சலாமிஸ் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலாமிஸ்
Σαλαμίνα
சலாமிசின் தோற்றம்
சலாமிசின் தோற்றம்
அமைவிடம்

No coordinates given

Location within the region
அரசாண்மை
நாடு: கிரேக்கம்
நிர்வாக வலயம்: அட்டிகா
மண்டல அலகு: தீவுகள்
மேயர்: Isidora Nannou  (independent)
மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் (as of 2011)[1]
நகராட்சி
 - மக்கள்தொகை: Expression error: Unrecognized punctuation character ",".
 - பரப்பளவு: 96.16 km2 (37 sq mi)
 - அடர்த்தி: Expression error: Unrecognized punctuation character ",". /km2 (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
Other
நேர வலயம்: EET/EEST (UTC+2/3)
அஞ்சல் குறியீடு: 189 xx
தொலைபேசி: 21
வாகன உரிமப் பட்டை: Y
வலைத்தளம்
www.salamina.gr

சலாமிஸ் (Salamis Island, SAL-ə-miss ; கிரேக்கம்: Σαλαμίνα‎ , பண்டைக் கிரேக்கம்Σαλαμίς Salamís ) என்பது சரோனிக் வளைகுடாவில் உள்ள மிகப்பெரிய கிரேக்க தீவு ஆகும். இது பைரேயஸ் கடற்கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் (ஒரு கடல் மைல்) மற்றும் நடு ஏதென்சுக்கு மேற்கே 16 கிமீ (8+1⁄2 nmi) தொலைவில் உள்ளது. இதன் முக்கிய நகரமான, சலாமினா, சரோனிக் வளைகுடாவில், சலாமிஸ் விரிகுடாவில் பிறையின் மேற்கு நோக்கிய மையப்பகுதியில் அமைந்துள்ளது. தீவின் கிழக்குப் பகுதியில் அதன் முக்கிய துறைமுகமான பலூக்கியா உள்ளது. இது ஏதென்ஸ் துறைமுகமான பைரேயசுக்கு அடுத்தபடியாக கிரீஸில் அளவில் இரண்டாவதாக உள்ளது.

நிலவியல்[தொகு]

சலாமிஸ் தீவின் வரைபடம்

சலாமிஸ் 93 km2 (36 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மிக உயரமான இடம் 404 m (1,325 அடி) கொண்ட மவ்ரோவூனி ஆகும் . சலாமிஸ் தீவின் பெரும் பகுதி பாறைகள் மற்றும் மலைகள் நிறைந்தது. தீவின் தெற்குப் பகுதியில் ஒரு பைன் காடு அமைந்துள்ளது. இது மேற்கு அட்டிகாவில் அசாதாரணமானது. துரதிர்ஷ்டவசமாக, இந்த காடு அடிக்கடி தீக்கு இரையாகிறது.[2] தீவின் உட்பகுதியில் வசிப்பவர்கள் முக்கியமாக வேளாண் துறை சார்ந்தவர்களாக உள்ளனர். சலாமிசின் பெரும்பான்மையான மக்கள் கடல்சார் தொழில்களில் (மீன்பிடித்தல், படகுகள், கப்பல் கட்டும் தளங்கள்) ஈடுபடுகின்றனர் அல்லது ஏதென்சுக்கு வேலைக்குச் செல்கிறார்கள்.[3][4] கடல்சார் தொழிலானது தீவின் வடகிழக்கு கடற்கரையில் பலூக்கியா துறைமுகத்தில் (Παλούκια) முக்கியமாக உள்ளது. அங்கு கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதிக்கான படகு சேவைகள் உள்ளன. மேலும் ஆம்பெலக்கியாவின் கப்பல்துறையானது கினோசோரா தீபகற்பத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

ஏதென்ஸ் நிலப்பரப்பில் இருந்து விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் சலாமிஸ் தீவுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலாவின் உச்ச பருவத்தில் இதில் வாழும் மக்கள் தொகையானது 300,000 ஆக உயர்கிறது. என்றாலும் இதில் வாழும் நிரந்தர குடிமக்களின் எண்ணிக்கை 31,000 ஆகும்.[2] தீவு முழுவதும் பல சிற்றுண்டிசாலைகள், குடிப்பகங்கள், உணவகங்கள், நுகர்வோர் பொருட்களுக்கான கடைகளுடன் வலுவான சேவைத் துறையைக் கொண்டுள்ளது. தீவின் தெற்கில், துறைமுகத்துக்கு அப்பால், அயன்டியோ, மரூடி, பெரனி, பெரிஸ்டீரியா, கொலோன்ஸ், சாட்டர்லி, செலினியா மற்றும் கனகியா போன்ற நல்ல நீச்சல் கடற்கரைகள் கொண்ட மிகுதியான வளர்ச்சியடையாத பகுதிகள் உள்ளன.[5]

குறிப்புகள்[தொகு]

  1. Detailed census results 2011 (கிரேக்கம்)
  2. 2.0 2.1 Polyxeni Athanassoulia (September 7, 2006). "Salamina, so near yet so unknown". Kathimerini. Archived from the original on March 18, 2008.
  3. "Salamis". Howstuffworks. Archived from the original on March 11, 2008.
  4. "Salamis official website". Archived from the original on February 22, 2009.
  5. "Salamina". Anatropes. Archived from the original on August 20, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலாமிஸ்_தீவு&oldid=3476540" இலிருந்து மீள்விக்கப்பட்டது