உள்ளடக்கத்துக்குச் செல்

மக்னீசியா ஆன் தி மீண்டர்

ஆள்கூறுகள்: 37°51′10″N 27°31′38″E / 37.85278°N 27.52722°E / 37.85278; 27.52722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்னீசியா ஆன் தி மீண்டர்
Μαγνησία ἡ πρὸς Μαιάνδρῳ
மேயண்டரில் மக்னீசியாவின் புரோபிலேயா
மக்னீசியா ஆன் தி மீண்டர் is located in துருக்கி
மக்னீசியா ஆன் தி மீண்டர்
Shown within Turkey#Aegean Sea
மக்னீசியா ஆன் தி மீண்டர் is located in Aegean Sea
மக்னீசியா ஆன் தி மீண்டர்
மக்னீசியா ஆன் தி மீண்டர் (Aegean Sea)
இருப்பிடம்டெக்கின், அய்டன் மாகாணம், துருக்கி
பகுதிஐயோனியன்
ஆயத்தொலைகள்37°51′10″N 27°31′38″E / 37.85278°N 27.52722°E / 37.85278; 27.52722
வகைகுடியிருப்பு
வரலாறு
கட்டுநர்காந்த மற்றும் கிரெட்டான் குடியேறிகள்
கலாச்சாரம்கிரேக்கம், உரோமன்
Associated withBathycles of Magnesia, தெமிஸ்ட்டோக்ளீஸ், Saint Lazarus of Magnesia
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1891–1893, 1984–தற்போது
அகழாய்வாளர்Carl Humann, Orhan Bingöl
நிலைசிதைந்த நிலை
உரிமையாளர்பொதுமக்கள்
பொது அனுமதிஉள்ளது

மக்னீசியா அல்லது மக்னீசியா ஆன் தி மீண்டர் (Magnesia அல்லது Magnesia on the Maeander பண்டைக் கிரேக்கம்Μαγνησία ἡ πρὸς Μαιάνδρῳ அல்லது Μαγνησία ἡ ἐπὶ Μαιάνδρῳ ; இலத்தீன்: Magnḗsĭa ad Mæándrum ) என்பது ஐயோனியாவில் இருந்த ஒரு பண்டைய கிரேக்க நகரமாகும். இது குறிப்பிடத்தக்க அளவில், வணிக ரீதியாகவும், கேந்திர முக்கியத்துவமானதாக பிரீனே, எபேசஸ், டிரால்ஸ் முக்கோணத்தில் ஒரு முக்கியமான இடத்தில் அமைந்தது. சில கிரெட்டான்களுடன் சேர்ந்து இப்பகுதியில் குடியேறிய தெசலியைச் சேர்ந்த மேக்னட்களின் நினைவாக, நகரத்திற்கு மெக்னீசியா என்ற பெயர் வந்தது. அருகிலுள்ள லிடியன் நகரமான மக்னீசியா அட் சிபிலத்தில் இருந்து வேறுபடுத்துவதற்காக இது பின்னர் "ஆன் தி மீண்டர்" என்று அழைக்கப்பட்டது. இது முன்னர் பண்டைய எழுத்தாளர்கள் பலரால் குறிப்பிடப்பட்ட லியூகோஃப்ரிஸ் நகரின் அடிப்படையாக இருந்தது.

மக்னீசியாவைச் சுற்றியுள்ள பகுதிகள் மிகவும் வளமானதாக இருந்தன. அப்பகுதியில் சிறந்த ஒயின், அத்திப்பழங்கள், வெள்ளரிகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யப்பட்டன. [1] இது எபேசஸிலிருந்து மேல்நோக்கி பாய்ந்த மேயண்டர் ஆற்றின் துணை ஆறான லெத்தகஸ் என்ற சிறிய ஆற்றின் கரையில், தோராக்ஸ் மலையின் சரிவில் கட்டப்பட்டது. இது மிலீட்டஸ் நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் இருந்தது. [2] [3] நகரத்தின் இடிபாடுகள் துருக்கியின் அய்டன் மாகாணத்தின் ஜெர்மென்சிக் மாவட்டத்தில் உள்ள நவீன கிராமமான டெக்கின் மேற்கே அமைந்துள்ளது.

மக்னீசியா ஐயோனியாவிற்குள் இருந்தது, ஆனால் இது கிரேக்கத்தில் இருந்து ஏயோலியன்கள் குடியேறிய பகுதியாதலால், ஐயோனியன் கூட்டணியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மக்னீஷியா ஒரு காலத்திற்கு லிடியன்களால் ஆளப்பட்டிருக்கலாம், [4] பின்னர் சில காலம் பாரசீகர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது மற்றும் சிம்மேரியன் தாக்குதல்களுக்கு உட்பட்டது. பிந்தைய ஆண்டுகளில், இரண்டாம் மித்ரிடாடிக் போரின் போது மக்னீசியா உரோமானியர்களை ஆதரித்தது. [5] [6]

குறிப்புகள்

[தொகு]
  1. Athen. i. p. 29, ii. p. 59, iii. p. 78.
  2. Strabo xiv. pp. 636, 647; Plin. v. 31.
  3. image showing the location of Magnesia பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம் (in Asia Minor).
  4. There are references to its capture by King Gyges, however this may refer to the original conquering of Magnesia ad Sipylum, long a Lydian city. See for instance .
  5. Thomas Allom; Robert Walsh; John Chippendall Montesquieu Bellew; Mark Wilson (2006). Thomas Allom's Constantinople and the Scenery of the Seven Churches of Asia Minor. Gorgias Press. pp. 210–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-59333-139-9.
  6. Handbook for Travellers in Turkey in Asia: Including Constantinople, the Bosphorus, Plain of Troy, Isles of Cyprus, Rhodes, &c..., with General Hints for Travellers in Turkey, Vocabularies &c. J. Murray. 1878. pp. 290–.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்னீசியா_ஆன்_தி_மீண்டர்&oldid=3404783" இலிருந்து மீள்விக்கப்பட்டது