இமயமலை கரும்முகட்டலகு பட்டாணிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இமயமலை கரும்முகட்டலகு பட்டாணிக் குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. xanthogenys
இருசொற் பெயரீடு
Machlolophus xanthogenys
(Vigors, 1831)
வேறு பெயர்கள்

Parus xanthogenys

இமயமலை கரும்முகட்டலகு பட்டாணிக் குருவி ( Himalayan black-lored tit ), இது வெறுமனே கரும்முகட்டலகு பட்டாணிக் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. என்பது பாரிடே என்ற பட்டாணிக் குருவி குடும்பத்தில் உள்ள ஒரு குருவி வரிசைப் பறவையாகும். இது மஞ்சள் கன்னச் சிட்டுடுடன் நெருங்கிய உறவு கொண்ட பறவையாக இருக்கலாம், மேலும் இது மஞ்சள் நிற சிட்டுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம். உருவவியல் மற்றும் இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி சைட்டோக்ரோம் <i id="mwFg">பி</i> டி.என்.ஏ வரன்முறையிடல் பகுப்பாய்வு (கில் மற்றும் பலரால், 2005) ஆகியவற்றால் சுட்டிக்காட்டப்பட்டபடி, இந்த மூன்று பட்டாசிக் குருவிகளும் நிச்சயமாக ஒரு தனித்துவமான வம்சாவழியாகும்.

பறவையின் பொதுப் பெயரில் உள்ள முகட்டலகு (லோர்) என்ற சொல் கண்ணிற்கும் அலகின் அடிப்பாகத்திற்கும் இடைப்பட்ட பகுதியைக் குறிக்கிறது.[2]

இந்த இனம் நேபாளம் உட்பட இந்திய துணைக்கண்டத்தில் இமயமலையில் இனப்பெருக்கம் செய்து வசிப்பது ஆகும். நேபாளியில், இது "பாண்டு சிசில்கோட்" என்று அழைக்கப்படுகிறது.

இது ஒரு சுறுசுறுப்பான பறவையாகும். இது மரங்களின் மேலிருந்து பூச்சிகள் மற்றும் சிலந்திகளை வேட்டையாடும். சில நேரங்களில் பழங்களைம் உண்ணும்.

இது மரங்கொத்தி அல்லது குக்குறுவானின் மரப் பொந்துகளை கூடு கட்ட பயன்படுத்துகிறது. மேலும் இது சொந்தமாக பொந்தை தோண்டியோ அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளையோ வசிப்பிடமாக பயன்படுத்தும்.

இமயமலை கரும்முகட்டலகு பட்டாணிக் குருவி முன்பு பாரஸ் பேரினத்தில் உள்ள பல இனங்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் 2013 இல் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு பகுப்பாய்வின் முடிவில் புதிய பேரினத்தின் உறுப்பினர்களாக ஒரு தனித்துவமான உயிரிக்கிளை உருவாக்ககபட்டது என்பதைக் காட்டிய பின்னர், மக்லோலோபசு பேரினத்துக்கு மாற்றப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Machlolophus xanthogenys". IUCN Red List of Threatened Species 2017: e.T22711929A118692424. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22711929A118692424.en. https://www.iucnredlist.org/species/22711929/118692424. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Lore". Merriam-Webster. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
  3. Johansson, U.S.; Ekman, J.; Bowie, R.C.K.; Halvarsson, P.; Ohlson, J.I.; Price, T.D.; Ericson, P.G.P. (2013). "A complete multilocus species phylogeny of the tits and chickadees (Aves: Paridae)". Molecular Phylogenetics and Evolution 69 (3): 852–860. doi:10.1016/j.ympev.2013.06.019. பப்மெட்:23831453. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Machlolophus xanthogenys
என்பதில் ஊடகங்கள் உள்ளன.