கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்பு
கிரேக்க-பாரசீகப் போர்கள் பகுதி

கிரீஸ் மீதான பாரசீக படையெடுப்புகளின் போது முக்கிய இடங்களைக் காட்டும் வரைபடம்
நாள் கி.மு. 492 – 490
இடம் திரேசு, மக்கெடோனியா, சைக்லேட்ஸ், யூபோயா, அட்டிகா
  • திரேஸ் மற்றும் மக்கெடோனியாவில் பாரசீகம் வெற்றி
  • ஏதென்சை கைப்பற்றுவதில் பாரசீகம் தோல்வி
நிலப்பகுதி
மாற்றங்கள்
பாரசீகமானது மக்கெடோனியா மற்றும் சைக்ளாடிக் தீவுகளை கைப்பற்றி, திரேசை மீண்டும் அடிபணியச் செய்து, ஏஜியன் கடல் மீது மேலாதிக்கத்தை நிறுவுகிறது[1]
பிரிவினர்
ஏதென்ஸ்
எரீத்திரியா
பிற கிரேக்க நகர அரசுகள்
பாரசீகப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
மில்டியாடீசு
Callimachus 
Stesilaos 
Cynaegirus 
முதலாம் டேரியஸ்
மார்தோனியசு
தேடிஸ்
Artaphernes
பலம்
8,000-9,000 ஏதென்ஸ்
1,000 பிளாட்டீயா
மொத்தம்:
9,000-10,000
10,000 இறவாப்படை (கனரக காலாட்படை)
10,000 இலகு காலாட்படை
5,000 வில்லாளர்கள்
1,000-3,000 குதிரைப்படை
600 கப்பல்கள்
100,000 துடுப்பு வீரர்கள்
(போரிடாதவர்)
மொத்தம்:
26,000-28,000
இழப்புகள்
ஏதென்ஸ் படையெடுப்பு:
எரோடோட்டசு:
192 ஏதெனியர்கள் கொல்லப்பட்டனர்
11 பிளாட்டியர்கள் கொல்லப்பட்டனர்
எரீத்திரியா அடிமைப்படுத்தப்பட்டது
நக்சஸ் கொள்ளையடிக்கப்பட்டது
மற்ற நகர அரசுகளுக்கு உண்டான இழப்பு தெரியவில்லை
ஏதென்ஸ் படையெடுப்பு:
எரோடோட்டசு:
6,400 பாரசீகர்கள் கொல்லப்பட்டனர்
7 கப்பல்கள் மூழ்கின
மற்ற மதிப்பீடுகள்:
4,000-5,000 கொல்லப்பட்டனர்[2]
முழு போர்த் தொடரின் இழப்புகள் அறியப்படவில்லை

கிரேக்க-பாரசீகப் போர்களின் போது கிரேக்கத்தின் மீதான முதல் பாரசீகப் படையெடுப்பு கி.மு. 492 இல் தொடங்கியது. மேலும் கி.மு. 490 இல் மராத்தான் போரில் தீர்க்கமான ஏதெனியன் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்தது. இரண்டு தனித்துவமான போர்த் தொடர்களைக் கொண்ட இந்த படையெடுப்பு, ஏதென்ஸ் மற்றும் எரீத்திரியா நகர அரசுகளைத் தண்டிப்பதற்காக பாரசீக மன்னர் பேரரசர் டேரியசின் கட்டளையினால் நடத்தப்பட்டது. இந்த நகரங்கள் பாரசீக ஆட்சிக்கு எதிரான ஐயோனியன் கிளர்ச்சியின் போது ஐயோனியா நகர அரசுகளை ஆதரித்தன. இதனால் டேரியசின் கோபத்திற்கு ஆளாகின. டேரியஸ் தனது பேரரசை ஐரோப்பாவிற்குள் விரிவுபடுத்தவும், அதன் மேற்கு எல்லையைப் பாதுகாக்கவும் ஒரு வாய்ப்பாகவும் இதைக் கண்டார்.

கி.மு. 492 இல் முதல் போர்த் தொடரானது பாரசீகத் தளபதியான மார்தோனியசு தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அப்போர் தொடரில் திரேசு மீண்டும் அடிபணியச் செய்யயப்பட்டது. மேலும் மக்கெடேனியாவை பாரசீகத்துக்கு முழுக்க கீழ்ப்படிந்த இராச்சியப் பகுதியாக மாற்றும்படி கட்டாயம் ஏற்பட்டது. [3] இருப்பினும், அதோஸ் மலையின் கடற்கரையில் புயலில் மார்தோனியசின் கடற்படை சிதைந்ததால் அவர்களின் அடுத்த முன்னேற்றம் தடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு, டேரியஸ் தனக்கு அடிபணியுமாறு, கிரேக்கத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தன் தூதர்களை அனுப்பினார். அவர்கள் தாங்கள் அடிபணிந்ததின் அடையாளமாக தங்கள் மண்ணையும், தண்ணீரையும் கொடுத்தனுப்புமாறு கோரினார். ஏதென்சு, எசுபார்த்தாவைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து நகர அரசுகளிடமிருந்தும் அவர்கள் அதைப் பெற்றனர். ஏதென்சும், எசுபார்த்தாவும் பாரசீக தூதர்களைக் கொன்றன. இதனால் அடுத்த ஆண்டு தங்களை எதிர்ப்பவர்கள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க டேரியஸ் உத்தரவிட்டார்.

இரண்டாவது பாரசீக போர்த் தொடர் கி.மு. 490 இல், டாடிஸ் மற்றும் ஆர்டபெர்னெஸ் ஆகியோரின் தலைமையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போர்ப் பயணம் முதலில் நக்சஸ் தீவின் மீது மேற்கொள்ளப்பட்டு தீவைக் கைப்பற்றி எரித்தனர். பின்னர் அது மற்ற சைக்லேட்ஸ் தீவுகளுக்கு இடையில் பாய்ந்து, ஒவ்வொன்றையும் பாரசீகப் பேரரசுடன் இணைத்தது. பின்னர் படைகள் கிரேக்கத்தை வந்தடைந்தன. படைகள் எரீத்திரியாவில் தரையிறங்கி அதை முற்றுகையிட்டு, சிறிது நேரத்திற்குப் பிறகு, கைப்பற்றப்பட்டது. எரீத்திரியா அழிக்கப்பட்டது மேலும் அதன் குடிமக்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். இறுதியாக, செயல் படைப்பிரிவு அட்டிகாவுக்குச் சென்றது, ஏதென்சுக்குச் செல்லும் வழியில் மாரத்தானில் தரை இறங்கியது. அங்கு, எண்ணிக்கையில் சிறிய ஏதெனியன் இராணுவம் பாரசீகப் படைகளை எதிர்கொண்டது. இருப்பினும் மராத்தான் போரில் ஏதெனிய இராணுவம் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டியது.

இந்தத் தோல்வி போர்த் தொடரின் வெற்றி என்ற நோக்கத்தைத் தடுத்தது. மேலும் செயல் படைப்பிரிவு ஆசியாவிற்குத் திரும்பியது. ஆயினும்கூட, இந்த பயணம் அதன் பெரும்பாலான நோக்கங்களை நிறைவேற்றியது. நக்சோஸ் மற்றும் எரீத்திரியாவை தண்டித்தது. மேலும் ஏஜியன் பகுதியின் பெரும்பகுதியை பாரசீக ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் அதில் மக்கெடேனியாவை முழுமையாக உள்ளடக்கியதாக இருந்தது. இந்த போர்த் தொடரின் நிறைவடையாத பணியால், கிரேக்கத்தின் மீது மீண்டும் மிகப் பெரிய படையெடுப்புக்கு பாரசீகம் தயாராகியது. அடுத்த போரில் கிரேக்கத்தை உறுதியாகக் கீழ்ப்படுத்தவும், ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டாவைத் தண்டிக்கவும் டேரியஸை உறுதிகொள்ள வைத்தது. இருப்பினும், பேரரசிற்குள் ஏற்பட்ட உள் சண்டைகள் இந்த போர்ப் பயணத்தை தாமதப்படுத்தியது. மேலும் டேரியஸ் மூப்பினால் இறந்தார். கி.மு. 480 இல் தொடங்கி கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பிற்கு தலைமை தாங்கும் பொறுப்பு அவரது மகன் முதலாம் செகர்ஸ் வசம் வந்தது.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Briant, Pierre (2002). From Cyrus to Alexander: A History of the Persian Empire (in ஆங்கிலம்). Eisenbrauns. p. 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781575061207.
  2. Krentz, Peter, The Battle of Marathon (Yale Library of Military History), Yale Univ Press, (2010) p. 98
  3. Roisman & Worthington 2011, ப. 343.