உருமாற்ற மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசு கிறித்து மலையில் உருவமாற்றம் பெறுதல் பற்றி புதிய ஏற்பாடு குறிப்பிடும் தெரியாத இடம் ஒன்று உள்ளது. மத்தேயு நற்செய்தி பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். பேதுரு இயேசுவைப் பார்த்து,' ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?' என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று,' என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது. அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு,' எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார். அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, 'மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்." (மத்தேயு 17:1–9)

அடையாளம்[தொகு]

சில இடங்கள் உருமாற்ற மலையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது:

தாபோர் மலை[தொகு]

தாபோர் மலை (575 மீட்டர் அல்லது 1,886 அடி உயரம்) பாரம்பரிய இடமகவுள்ளது. 3 ஆம் நூற்றாண்டில் தாபோர் உருமாற்ற மலையாக அடையாளம் காணப்பட்டது. இது புனித சிறில், ஜெரோம் ஆகியோரால் 4 ஆம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டது. உருவமாற்ற தேவாலயம் தாபோர் மலையின் உச்சியில் அமைந்துள்ளது.[1] இது 5 ஆம் நூற்றாண்டு மரியாவின் விண்ணேற்பு விடயத்திலும் குறிப்பிடப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. Meistermann, Barnabas (1912), "Transfiguration", The Catholic Encyclopedia, XV, New York: Robert Appleton Company, 2007-08-15 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருமாற்ற_மலை&oldid=2098351" இருந்து மீள்விக்கப்பட்டது