ஏதென்சை அகாமனிசியர் அழித்தல்
ஏதென்சை அகாமனிசியர் அழித்தல் | |||||||
---|---|---|---|---|---|---|---|
கிரேக்க பாரசீகப் போர்கள் பகுதி | |||||||
பெர்சர்சுட் அல்லது "பாரசீக இடிபாடுகள்" என்று அழைக்கப்படும் தொல்லியல் எச்சங்களின் ஒரு பகுதி: செர்க்சசின் படைகளால் ஏதென்சை அழித்ததன் எச்சங்கள். அகழ்வாய்வுக்குப் பிறகு 1866 இல் எடுக்கபட்ட ஒளிப்படம். |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
ஏதென்ஸ் | அகாமனிசியப் பேரரசு | ||||||
ஏதென்சு நகரை பாரசீகர்கள் அழித்தல் அல்லது ஏதென்சு நகரை அகாமனிசியர் அழித்தல் என்பது கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பு நடத்தபோது அழித்தொழிப்பு ஆகும். இது முதலாம் செர்கசின் அகாமனிசிய இராணுவத்தால் செய்யப்பட்டது. இந்த அழிப்பானது இரண்டு ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக, கிமு 480-479 என நடந்தது.
முதல் கட்டம்: முதலாம் செர்கஸ் (கிமு 480 )
[தொகு]கிமு 480 இல் தெர்மோபைலேச் சமரில் முதலாம் செர்கசின் வெற்றிக்குப் பிறகு, போயோட்டியா முழுவதும் அகாமனிசிய இராணுவத்தின் வசம் வீழ்ந்தது. செர்கசை எதிர்த்த இரண்டு நகரங்களான தெஸ்பியா மற்றும் பிளாட்டீயா ஆகியவை கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. அட்டிகாவும் படையெடுப்புக்கு இலக்கானது. இதனால் ஏதென்சு மக்கள் நேச நாட்டுக் கடற்படையின் உதவியுடன் ஏதென்சு நகரை காலிசெய்து சலாமிசுக்கு தப்பிச் சென்றனர். [1] பெலோபொன்னேசிய கூட்டாளிகள் கொரிந்தின் பூசந்தி முழுவதும் தற்காப்புக் கோட்டை ஒன்றைக் கட்டத் தொடங்கினர். [2]
ஏதென்சு முதன்முறையாக கிமு 480 செப்டம்பர் மாதம் வீழ்ந்தது. [3] அக்ரோபோலிசில் பாரசீகர்களைத் தடுத்து நிறுத்திய குறைந்த எண்ணிக்கையிலான ஏதெனியர்கள் இறுதியில் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர் ஏதென்சை எரிக்குமாறு செர்க்செஸ் உத்தரவிட்டார். [4] அக்ரோபோலிஸ் இடிக்கப்பட்டது , மேலும் ஏதெனாவின் பழைய கோயில் மற்றும் பழைய பார்த்தீனான் ஆகியவை அழிக்கப்பட்டன. [5]
- "பெர்சர்சுட்", அல்லது "பாரசீக இடிபாடு"
அகாமனிசியர்களால் அழிக்கப்பட்ட பல சிலைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை கூட்டாக " பெர்சர்சுட் " அல்லது "பாரசீக இடிபாடுகள்" என்று அழைக்கப்படுகின்றன:
-
அக்ரோபோலிஸ் அகழ்வாராய்ச்சி குழி, எரெக்தியத்தின் வடமேற்கில், தொன்மையான சிலைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
-
கிருதியோஸ் சிறுவன் பெர்சர்சுட்டில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
-
ஆன்டெனர் கோர், பெர்சர்சுட்டிலிருந்து மீட்கப்பட்டது.
-
சேதமடைந்த ஹெகாடோம்பெடன் பெடிமென்ட்டின் ஒரு பகுதி.
-
சேதமடைந்த மாஸ்கோபோரோஸ்.
-
சேதமடைந்த பெப்லோஸ் கோர்.
-
சேதமடைந்த ராம்பின் ரைடர் .
-
பாரசீகர்களால் அக்ரோபோலிஸ் கைப்பற்றப்படுவது
செப்டம்பரில், சலாமிஸ் சமரில் கிரேக்கர்களிடம் தனது கடற்படையின் பெரும்பகுதியை முதலாம் செர்க்சஸ் இழந்தார். பாரசீகர்களின் கடற்படையின் மேன்மை குறைந்ததால், கிரேக்கர்கள் ஹெலஸ்பாண்டிற்குச் சென்று பாண்டூன் பாலங்களை அழிக்கக்கூடும் என்று செர்க்சஸ் அஞ்சினார். [6] எரோடோடசின் கூற்றுப்படி, பாரசீக தளபதியானமார்தோனியசு கிரேக்கத்திலேயே தனக்கு வேண்டிய துருப்புகளை மட்டும் வைத்திருந்து வெற்றியை ஈட்டெடுக்க முன்வந்தார். மேலும் பெரும்பகுதி இராணுவத்துடன் ஆசியாவிற்கு பின்வாங்குமாறு மன்னர் செர்க்சுக்கு அவர் அறிவுறுத்தினார். [7] பாரசீகப் படைகள் அனைத்தும் அட்டிகாவை கைவிட்டன, மார்தொனியஸ் போயோட்டியா மற்றும் தெஸ்சீலியில் குளிர்காலத்தில் இருந்தார். [8]
சில ஏதெனியர்கள் குளிர்காலத்தில் தங்களது எரிந்த நகரத்திற்கு திரும்பினர். [8] கிமு 479 சூன் மாதத்தில் மார்தோனியசின் இரண்டாவது படையெடுப்பிற்கு முன்னால் அவர்கள் மீண்டும் வெளியேற வேண்டி இருந்தது. [3]
இரண்டாம் கட்டம்: மார்தோனியசு (கிமு 479)
[தொகு]மார்தோனியஸ் வட கிரேக்கத்தில் எஞ்சியுள்ள அகாமனிசிய துருப்புக்களுடன் இருந்தார். அவர் கிரேக்கத்தில் தன்னுடன் இருக்க திறமை மிக்க துருப்புக்களைக் கொண்டிருந்தார். குறிப்பாக இறாவப்படை, சிதியர்கள், மீடியர்கள், பாக்டிரியர்கள், இந்தியர்கள் போன்றோர்கள் கொண்ட படைகளைக் கொண்டிருந்தார். [10]
மார்தோனியசு தெசலியில் இருந்தார். பூசந்தி மீதான தாக்குதல் அர்த்தமற்றது என்பதை அறிந்திருந்தார். அதே நேரத்தில் நேச நாடுகள் பெலொப்பொனேசியாவுக்கு வெளியே இராணுவத்தை அனுப்ப தயாராக இல்லை. [13]
ஏதெனியர்களுக்கு அமைதி, சுய-அரசு மற்றும் பிராந்திய விரிவாக்கம் ஆகியவற்றை வழங்குவதாக உறுதி அளிப்பதன் மூலம் அங்கு நிலவிவந்த முட்டுக்கட்டையை உடைக்க மார்தோனியஸ் முயன்றார் (அதன் மூலம் ஏதென்சின் கடற்படையை நேச நாடுகளின் படைகளிடமிருந்து பிரிக்கும் நோக்கத்துடன்). இதற்கு மாசிடோனின் முதலாம் அலெக்சாந்தரை இடைத்தரகராகப் பயன்படுத்தினார். [14] ஏதெனியர்கள் இந்த வாய்ப்பை நிராகரித்தனர். [14] இதனால் பாரசீக படையெடுப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ள ஏதெனியர்கள் மீண்டும் நகரத்தைவிட்டு மீண்டும் வெளியேறினர். பாரசீகர்கள் தெற்கே அணிவகுத்துச் சென்று அதை மீண்டும் கைப்பற்றினர். [14]
மார்தோனியஸ் நகரத்தை மோசமான அழித்தார். மேலும் இந்த இரண்டாம் கட்டத்தில் நகரம் உண்மையிலேயே தரைமட்டமாக்கப்பட்டது என்று சில ஆசிரியர்கள் கருதினர். எரோடோடஸின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தைகள் முறிந்த பிறகு:
(மார்தோனியஸ்) ஏதென்சை எரித்தார், மேலும் அங்கி இருந்த சுவர்கள், வீடுகள், கோயில்கள் என அனைத்து கட்டுமானங்களையும் முற்றிலும் இடித்து தள்ளினார்.
புனரமைப்பு
[தொகு]இதையடுத்து நடந்த பிளாட்டீயா சமரில் அகாமனிசியர்கள் தீர்க்கமாக தோற்கடிக்கப்பட்டு, கிரேக்கர்கள் ஏதென்சை மீட்டனர். அக்ரோபோலிசில் புதிய பார்த்தினன் உட்பட அனைத்தையும் அவர்கள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. புனரமைப்புக்கான இந்தப் பணிகள் கிமு 479 இலையுதிர்காலத்தில் தெமிஸ்ட்டோக்கிளீசால் வழிநடத்தப்பட்டன. அவர் அக்ரோபோலிசின் சுவர்களை வலுப்படுத்த பழைய பார்த்தீனான் மற்றும் ஏதனாவின் பழைய கோவிலின் இடிபாடுகளை எடுத்து பயன்படுத்தினார். அவை அக்ரோபோலிசின் வடக்கு சுவரில் இன்றும் காணப்படுகின்றன. [16] [17] கோவில்களை புனரமைக்கும் பணிக்கு முன், மதில்களை சரிசெய்து, நகரின் பாதுகாப்பை கட்டியெழுப்புவது அவரது முன்னுரிமையாக இருந்திருக்கலாம். [18] குறிப்பாக தெமிஸ்டோகிளீஸ் அழிக்கப்பட்ட கோயில்களின் இடிபாடுகளையும் பயன்படுத்தி அக்ரோபோலிசின் வடக்கு சுவரைக் கட்டியவராகக் கருதப்படுகிறார். அதே சமயம் தெற்குச் சுவரின் பிற்கால கட்டிடத்துடன் சிமோன் தொடர்புடையவர். [19]
தெமிஸ்டோகிள்சின் பெயரால் அழைக்கப்பட்டட தெமிஸ்ட்டோக்லீன் மதில் சுவர், பாரசீகத்துடனான போருக்குப் பிறகு, எதிர்கால படையெடுப்புகளிலிருந்து பாதுகாக்கும் நம்பிக்கையில் கட்டப்பட்டது. இந்த கட்டிடப் பணிகளில் முந்தைய மோதலின் அழிவுகளின் எச்சங்களை மிகுதியாக பயன்படுத்தி கட்டப்பட்டது.
30 ஆண்டுகளுக்கும் மேலாக காலம் கடந்த பிறகு, பார்த்தினன் கோயில் பெரிக்கிளீசால் மீண்டும் கட்டப்பட்டது. ஒருவேளை அகாமனிசியர்களால் அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்டக்கூடாது என்ற சபதம் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டிருக்கலாம்.
-
அக்ரோபோலிஸின் வடக்குச் சுவரில் தெமிஸ்டோகிளாசால் கட்டப்பட்ட பழைய ஏதெனா கோயிலின் கட்டடக்கலை எச்சங்கள்.
-
பழைய பார்த்தீனானின் கோயிலின் தூண்களின் துண்டுகள், அக்ரோபோலிசின் வடக்குச் சுவரில், தெமிஸ்டோகிளாசால் மீண்டும் பயன்படுத்தப்பட்டது.
-
பழைய பார்த்தீனான் (கருப்பு நிறத்தில்) அகாமனிசியர்களால் அழிக்கப்பட்டது, பின்னர் பெரிக்கிளீசால் கிமு 438 இல் (சாம்பல் நிறத்தில்) மீண்டும் கட்டப்பட்டது.
-
தெமிஸ்ட்டோக்லீன் சுவரின் இடிபாடுகள்.
பழிவாங்கும் வகையில் பெர்செபோலிஸ் அரண்மனை எரிப்பு
[தொகு]கிமு 330 இல், பேரரசர் அலெக்சாந்தரால் அகாமனிசியப் பேரரசு கைபற்றப்பட்ட பிறகு அகாமனிசிய வம்சத்தின் முக்கிய வசிப்பிடமான பெர்செபோலிசின் அரண்மனையை ஒரு குடி விருந்துக்குப் பிறகு அலெக்சாந்தரின் தோழியான தாய்சின் தூண்டுதலின் பேரில் எரித்தார். புளூட்டாக் மற்றும் தியோடோரசின் கூற்றுப்படி, இது கிமு 480 இல் பாரசீகப் போர்களின் போது ஏதென்ஸில் (தற்போதைய பார்த்தினன் இடம்) அக்ரோபோலிஸில் இருந்த பழைய அதீனா கோவிலை செர்கஸ் எரித்ததற்குப் பழிவாங்கும் நோக்கம் இருந்தது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Herodotus VIII, 41
- ↑ Holland, p. 300
- ↑ 3.0 3.1 3.2 Lynch, Kathleen M. (2011). The Symposium in Context: Pottery from a Late Archaic House Near the Athenian Agora (in ஆங்கிலம்). ASCSA. pp. 20–21, and Note 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780876615461.
- ↑ Holland, pp. 305–306
- ↑ Barringer, Judith M. (2010). Periklean Athens and Its Legacy: Problems and Perspectives (in ஆங்கிலம்). University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780292782907.
- ↑ Herodotus VIII, 97
- ↑ Herodotus VIII, 100
- ↑ 8.0 8.1 Holland, pp. 327–329
- ↑ LacusCurtius • Herodotus — Book VIII: Chapters 97‑144. p. Herodotus VIII, 113.
- ↑ 10.0 10.1 Tola, Fernando (1986). "India and Greece before Alexander" (in en). Annals of the Bhandarkar Oriental Research Institute 67 (1/4): 165.
- ↑ LacusCurtius • Herodotus — Book IX: Chapters 1‑89. pp. IX–31/32.
- ↑ The Histories (in ஆங்கிலம்). Penguin UK. 2013. p. 484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780141393773.
- ↑ Holland, pp. 333–335
- ↑ 14.0 14.1 14.2 Holland, pp. 336–338
- ↑ LacusCurtius Herodotus Book IX: Chapter 13.
- ↑ Shepherd, William (2012). Plataea 479 BC: The most glorious victory ever seen (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781849085557.
- ↑ D'Ooge, Martin Luther (1909). The acropolis of Athens. New York : Macmillan.
- ↑ D'Ooge, Martin Luther (1909). The acropolis of Athens. New York : Macmillan.
- ↑ D'Ooge, Martin Luther (1909). The acropolis of Athens. New York : Macmillan. p. 66.