus caeruleus in southern Europe" (in en). Ibis 150 (4): 707–716. doi:10.1111/j.1474-919x.2008.00845.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-919X. http://www.cecara.com.ar/web/wp-content/uploads/2008-Balbontin-et-al..pdf.
- ↑ 7.0 7.1 Mendelsohn, John M. (1983-03-01). "Social Behaviour and Dispersion of the Blackshouldered Kite". Ostrich 54 (1): 1–18. doi:10.1080/00306525.1983.9634437. பன்னாட்டுத் தர தொடர் எண்:0030-6525.
- ↑ Václav, Radovan (2012-01-01). "First observation of the black-winged kite Elanus caeruleus in Slovakia" (in en). Slovak Raptor Journal 6 (1): 27–30. doi:10.2478/v10262-012-0062-y. பன்னாட்டுத் தர தொடர் எண்:1337-3463.
- ↑ Mendelsohn, J. M. (1983). "Causes of mortality in Black-shouldered Kites.". Bokmakierie 35: 11–13.