கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பு
கிரேக்க பாரசீகப் போர்கள் பகுதி
நாள் கி.மு. 480–479
இடம் கிரேக்கம்
கிரேக்க வெற்றி
பிரிவினர்
ஏதென்ஸ்
எசுபார்த்தா
பிற கிரேக்க நகர அரசுகள்
அகாமனிசியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
தெமிஸ்ட்டோக்ளீஸ்
பாசேனியஸ்
முதலாம் லியோனிடாசு 
Leotychidas II
யூரிபியாடீஸ்
அரிசுடடைடீசு
முதலாம் செர்கஸ்
Tetramnestos
Artemisia I of Caria
மார்தோனியசு 
Masistius 
Hydarnes II (இறவாப்படை)
Artyphius (காந்தாரதேசம், தராதரர்கள்)
Azanes (சோக்தியானா)
Artabazus (பார்த்தியா குவாரசமியானாகள்)
பலம்
தரைப்படை:
10,000 எசுபார்த்தான்கள்
9,000 ஏதெனியர்
5,000 கொரிந்தியர்
2,000 தெஸ்பியர்கள்
1,000 போசியர்
30,000 Arcadia, Aegina, எரீத்திரியா, பிளாட்டீயா உட்பட பிற நகர அரசுகளிலில் இருந்து கிரேக்கர்கள்

கடற்படை:
400 கப்பல்கள்
6,000 கடற்படையினர்
68,000 துடுப்பு வீரர்கள்

மொத்தம்:
125,000 வீரர்
400 கப்பல்கள்
தரைப்படை: 80,000[1]–100,000 வீரர்கள் அல்லது அதைவிடக் குறைவானவர்கள் (நவீன மதிப்பீடு)

கடப்பற்டை: 600[1]–1,200 கப்பல்கள் (நவீன மதிப்பீடு)
மொத்தம்:
200,000[1]
300,000–500,000[2][3]
(நவீன மதிப்பீடு) 2,640,000+ (பண்டைய ஆதாரங்கள்)

கிரேக்கத்தின் மீதான இரண்டாவது பாரசீகப் படையெடுப்பு (கிமு 480-479) என்பது கிரேக்க பாரசீகப் போர்களின் போது நிகழ்ந்தது. ஏனெனில் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் முதலாம் செர்கஸ் பண்டைய கிரேக்கம் முழுவதையும் கைப்பற்ற முயன்றார். இதற்கு முன்னாள் கிரேக்கத்தின் மீதான முதல் படையெடுப்பின் (கிமு 492-490) இறுதியில் நடந்த மராத்தான் போரில், கிரேக்கத்தை அடிபணிய வைக்கும் டேரியசின் முயற்சிகளுக்கு பாரசீகம் முடிவுகட்டியது. இரண்டாவது பாரசீக படையெடுப்புக்கு முன்பு டேரியஸ் மரணமுற்றதால், அவரது மகன் செர்க்ஸஸ் இந்த இரண்டாவது படையெடுப்பிற்கு பல ஆண்டுகள் திட்டமிட்டு, ஒரு பெரிய இராணுவத்தையும் கடற்படையையும் திரட்டினார். ஏதெனியர்கள் மற்றும் எசுபார்த்தன்கள் கிரேக்க கூட்டமைப்பு படையை வழிநடத்தினர். கிரேக்க நகர அரசுகளில் பத்தில் ஒரு பங்கு நாடுகள் 'நேச நாடுகளின்' கூட்டமைப்பில் சேர்ந்தன. பெரும்பாலானவர்கள் நடுநிலையாக இருந்தனர் அல்லது செர்கசசுக்கு அடிபணிந்தனர்.

இப்படையெடுப்பு கிமு 480இன் வசந்த காலத்தில் தொடங்கியது. பாரசீகப் படைகள் எல்லெசுபாண்டைக் கடந்து திரேசு மற்றும் மக்கெடோனியா வழியாக தெசலிக்கு அணிவகுத்தன. எசுபார்த்தாவின் மன்னர் முதலாம் லியோனிடாசின் தலைமையிலான ஒரு சிறிய நேச நாட்டுப் படையால் பாரசீக முன்னேற்றம் தெர்மோபைலேயின் கணவாயில் தடுக்கப்பட்டது; அதே நேரத்தில், பாரசீக கடற்படை ஆர்ட்டெமிசியம் நீரிணையில் நேச நாட்டு கடற்படையால் தடுக்கப்பட்டது. புகழ்பெற்ற தேர்மோபைலே போரில், கிரேக்க நேச நாட்டுப் படைகள் பாரசீகப் படைகளை மூன்று நாட்களுக்குத் தடுத்து நிறுத்தியது, நேசநாட்டுப் படைகள் ஒரு மலைப் பாதையில் போரிட்டுவந்த நிலையில் உள்ளூர் நபரால் வழிகாட்டபட்டு வந்த கிரேக்கப்படைகள் நேச நாட்டுப் படைகளை பின்புறம் இருந்து வளைத்து நிர்மூலமாக்கின. ஆர்ட்டெமிசியம் போரில் இரண்டு நாட்கள் பாரசீகத் தாக்குதல்களை நேச நாட்டுக் கடற்படையும் தாங்கிக்கொண்டது. ஆனால் தெர்மோபிலேயில் ஏற்பட்ட பேரழிவு பற்றிய செய்தி அவர்களுக்கு எட்டியபோது, அவர்கள் சலாமிசுக்குப் பின்வாங்கினர்.

தெர்மோபிலே வெற்றிக்குப் பிறகு, யூபோயா, ஃபோசிஸ், போயோட்டியா, அட்டிகா ஆகியவை பாரசீக இராணுவத்தின் வசம் விழுந்தன. மேலும் அது ஏதென்சைக் கைப்பற்றி எரித்தது. இருப்பினும், ஒரு பெரிய நேச நாட்டு இராணுவம் கொரிந்தின் பூசந்தியை பலப்படுத்தி, பெலோபொன்ணசை பாரசீகம் வெற்றிகொள்வதிலிருந்து பாதுகாத்தது. இதனால் இரு தரப்புக்கும் கடற்படை வெற்றி தேவைப்பட்டது. அது போரின் போக்கை தீர்க்கமாக மாற்றும் என்ற நிலை இருந்தது. ஏதெனியன் கடற்படை தளபதி தெமிஸ்டோக்கிள்ஸ் பாரசீக கடற்படையை சலாமிசின் குறுகிய நீரிணைக்குள் இழுக்கும் சூழ்ச்சியில் வெற்றி பெற்றார். அங்கு வந்த ஏராளமான பாரசீக கப்பல்கள் ஒழுங்கு குளைந்து, நேச நாட்டு கடற்படையால் கடுமையாக தாக்கப்பட்டது. சலாமிஸ் போரில் நேச நாடுகளின் வெற்றியானது படையெடுப்பின் முடிவை விரைந்து தடுத்தது, மேலும் ஐரோப்பாவில் சிக்கிக் கொள்வதற்கு பயந்து, ஜெர்க்ஸஸ் ஆசியாவிற்கு பின்வாங்கினார். கிரேக்கர்களை வெற்றிகொள்ள அவரது தளபதி மார்தோனியசு தலைமையில் ஒரு படையை விட்டு வெளியேறினார்.

அடுத்த வசந்த காலத்தில், கிரேக்க நேச நாடுகள் மிகப்பெரிய ஹாப்லைட் இராணுவத்தைக் கூட்டி, மார்தோனியசை எதிர்கொள்ள இஸ்த்மஸிலிருந்து வடக்கே அணிவகுத்துச் சென்றன. பிளாட்டீயா போரில், கிரேக்க காலாட்படை மீண்டும் அதன் மேன்மையை நிரூபித்தது. பாரசீகர்கள் கடும் தோல்வியடைந்தனர். மேலும் போரில் மார்தோனியசைக் கொன்றனர். அதே நாளில், ஏஜியன் கடலின் குறுக்கே மைக்கேல் போரில் மீதமிருந்த பாரசீக கடற்படையும் கிரேக்க நேச நாட்டு கடற்படை அழித்தது. இந்த இரட்டை தோல்வியுடன், படையெடுப்பு முடிவுக்கு வந்தது. மேலும் ஏஜியனில் பாரசீக செல்வாக்கு கடுமையாக சிதைந்தது. கி.மு. 479 இல் போர் முடிவுக்கு வருவதற்கு முன்பு, கிரேக்கர்கள் மீண்டும் தாக்குதலுக்குச் சென்றனர். இறுதியில் ஐரோப்பா, ஏஜியன் தீவுகள், அயோனியா பகுதிகளிலிருந்து பாரசீகர்கள் வெளியேற்றினர்.

இதனையும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Shahbazi 2012, ப. 129.
  2. de Souza, p. 41
  3. Holland, p. 237