இந்திய வெளியுறவுக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கான அடிப்படை ஜவகர்லால் நேரு அவர்களால் மிக வலுவாக இடப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கூறுகளாக இவர் குறிப்பிடுவது

  1. உலக அமைதி
  2. அணி சேராமை
  3. அடிமை மக்கள் விடுதலை பெறுதல்
  4. இனவேற்றுமை ஒழித்தல்
  5. தனி நபர் மற்றும் தேசிய விடுதலையைக் கட்டிக் காத்தல்
  6. உலகின் பெரும்பகுதி மக்களைப் பிடித்து வாட்டும் ஏழ்மை, நோய் ஆகியவற்றைப் போக்குதல்

குறிக்கோள்கள்

  • இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவக் கூடிய சர்வதேச சூழலை உருவாக்குவது
  • உலகமய சூழலுக்கு ஏற்ப இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது
  • வல்லரசு நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது
  • அண்டை நாடுகளுடனான, தெற்காசிய நாடுகளுடனான நல்லுறவையும், நட்பையும் மேம்படுத்துவது
  • இந்தியாவில் உள்நாட்டு சூழலை சர்வதேச இலக்குடன் ஒன்றிணைப்பது[1]

மேற்கோள்கள்

  1. "பரவாயில்லை, தெரிந்திருக்கிறதே..." dinamani. 08 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)