கயானா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கயானா மக்கள்
கயானாவின் கொடி
மொத்த மக்கள்தொகை
அண். 1,250,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 கயானா       771,000
 ஐக்கிய அமெரிக்கா323,052[1]
 கனடா84,275[2]
 ஐக்கிய இராச்சியம்40,872[1]
 நெதர்லாந்து14,560[1]
 சுரிநாம்11,530[1]
 வெனிசுவேலா7,401[1]
 அன்டிகுவா பர்புடா6,038[3]
 பார்படோசு6,657[1]
 டிரினிடாட் மற்றும் டொபாகோ4,647[1]
 எசுப்பானியா5,197[1]
 பிரேசில்2,549[1]
 நெதர்லாந்து2,427[1]
 செயிண்ட். லூசியா2,111[1]
 பிரெஞ்சு கயானா4,000[4]
 சின்டு மார்தின்2,000[4]
மொழி(கள்)
ஆங்கிலம், கயானா கிரியோல், கரிபிய இந்துத்தானி, தமிழ், சீனம், போர்த்துக்கேயம், எசுப்பானியம், இடச்சு, பிரான்சியம், பழங்குடியினரின் மொழிகள்
சமயங்கள்
கிறித்தவம் (உரோமைக் கத்தோலிக்கம், சீர்திருத்தவாதிகள்), இந்து, இசுலாம், ராஸ்தஃபாரை, பகாய், பௌத்தம், ஆப்பிரிக்க-அமெரிக்க சமயங்கள், பாரம்பரிய ஆப்பிரிக்க சமயங்கள், சீன நாட்டுப்புற சமயங்கள் (தாவோயியம், கன்பூசியம்), அமெரிந்திய நாட்டுப்புற நம்பிக்கைகள்

கயானாவின் மக்கள், அல்லது கயானியர்கள் (Guyanese) பழங்குடியின பூர்வீகவாசிகள், இந்திய, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், அத்துடன் சிறுபான்மை சீன, ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என அழைக்கப்படுவோர் உட்பட பல்வேறு பின்னணிகளிலிருந்தும், கலாச்சாரங்களிலிருந்தும் வந்தவர்கள். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியர்கள் 39.8%, ஆப்பிரிக்க-கயானியர் 30.1%, கலப்பு இனம் (பெரும்பாலும் டக்லா) 19.9%, அமெரிந்தியர் 10.5%, ஏனையோர் 1.5% (போர்த்துகீசியர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் உட்பட).

தென் அமெரிக்காவின் வடக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கயானா, வரலாற்றுச் சிறப்புமிக்க பிரித்தானிய மேற்கிந்தியத் தீவுகளின் முக்கிய நிலமான கரிபியனின் ஒரு பகுதியாகும். இது சுரிநாம், திரினிடாட், டொபாகோ போன்ற கரிபியத் தீவு நாடுகளுடன் கலாச்சார ரீதியாக ஒத்திருக்கிறது. அத்துடன் இது கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாக இல்லாவிட்டாலும் கலாச்சார ரீதியாக ஒரு கரிபிய நாடாகும்.[5]

கயானாவின் தேசியப் பண் (கயானாவின் அன்பான நிலம், ஆறுகள், சமவெளிகள்), கயானாவை ஆப்பிரிக்க, இந்திய, சீன, போர்த்துகீசியம், ஐரோப்பிய மற்றும் அமெரிண்டிய மக்கள்[6] ஆகியோரைக் குறிக்க "ஆறு மக்களின் நிலம்" என்கிறது.[7]

மக்கள்[தொகு]

கயானாவில் உள்ள பழங்குடி மக்களைக் கூட்டாக அமெரிந்தியர்கள் என்று குறிப்பிடப்பட்டாலும், இவர்கள் பல தனித்துவமான பழங்குடியினர் அல்லது தேசங்களால் ஆனவர்கள். வாராவ், அரவாக், கரிபுகள், வபிசானா ஆகிய பழங்குடிகள் கயானாவில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்[8]

புதிய உலகில் தங்கத்தைத் தேடி ஐரோப்பியர்கள் கயானாவுக்கு வந்து, இறுதியில் கயானாவிலும் அமெரிக்காக்களிலும் குடியேறினர். டச்சுக்காரர் தொடங்கி பின்னர் ஆங்கிலேயர்கள் வரை, இவர்களின் மக்கள்தொகை எப்போதும் சிறுபான்மையினராக இருந்தபோதிலும், ஐரோப்பாவின் கலாச்சார இருப்பு கயானாவில் குறிப்பிடத்தக்க சக்தியாக இருந்து வருகிறது. பிரான்சியர், எசுப்பானியரும் இப்பகுதியில் உள்ளனர்.[9]

கயானாவின் தட்பவெப்பநிலை கரும்பு பயிரிட ஏற்றதாகக் கருதப்பட்டது, ஐரோப்பியர் அல்லது உள்ளூர் அமெந்தியர்களால் தொழிலாளர் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை, எனவே ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டனர். 1838-இல் அடிமை வணிகம் ஒழிக்கப்படும் வரை, அதிக அடிமைத்தனம் மற்றும் குறைந்த பிறப்பு விகிதம் பெருந்தோட்ட அடிமைகளைக் கொண்டு வருவதற்குத் துணையாக இருந்தது.[10] போர்த்துகீசிய, சீன மக்களுக்காக ஒப்பந்தத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர்,[11] ஆனால் அதிக எண்ணிக்கையான தொழிலாளர் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டனர்.

நாட்டின் பன்முகத்தன்மை பெருமைக்குரியதும் சவாலானதும் ஆகும்; இனரீதியிலான மோதல்கள் குறிப்பிடத்தக்க சமூக பதற்றத்திற்கு ஒரு மூலமாக உள்ளது. கயானாவில் இனவெறி தொழிலாளர்களின் கட்டுப்பாட்டிற்கு வேர்களாக உள்ளது. இன்மூலம், தோட்ட உரிமையாளர்கள் தமக்குக் கீழ்ப்படிந்த தொழிலாளர்களின் அடுக்கு சமூகத்தை பராமரிக்க முடிந்தது, அத்துடன் உயர்ந்த சமூக வர்க்கத்திற்கான போட்டியையும் கட்டுப்படுத்த முடிகிறது. சமூகத்தின் பல பிரிவுகள் சமயம், அரசியல், தொழில்கள் போன்ற இன வேறுபாட்டால் பிரிக்கப்பட்டுள்ளன.[10]

மொழி[தொகு]

ஆங்கில, கயானிய கிரியோல் மொழி பேசும் பெண்

பிரித்தானியக் குடியேற்றமாக மாறுவதற்கு முன்பு கயானா, டச்சு, பிரெஞ்சு ஆதிக்கவாதிகளால் குடியேற்றப்படுத்தப்பட்டதால், கயானாவின் பண்பாடு அதன் ஐரோப்பிய வரலாற்றைப் பிரதிபலிக்கிறது. கயானா (பிரித்தானிய ஆட்சியின் கீழ் பிரித்தானிய கயானா என அழைக்கப்பட்டது), 1966 இல் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுதலை பெற்றது, பின்னர் 1970 இல் குடியரசாக மாறியது. கயானாவின் 170 ஆண்டுகால பிரித்தானியக் குடியேற்ற வரலாற்றின் விளைவாக, இது உலக ஆங்கிலம்-பேசும் ஒரு பகுதியாகவும், ஆங்கிலம்-பேசும் கரிபியனின் துணைப் பகுதியாகவும் உள்ளது. தென் அமெரிக்காவில் உள்ள ஆங்கிலம் பேசும் ஒரே நாடாக இருந்தாலும், கயானாவில் உள்ள பெரும்பான்மையான மக்கள் முறைசாரா முறையில் கயானியக் கிரியோல் பேசுகிறார்கள். பிரித்தானிய ஆங்கில மொழி அனைத்து வணிகம், கல்வி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பொதுவாக உயர் மற்றும் மேல்-நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களால் தொடர்ந்தும் பேசப்படுகிறது.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Guyana – Emigrantes totales 2019" (in Spanish).{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Government of Canada, Statistics Canada (8 February 2017). "Census Profile, 2016 Census – Canada [Country] and Canada [Country]". www12.statcan.gc.ca.
  3. "Antigua and Barbuda::Statistics Division/Redatam Webserver | Statistical Process and Dissemination Tool".
  4. 4.0 4.1 "Immigrant and Emigrant Populations by Country of Origin and Destination".
  5. "Guyana – The World Factbook". www.cia.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  6. Agriculture, United States Congress House Committee on (1965) (in en). Amend and Extend the Sugar Act of 1948: Hearings Before the Committee on Agriculture, House of Representatives, Eighty-ninth Congress, First Session, on H.R. 10496. U.S. Government Printing Office. https://books.google.com/books?id=8BYdAAAAMAAJ&q=%22The+Land+of+Six+Peoples%22&pg=PA166. 
  7. Loza, Léna (2007-05-01). "Le Guyana: "Land of Six Peoples" ou "One People, One Nation" ?" (in fr). Caliban. French Journal of English Studies (21): 81–89. doi:10.4000/caliban.1872. பன்னாட்டுத் தர தொடர் எண்:2425-6250. http://journals.openedition.org/caliban/1872. 
  8. Menezes, Mary Noel (1979) (in en). The Amerindians in Guyana, 1803–73: A Documentary History. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7146-4030-3. https://books.google.com/books?id=UjKC3f6dCJUC&q=Amerindians+in+Guyana&pg=PA4. 
  9. "Guyana – BRITISH TAKE OVER". countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  10. 10.0 10.1 "Guyana – Ethnic Groups". countrystudies.us. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  11. "Hailing contributions of Chinese, President says new arrivals welcome". Stabroek News (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-01-13. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  12. "Of Creole language, dialect and literature". Stabroek News (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-05-13. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கயானா_மக்கள்&oldid=3862270" இலிருந்து மீள்விக்கப்பட்டது