உள்ளடக்கத்துக்குச் செல்

ராஸ்தஃபாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராஸ்தஃபாரை அல்லது ராஸ்தஃபாரி இயக்கம் (Rastafari movement) என்பது 1930களில் ஆப்பிரிக்காவை மையமாகக் கொண்டு யமேக்காவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சமய இயக்கம் ஆகும்.[1][2] இச்சமய பக்தர்கள் கடவுளை "ஜா" என்ற பெயரால் குறிப்பிடுகிறார்கள். முன்னாள் எதியோப்பிய மன்னர் முதலாம் ஹைலி செலாசியை (ஆட்சிக் காலம் 1930-1974) கடவுளின் அவதாரம் எனவும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகை, எனவும், தந்தையாம் கடவுள் (God the Father) எனவும் இவர்கள் நம்புகிறார்கள்.

ராஸ்தஃபாரிகள் எத்தியோபிய மன்னர் ஹைலி செலாசிக் கடவுளாக நம்புகின்றனர்.
"ட்ரெட்லாக்" தலைமுடியை வைத்துக்கொண்ட ஒரு ராஸ்தஃபாரியர்

இவ்வியக்கத்தின் உறுப்பினர்கள் ராஸ்தாசு எனவும், ராஸ்தஃபாரி எனவும் அழைக்கப்படுகிறார்கள். ராஸ்தஃபாரி வாழ்க்கை ராசுத்தாஃபாரினியம் எனவும் சிலரால் வழங்கப்படுகிறது.[3] ராஸ்தஃபாரி என்ற பெயர் ராஸ் தஃபாரி என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டது. ராஸ் என்பது தலைவர் என்பதைக் குறிக்கும். தஃபாரி என்பது மன்னர் ஹைலி செலாசியின் முதற் பெயர் ஆகும். ஜா (யாவே அல்லது ஜெஹோவா) என்பது கடவுளைக் குறிக்கும் விவிலியப் பெயர் ஆகும்.

ஆப்பிரோசென்ட்ரிக் மெய்யியல் என்பன இச்சமயத்தின் சில அடையாளங்கள் ஆகும். பாப் மார்லி மற்றும் பல்வேறு ரெகே இசைக் கலைஞர்களின் இசையால் இச்சமயம் புகழடைந்தது. இன்று யமேக்கா மக்களின் 5%-10% ராஸ்தஃபாரி சமயத்தை சேர்ந்தவர்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Buckser, Andrew; Glazier, Stephen D (2003). The anthropology of religious conversion – Google Books. Books.google.com. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7425-1778-3. பார்க்கப்பட்ட நாள் 2010-02-01.
  2. Beyer, Catherine. "Rastafari". About.com.
  3. Encyclopedia of African and African-American Religions p. 263 by Stephen D. Glazier, 2001
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஸ்தஃபாரை&oldid=3203470" இலிருந்து மீள்விக்கப்பட்டது