உள்ளடக்கத்துக்குச் செல்

போயோட்டியா

ஆள்கூறுகள்: 38°25′N 23°05′E / 38.417°N 23.083°E / 38.417; 23.083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போயோட்டியா
Περιφερειακή ενότητα Βοιωτίας
பிராந்திய அலகு
போயோட்டியாவின் நகராட்சிகள்
போயோட்டியாவின் நகராட்சிகள்
Boeotia within Greece
Boeotia within Greece
ஆள்கூறுகள்: 38°25′N 23°05′E / 38.417°N 23.083°E / 38.417; 23.083
Countryகிரேக்கம்
பிராந்தியம்நடு கிரேக்கம்
தலைநகரம்லிவாடியா
பரப்பளவு
 • மொத்தம்3,211 km2 (1,240 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,17,920
 • அடர்த்தி37/km2 (95/sq mi)
நேர வலயம்ஒசநே+2
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்)
அஞ்சல் குறியீடு
32x xx, 190 12
தொலைபேசி குறியீடு226x0
ஐஎசுஓ 3166 குறியீடுGR-03
வாகன பதிவு எண்ΒΙ
இணையதளம்www.viotia.gr

போயோட்டியா (Boeotia, bee-OH-sh(ee-)ə ), சில சமயங்களில் Boiotia அல்லது Beotia ( கிரேக்கம்: Βοιωτία‎, முன்பு Cadmeis என அழைக்கப்பட்டது.) என்பது கிரேக்கத்தின் பிராந்திய அலகுகளில் ஒன்றாகும். இது நடு கிரேக்க பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும். இதன் தலைநகரம் லிவாடியா, பெரிய நகரம் தீப்ஸ் ஆகும்.

பொயோட்டியா என்பது கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பண்டைய கிரேக்கத்தின் ஒரு பகுதியாகும்.

நிலவியல்

[தொகு]
பண்டைய போயோட்டியா வரைபடம்

கொரிந்து வளைகுடாவின் கிழக்குப் பகுதியின் வடக்கே போயோட்டியா அமைந்துள்ளது. இது யூபோயா வளைகுடாவில் ஒரு குறுகிய கடற்கரையையும் கொண்டுள்ளது. இது தெற்கில் மெகாரிஸ் (இப்போது மேற்கு அட்டிகா ), தென்கிழக்கில் அட்டிகா, வடகிழக்கில் யூபோயா, வடக்கில் ஓபன்டியன் லோக்ரிஸ் (இப்போது ஃபிதியோடிசின் ஒரு பகுதி), மேற்கில் ஃபோசிஸ் ஆகியவற்றை எல்லையாக கொண்டுள்ளது.

போயோட்டியாவின் முக்கிய மலைத்தொடர்களாக மேற்கில் பர்னாசஸ் மலை, தென்மேற்கில் எலிகான் மலை, தெற்கில் சித்தாரோன், கிழக்கில் பர்னிதா போன்றவை உள்ளன. இதன் மிக நீளமான ஆறான செபிசஸ், மத்தியப் பகுதியில் பாய்கிறது, அங்கு போயோட்டியாவின் பெரும்பாலான பகுதிகள் கடல்மட்டத்தைவிட தாழ்வான பகுதிகளாக உள்ளன.

கோபாய்ஸ் ஏரியானது போயோட்டியாவின் மையத்தில் உள்ள ஒரு பெரிய ஏரியாகும். இல்கி ஏரி தீப்ஸ் அருகே உள்ள ஒரு பெரிய ஏரியாகும்.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போயோட்டியா&oldid=3406247" இலிருந்து மீள்விக்கப்பட்டது