உள்ளடக்கத்துக்குச் செல்

தெமிஸ்ட்டோக்ளீஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெமிஸ்ட்டோக்ளீஸ்
தெமிஸ்ட்டோக்ளீசின் எர்ம் சிற்பம் (1875 விவரிப்பு)
சுதேசியப் பெயர்
Θεμιστοκλῆς
பிறப்புகி.மு. 524 [1][2]
Frearrioi (modern Feriza close to Anavyssos)
இறப்புகி.மு. 459 ( 64–65 வயதில்)[1]
மக்னீசியா ஆன் தி மீண்டர்
சார்புஏதென்ஸ் (to c. 471 BC)
அகாமனிசியப் பேரரசு (469–459 BC)
தரம்ஏதேனியன் ஸ்ரடிகெஸ் (தளபதி)
மக்னீசியாவுக்கான அகாமனிசிய ஆளுநர்
போர்கள்/யுத்தங்கள்கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பு

கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பு

தெமிஸ்டோக்ளீஸ் (Themistocles, கிரேக்கம் : கிரேக்கம்: Θεμιστοκλῆς  ; c. 524 – 459 கி.மு.) [1][2] என்பவர் ஒரு ஏதெனிய அரசியல்வாதி மற்றும் தளபதி ஆவார். ஏதெனிய சனநாயகத்தின் ஆரம்ப ஆண்டுகளில் முக்கியத்துவம் பெற்ற பிரபுத்துவ வர்க்கத்தைச் சேராத அரசியல்வாதிகளின் புதிய பிரிவினரில் இவரும் ஒருவர். ஒரு அரசியல்வாதியாக, தெமிஸ்டோக்கிள்ஸ் ஒரு ஜனரஞ்சகவாதியாக இருந்தார். அடித்தட்டு ஏதெனியர்களின் ஆதரவைப் பெற்றவாக இருந்தார். பொதுவாக ஏதெனிய மேல்தட்டு வர்கத்தினரான பிரபுக்களுடன் முரண்பட்டடவராக இருந்தார். கி.மு. 493 இல் ஆர்கோனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏதென்சின் கடற்படை சக்தியை அதிகரிக்க இவர் அரசு நிர்வாகத்தை சம்மதிக்க வைத்தார். கிரேக்கத்தின் மீனாத முதல் பாரசீக படையெடுப்பின் போது இவர் மராத்தான் போரில் [3] (கிமு 490) போராடினார். மேலும் அந்த போரில் பத்து ஏதெனியன் ஸ்ரடிகெஸ் எனப்படும் தளபதிகளில் ஒருவராக இருந்திருக்கலாம்.

மராத்தான் போருக்கு பிந்தைய ஆண்டுகளிலும், கிமு 480-479 இரண்டாவது பாரசீகப் படையெடுப்பிற்கு முன்னும், தெமிஸ்டோகிள்ஸ் ஏதென்சின் மிக முக்கியமான அரசியல்வாதியாக ஆனார். இவர் தொடர்ந்து வலுவான ஏதெனியன் கடற்படையின் தேவைக்காக வாதிட்டார். மேலும் கிமு 483 இல் 200 ட்ரைரீம்கள் எனப்படும் மூவரித்தோணிகள் கொண்ட கடற்படையை உருவாக்க ஏதெனியர்களை வற்புறுத்தினார். மீண்டும் பாரசீகர்கள் படையெடுத்து வரும்போது இவை முக்கியமாக தேவைப்படும் என்றார். பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பின் போது, கிமு 480 இல் ஆர்ட்டெமிசியம் மற்றும் சலாமிஸ் போர்களில் கிரேக்க நட்பு கடற்படைக்கு இவர் திறம்பட தலைமைதாங்கினார். இவரது வியூகத்தின் காரணமாக, கிரேக்க நேச நாடுகள் பாரசீக கடற்படையை சலாமிஸ் நீரிணையில் வெற்றிகரமாக வசப்படுத்தியது. மேலும் அங்கு கிடைத்த தீர்க்கமான கிரேக்க வெற்றியானது போரில் திருப்புமுனையாக அமைந்தது. பிளாட்டியா தரைப் போரில் பாரசீகத் தோல்விக்குப் பிறகு அடுத்த ஆண்டு நடந்த படையெடுப்பு உறுதியாக முறியடிக்கப்பட்டது.

ஏதெனியர்கள் தெமிஸ்டோகிள்ஸின் வழிகாட்டுதலின் கீழ் தங்கள் நகரத்தை மீண்டும் கட்டியெழுப்புகின்றனர்.

பாரசீகப் போர்களில் கிரேக்கர்கள் பெருவெற்றியை அடைந்த பிறகு, போருக்கு சென்றிருந்த ஏதெனியர்கள் ஏதென்சுக்கு திரும்பினர். பாரசீகர்களால் பாழாக்கப்பட்டிருந்த ஏதென்சை கி.மு. 479 இலையுதிர் காலத்தில் மறு நிர்மாணம் செய்யும் பணியில் தெமிஸ்டோகிள்ஸின் வழிகாட்டுதலின் கீழ் ஈடுபட்டனர்.[4][5] ஆனால் அதற்கு முன்னதாக நகரத்தை அரண் செய்வது முக்கியம் என்று தெமிஸ்ட்டோக்ளீஸ் கருதினார். இவரது கருத்தை ஏற்ற மக்களை சிதிலமாடைந்த நகரின் மதில் சுவரை அகற்றிவிட்டு நகரை மேலும் விரிவாக்க ஏதுவாக இன்னும் வெளித்தள்ளி மதிலை அமைக்கும் பணிகளை முடுக்கினார். இச்செய்தி எசுபார்த்தாவுக்கு எட்டியது. உடனே அது ஏதென்சு அரண் அமைப்பதை எதிர்த்தது. கோட்டைச் சுவரின் பணிகளை விரைந்து முடிக்க மக்களை தெமிஸ்ட்டோக்ளீஸ் ஏவினார். பின்னர் எசுபார்டான்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ஸ்பார்டாவுக்கு தூதராக சென்றார். அங்கு, கட்டிட வேலைகள் எதுவும் நடைபெறவில்லை என்று அவர்களுக்கு உறுதியாக கூறினார். மேலும் அதை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு தூதுக்குழுவை அங்கு அனுப்பி உண்மை நிலையை அறிந்து கொள்ளளலாம் என கூறினார்.[6] தூதர்கள் வருவதற்குள், ஏதெனியர்கள் கோட்டைய்யை கட்டி முடித்துவிட்டனர். வேலை நடப்பதை பார்வையிட வந்த தூதர்கள் கோட்டைகள் இருந்து வெளியேறாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.[6] இந்த முறையில் எசுபார்ட்டன்களை தாமதப்படுத்துவதன் மூலம், தெமிஸ்ட்டோக்ளீஸ் ஏதெனியர்களுக்கு நகரத்தை வலுப்படுத்த போதுமான நேரம் கிடைக்குமாறு செய்தார். இதனால் ஏதென்சின் மறு கட்டமைப்பைத் தடுக்கும் நோக்கத்தில் எசுபார்டன்களின் தாக்குதலைத் தடுத்தார்.[6] மேலும், எசுபார்டான்கள் தங்கள் தூதர்கள் விடுவிக்கப்படுவதற்காக தெமிஸ்ட்டோக்ளீசை திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயினர்.[5][6] இருப்பினும், இந்த செயல் தெமிஸ்டோக்கிளீசின் மீதான எசுபார்டன்களின் அவநம்பிக்கையின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. மேலும் ஏதென்சிலிருந்து ஐந்து கல் தொலைவில் பிரேயஸ் என்ற இடத்தில் ஒரு துறைமுகத்தையும் பலப்படுத்தினார்.

போர் முடிவுக்கு வந்த பிறகு, தெமிஸ்டோக்கிள்ஸ் ஏதெனியன் அரசியல்வாதிகளிடையே தன் முக்கியத்துவத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் ஏதென்சை இராணுவ ரீதியாக மேலும் வலுப்படுத்த உத்தரவிட்டதன் மூலம் எசுபார்த்தாவின் பகையை வளர்த்தார். மேலும் இவரது ஆணவம் இவரை ஏதெனியர்களிடமிருந்து அந்நியப்படுத்தத் தொடங்கியது. கி.மு. 472 அல்லது கி.மு. 471 இல் இவர் ஒதுக்கிவைக்கபட்டு ஆர்கோசால் நாடுகடத்தப்பட்டார். எசுபார்த்தன்களுக்கு இப்போது தெமிஸ்டோக்கிள்சை அழிக்க ஏற்ற நேரமாக கருதினர். மேலும் கிமு 478 இல் அவர்களது தளபதியான பௌசானியாசின் தேசத்துரோக சதியில் இவர் சிக்கவைக்கப்பட்டார். இதனால் தெமிஸ்டோகிள்ஸ் கிரேக்கத்திலிருந்து தப்பி ஓடினார். மாசிடோனின் முதலாம் அலெக்சாண்டர் (கி.மு. 498-454) இவர் சின்ன ஆசியாவுக்குச் செல்வதற்கு முன்பு இவருக்கு தற்காலிகமாக பிட்னாவில் அடைக்கலம் கொடுத்தார். அங்கு இவர் பாரசீக மன்னர் முதலாம் அர்தசெராக்சஸ் (ஆட்சி காலம் கிமு 465-424 ) ஆதரவைப் பெற்றார். இவர் மக்னீசியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், மேலும் இவரது வாழ்நாள் முழுவதும் அங்கு வாழ்ந்தார்.

தெமிஸ்டோகிள்ஸ் கி.மு. 459 இல் இறந்தார். அது இயற்கை காரணங்களால் இருக்கலாம். [1][7] இவரது மரணத்திற்குப் பின் இவரது நற்பெயருக்கு மறுவாழ்வளிக்கப்பட்டது. மேலும் இவர் ஏதெனியன் (பொதுவாக கிரேக்க) வீரராக மீண்டும் போற்றபட்டார். புளூட்டாக் விவரிப்பில், பாரசீக அச்சுறுத்தலில் இருந்து "கிரேக்கம் தப்பி வெற்றிபெற ஒரு சிறந்த கருவியாக இருந்த மனிதர்" என்று தெமிஸ்டோக்கிள்ஸ் இன்னும் நியாயமான முறையில் கருதப்பட்டடார். இவரது கடற்படைக் கொள்கைகள் ஏதென்சிலும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் கடற்படை சக்தியானது ஏதெனியன் பேரரசு மற்றும் பொற்காலத்தின் அடித்தளமானது . [8]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Hornblower, Simon; Spawforth, Antony; Eidinow, Esther (2014). The Oxford Companion to Classical Civilization (in ஆங்கிலம்). OUP Oxford. p. 1506. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-101676-9.
  2. 2.0 2.1 Brice, Lee L. (2012). Greek Warfare: From the Battle of Marathon to the Conquests of Alexander the Great (in ஆங்கிலம்). ABC-CLIO. p. 176. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-070-6.
  3. Plutarch Aristides 5.3
  4. Shepherd, William (2012). Plataea 479 BC: The most glorious victory ever seen (in ஆங்கிலம்). Bloomsbury Publishing. p. 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781849085557.
  5. 5.0 5.1 Plutarch, Themistocles, 19
  6. 6.0 6.1 6.2 6.3 Diodorus XI, 40
  7. "Legend says that Themistocles poisoned himself rather than follow the Great King's order to make war on Athens.
  8. "Thucydides, The Peloponnesian War". perseus.uchicago.edu. Archived from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 2018-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமிஸ்ட்டோக்ளீஸ்&oldid=3539590" இலிருந்து மீள்விக்கப்பட்டது