குக்குறுவான்
குக்குறுவான் புதைப்படிவ காலம்:பிலிசுடோசின் முதல் அண்மைக்காலம் வரை | |
---|---|
Fire-tufted barbet | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Megalaimidae |
Genera | |
குக்குறுவான் (Megalaimidae) எனபது ஒரு பறவைக் குடும்பம் ஆகும். இதில் திபெத்தில் இருந்து இந்தோனேசியா வரை உள்ள இந்தோமலையான் நிலவியல் பகுதியில் காடுகளை வாழிடமாக கொண்ட 34 இனங்களை உள்ளடக்கிய இரண்டு பேரினங்களைக் கொண்டுள்ளது.
இதன் குடும்பப் பெயரானது Megalaima என்ற பேரினப் பெயரில் இருந்து வந்தது. அதன் பொருள் கிரேக்க மொழியில் 'பெரிய தொண்டை' என்பதாகும் (μέγας, 'பெரிய, பெரிய') மற்றும் லைமோஸ் (λαιμός, 'தொண்டை').[1]
விளக்கம்
[தொகு]சிட்டுக்குருவியை விட பெரிய அளவில், பச்சைநிறமுள்ளது. அலகு தடிமனானது. தலையிலும் மார்பிலும் சிவப்பு நிறத்தை பெற்றிருக்கும். பூனை மீசை போல சில முடிகள் இருக்கும். அத்தி, ஆல அரசமரங்களின் பழங்கள். மரங்களில் பொந்து அமைத்து வாழ்கின்றன. பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மூன்று அல்லது நான்கு முட்டைகள் வரை இடுகின்றன. தென்னிந்தியாவில் வேண்கண்ண குக்குறுவான். பழுப்படித்தலை குக்குறுவான், செந்நெற்றி குக்குறுவான், செம்மார்பு குக்குறுவான் என நான்கு வகையானவை காணப்படுகின்றன..
வகைப்பாடு
[தொகு]Subfamily Megalaiminae
- Psilopogon பேரினம்
- Psilopogon annamensis, இந்தோசீனா குக்குறுவான்
- Psilopogon armillaris, Flame-fronted barbet
- Psilopogon asiaticus, நீலக்கழுத்துப் பச்சைக் குருவி
- Psilopogon auricularis, கழுத்துப்பட்டை குக்குறுவான்
- Psilopogon australis, Yellow-eared barbet
- Psilopogon chersonesus, பசுநீலத் தொண்டை குக்குறுவான்
- Psilopogon chrysopogon, Golden-whiskered barbet
- Psilopogon corvinus, பழுப்பு தொண்டை குக்குறுவான்
- Psilopogon cyanotis, நீலக் காது குக்குறுவான்
- Psilopogon duvaucelii, Black-eared barbet
- Psilopogon eximius, போர்னிய குக்குறுவான்
- Psilopogon faber, சீன குக்குறுவான்
- Psilopogon faiostrictus, Green-eared barbet
- Psilopogon flavifrons, Yellow-fronted barbet
- Psilopogon franklinii, தங்க தொண்டை குக்குறுவான்
- Psilopogon haemacephalus, செம்மார்புக் குக்குறுவான்
- Psilopogon henricii, Yellow-crowned barbet
- Psilopogon incognitus, Moustached barbet
- Psilopogon javensis, கரும்பட்டை குக்குறுவான்
- Psilopogon lagrandieri, செங்குத குக்குறுவான்
- Psilopogon lineatus, வரிக் குக்குறுவான்
- Psilopogon malabaricus, மலபார் குக்குறுவான்
- Psilopogon monticola, மலை குக்குறுவான்
- Psilopogon mystacophanos, Red-throated barbet
- Psilopogon nuchalis, தைவான் குக்குறுவான்
- Psilopogon oorti, Black-browed barbet
- Psilopogon pulcherrimus, Golden-naped barbet
- Psilopogon pyrolophus, Fire-tufted barbet
- Psilopogon rafflesii, Red-crowned barbet
- Psilopogon rubricapillus, Crimson-fronted barbet
- Psilopogon virens, பெரிய குக்குறுவான்
- Psilopogon viridis, சின்னக் குக்குறுவான்
- Psilopogon zeylanicus, பச்சைக் குக்குறுவான்
Subfamily Caloramphinae
- Caloramphus பேரினம்
- Caloramphus fuliginosus, Brown barbet
- Caloramphus hayii, Sooty barbet
மேற்காேள்
[தொகு]- ↑ David, N. (2008). "Megalaiminae: the correct subfamily-group name for the Asian barbets". Bulletin of the British Ornithologists' Club 128 (1): 72. https://books.google.com/books?id=aVXxAAAAMAAJ.