உள்ளடக்கத்துக்குச் செல்

யூபோயா

ஆள்கூறுகள்: 38°30′N 24°00′E / 38.500°N 24.000°E / 38.500; 24.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூபோயா
உள்ளூர் பெயர்: Εύβοια
ஆடிப்சோசின் ஒரு தோற்றம்
புவியியல்
ஆள்கூறுகள்38°30′N 24°00′E / 38.500°N 24.000°E / 38.500; 24.000
தீவுக்கூட்டம்ஏஜியன் தீவுகள்
பரப்பளவு3,684 km2 (1,422 sq mi)
உயர்ந்த ஏற்றம்1,743 m (5,719 ft)
உயர்ந்த புள்ளிடிர்ஃபி
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகை191,206
அடர்த்தி54 /km2 (140 /sq mi)
மேலதிக தகவல்கள்
அஞ்சல் குறியீடு34x xx
தொலைபேசி குறியீடு(கள்)22x0
வாகனப் பதிவுXA
அதிகாரபூர்வ இணையதளம்www.naevias.gr

யூபோயா (Euboea, yoo-BEE -ə) அல்லது Evia, EH-vee ; கிரேக்கம்: ΕύβοιαEvia ; பண்டைக் கிரேக்கம்Εὔβοια Euboia) என்பது கிரேக்க தீவு ஆகும். இது கிரேக்கத்தின் கிரீட்டிற்கு அடுத்து பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் இரண்டாவது பெரிய தீவு ஆகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பகுதியான போயோட்டியாவிலிருந்து குறுகிய யூரிபஸ் நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளது ( நீரிணையின் அகலம் ஒரு இடத்தில் 40 மீ (130 அடி) அகலம் மட்டுமே உள்ளது). பொதுவாக இத்தீவு நீண்டும் அகலத்தில் குறுகியும் உள்ளது. தீவானது சுமார் 180 கிமீ (110 மைல்) நீளம் கொண்டது. மேலும் 50 கிமீ (31 மைல்) முதல் 6 கிமீ (3.7 மைல்) வரை அகலத்தில் மாறுபடுகிறது. இது புவியியல் ரீதியாக வடமேற்கிலிருந்து தென்கிழக்கு வரை நீண்டு உள்ளது. மேலும் இதன் நீளம் முழுவதும் மலைத்தொடர் ஒன்று நீண்டு செல்கிறது. இது கிழக்கில் தெசலியை இணைக்கும் சங்கிலித் தொடரின் ஒரு பகுதியாகும், மேலும் ஆன்ட்ரோஸ், டினோஸ், மைகோனோஸ் ஆகிய உயரமான தீவுகள் யூபோயாவுக்கு தெற்கே தொடர்கின்றன. [1]

இது யூபோயாவின் பெரும்பாலான பிராந்திய அலகுகளை கொண்டுள்ளது. இதில் ஸ்கைரோஸ் மற்றும் கிரேக்க நிலப்பகுதியின் ஒரு சிறிய பகுதியும் அடங்கும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூபோயா&oldid=3399777" இலிருந்து மீள்விக்கப்பட்டது