வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பு
Bengali:বঙ্গোপসাগরীয় বহুক্ষেত্রীয় প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগীতা উদ্যোগ (বিম্‌সটেক্)
Burmese:ဘင်္ဂလားပင်လယ်အော် စီးပွားရေးနှင့် နည်းပညာဆိုင်ရာ ဘက်စုံ ပူးပေါင်း ဆောင်ရွက်ရေး အဖွဲ့အစည်း (ဘင်းမ်စတက်)
Hindi:बहुक्षेत्रीय तकनीकी और आर्थिक सहयोग के लिए बंगाल की खाड़ी पहल (बिम्सटेक)
Nepali:बहुक्षेत्रीय प्राविधिक तथा आर्थिक सहयोगका लागि बङ्गालको खाडीको प्रयास (बिम्स्टेक)
Sinhalese:බහු සංස්කෘතික සහ තාක්ෂණික සහයෝගීතාව සඳහා බෙංගාල බොක්ක(බිම්ස්ටෙක්)
Thai:ความริเริ่มแห่งอ่าวเบงกอลสำหรับความร่วมมือหลากหลายสาขาทางวิชาการและเศรษฐกิจ (บิมสเทค)
தலைமைச் செயலகம்டாக்கா, வங்காள தேசம்[1]
அங்கத்துவம்
தலைவர்கள்
• Chairmanship
 இலங்கை (since September 2018)[2]
உருவாக்கம்6 சூன் 1997; 26 ஆண்டுகள் முன்னர் (1997-06-06)

வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation; BIMSTEC), தெற்கு ஆசியாவிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் அமைந்துள்ள ஏழு நாடுகள் அடங்கிய ஒரு பன்னாட்டு அமைப்பாகும். இந்நாடுகளின் கூட்டு மக்கள் தொகை 1.5 மில்லியன், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 டிரில்லியன் டாலராகும் (2018).[3] இந்நிறுவனத்தின் உறுப்பினா் நாடுகள் வங்காள தேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேப்பாளம், பூட்டான் ஆகும். இவைகள் அனைத்தும் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள நாடுகள் ஆகும்[4].

14 முன்னுரிமைத் துறைகள் இனங்காணப்பட்டு, இவைகளில் தொடா்ந்து நடவடிக்கை எடுக்க பல மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன[3][5]. இவைகளுள் வரியில்லா வா்த்தக உடன்பாடு செய்து கொள்ள பேச்சு வாா்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது (2018). இந்நாடுகளில் தலைமை வகிக்கும் பொறுப்பு அகர வரிசையில் சுற்றிவரும். இதன் நிரந்தர செயலகம் டாக்காவில் அமைந்துள்ளது.

பின்னணி[தொகு]

1997 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் நாள் பாங்காக் நகரில் BIST - EC (வங்காள தேசம், இந்தியா, இலங்கை, தாய்லாந்து பொருளாதாரக் கூட்டுறவு) என்ற துணை மண்டல அமைப்பு உருவாக்கப்பட்டது.[6][7] 1997 டிசம்பா் 22 அன்று மியன்மாா் நாடும் இதன் முழு உறுப்பினரானது. இதனால் இவ்வமைப்பு BIMST - EC எனப் பெயர் மாற்றமடைந்தது. முதலில் நேப்பாளம் ஒரு பாா்வையாளராக இருந்தது. பின்னா் நேப்பாளமும் பூட்டானும் முழு உறுப்பினா்கள் ஆயினா்.

2004 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் நாள் நடைபெற்ற உச்சி மாநாட்டில் இந்நிறுவனத்திற்கு BIMSTEC அல்லது Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Cooperation என்று பெயா் சூட்டப்பட்டது.[8]

நோக்கம்[தொகு]

வங்காள விரிகுடா கடற்கரையிலமைந்திருக்கும் நாடுகளிடையே தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் கூட்டுறவை மேம்படுத்த 14 நோக்கங்கள் வரையறுக்கப்பட்டன. வணிகம், முதலீடு, தொழில் நுட்பம், சுற்றுலா, மனித வள மேம்பாடு, வேளாண்மை, மீன்வளம், போக்குவரத்து மற்றும் தொலை தொடா்பு, நெசவு, தோல் உள்ளிட்டவை தெரிந்த துறைகளுள் அடங்கும்.[8] மேலும் கல்வி தொழிற்கல்வி, தொழில்நுட்பத் துறைகளில் ஆராய்ச்சி செய்வது பயிற்சியளிப்பதிலும் கூட்டுறவை வளா்ப்பதும் இதன் நோக்கமாகும். இந்த நாடுகளின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு சமூக, தொழில் நுட்ப மற்றும் அறிவியல் துறைகளில் ஒவ்வொரு நாடும் மற்றவற்றிற்கு உதவி செய்து எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்பது இதன் நோக்கம்.

நிரந்தர தலைமை செயலகம்[தொகு]

இதன் நிரந்தரத் தலைமைச் செயலகம் டாக்கா நகரில் 2014 ஆம் ஆண்டு துவங்கப் பட்டது. இதனை அமைக்கும் செலவில் 33 விழுக்காட்டை இந்தியா ஏற்றுக் கொண்டது.[8]

தலைமை[தொகு]

வங்காள தேசம் துவங்கி, அகரவரிசையில், இதன் தலைமையை ஒவ்வொரு நாடும் சுற்றில் ஏற்கும்.[9]

உறுப்பு நாடுகள்[தொகு]

நாட்டின் பெயர் தலைமைப்பதவி தலைமைச் செயல் அலுவலர் அரசின் தலைமை மக்கள் தொகை

(2021)[10][11]

உள்னாட்டு உற்பத்தி

(nominal)

உலக வங்கி தெற்காசியக்கூட்டமைப்பு
 வங்காளதேசம் பிரதம மந்திரி ஸேக் ஹசீனா,

வங்காள தேசத்தின் பிரதம மந்திரி

அப்துல் ஹமீது, வங்காள தேசத்தின் குடியரசுத் தலைவர் 169,356,251 $285.8 bn
 பூட்டான் பிரதம மந்திரி தஸ்ஸோ ஸெரிங்க் வான்சுக்,

பூடானின் பிரதம் மந்திரி

ஜிக்மி கேசர் நாம்ஜில் வாங்க்சுக், பூடனின் அரசர் 777,486 $2.2 bn
 இந்தியா பிரதம மந்திரி நரேந்திர மோடி,

இந்தியாவின் பிரதமர்

ராம் நாத் கோவிந்து,குடியரசுத் தலைவர் 1,407,563,842 $2308.0 bn
 மியான்மர் தலைவர் வின் மியிந்த், மியான்மரின் தலைவர் 53,798,084 $68.277 bn
 நேபாளம் பிரதம மந்திரி காட்கா பிரசாத் ஓலி,நேபளத்தின் பிரதமர் பித்யா தேவி பந்தாரி, நேபாளத்தின் தலைவர் 30,034,989 $74.020 bn
 இலங்கை குடியரசுத்தலைவர் ரனில் விக்கிரம சிங்கே,

இலங்கையின் பிரதமர்

மைத்ரிபால சிரிசேனா , இலங்கையின் குடியரசுத் தலைவர் 21,773,441 $80.4 bn
 தாய்லாந்து பிரதம மந்திரி பிராயுட் சான் ஓ சா, தாய்லாந்து பிரதமர் அரசர் வஜிரலாங்க்கார்ன் (பத்தாவது ராமர்),

தாய்லாந்து அரசர்

71,601,103 $409.724 bn

BIMSTEC முன்னுரிமைத்துறைகள்[தொகு]

14 துறைகள் முன்னுரிமைத்துரைகளாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது[3][5][12]

முன்னுரிமைத் துறைகள் தலைமை நாடு மையம் குறிப்பு
போக்குவரத்து, தொலைத் தொடர்பு இந்தியா
சுற்றுலா இந்தியா BIMSTEC சுற்றுலா தகவல் மையம், புது டெல்லி
பயங்கரவாதத்தை எதிர் கொள்ளல் மற்றும் நாடுகடந்த குற்றம் இந்தியா நாங்கு உட்குழுக்கள்: ஒற்றுத்தகவல்கள் பரிமாற்றம் - இலங்கை - (தலமை),
பயங்கரவாதத்திற்கு நிதி உதவி - தாய்லாந்து,
சட்டம் தொடர்பானவை - மைன்மார்,
சட்ட அமலாக்கம் - போதைப்பொருள் கடத்தல் - மியான்மர்
சுற்றுச் சூழல் பேரிடர் மேலாண்மை இந்தியா BIMSTEC கால நிலை மற்றும் தட்பவெட்ப நிலை மையம், நோய்டா
சக்தி மைன்மார் BIMSTEC சக்தி மையம் பரணிடப்பட்டது 2018-10-27 at the வந்தவழி இயந்திரம், பெங்களூரு BIMSTEC Grid Interconnection MoU signed in 2014.[13][14]
பொது சுகாதாரம் தாய்லாந்து BIMSTEC இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் இணையம்
வேளாண்மை மியான்மர்
வர்த்தகம் மற்றும் முதலீடு வங்காள தேசம்
தொழினுட்பம் இலங்கை
மீன்வளம் தாய்லாந்து
நாட்டு மக்களிடையே தொடர்பு தாய்லாந்து
வறிமை ஒழிப்பு நேப்பாளம்
காலனிலை மாற்றம் வங்காள தேசம்
கலாச்சார ஒத்திழைப்பு பூட்டான் 1200 ITEC இந்தியா வழங்கும் நிதியுதவி

BIMSTEC - வரியில்லா வா்த்தக மண்டல உடன்பாட்டின் வரம்பு[தொகு]

BIMSTEC வரியில்லா வா்த்தக மண்டலத்தின் உடன்பாடு உறுப்பினா் நாடுகளால் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுவிட்டது. உறுப்பு நாடுகளிடையே வா்த்தகத்தையும் முதலீட்டையும் தூண்டுவதும், வெளிநாடுகளிலிருந்து இவைகளை ஈா்ப்பதும் இவ்வமைப்பின் நோக்கங்களில் ஒன்றாகும். உறுப்பு நாடுகளிடையே பேச்சு வாா்த்தை நடத்தி இவா்களிடையே வா்த்தகம், முதலீடு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு வா்த்தகப் பேச்சு வாா்த்தைக் குழு (Trade Negotiation Committee) தாய்லாந்தை நிரந்தரத் தலைமை மையமாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

BIMSTEC - கரையோர கப்பல் போக்குவரத்து உடன்பாடு வரைவு[தொகு]

2017, 4 டிசம்பா் மாதம் புதுடெல்லியில் விவாதிக்கப்பட்டது. கடற்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைலுக்குள் கப்பல் போக்குவரத்து செய்வது இதில் அடங்கும். இதனால் நாடுகளிடையே குறைந்த செலவில் பொருட்களை எடுத்துச் செல்ல இயலும்.

ஆசிய மேம்பாட்டு வங்கியின் உதவி[தொகு]

ஆசியமேம்பாட்டு வங்கி இந்த அமைப்பின் போக்குவரத்து கட்டமைப்பின் வசதியைக் குறித்த ஆய்வினை மேற்கொள்ளௌதவி செய்தது. இந்த ஆய்வும் 2004 ஆம் ஆண்டு செய்து முடிக்கப்பட்டது

உச்சி மாநாடுகள்[தொகு]

மூன்றாவது உச்சி மாநாடு, நைபைடா மியான்மர்
எண். தேதி நடைபெற்ற நாடு நகரம்
1வது 31 சூலை 2004  தாய்லாந்து பாங்காக்
2வது 13 நவம்பர் 2008  இந்தியா புது டெல்லி
3வது 4 மார்ச் 2014  மியான்மர் நை பை டா [15]
4வது 30, 31 ஆகத்து 2018  நேபாளம் காத்மண்டு[16]
5வது டிபிடி  இலங்கை கொழும்பு[2][17]

திட்டங்கள்[தொகு]

  • சாலை மற்றும் ரயில்போக்குவரத்து கிழக்கை இணைக்கும் திட்டங்கள்
  • கடற்கரைக் கப்பல் போக்குவரத்து
  • மின்சார வினியோக கட்டமைப்பு
  • மண்டல அளவில் பேரிடர் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை ஏற்பாடு

Current leaders of BIMSTEC[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nepal unlikely to host fourth 'Bimstec' summit this year". Business Standard India. 3 June 2016. பார்க்கப்பட்ட நாள் 17 December 2016.
  2. 2.0 2.1 "BIMSTEC summit ends with Oli presenting Kathmandu declaration". பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
  3. 3.0 3.1 3.2 BIMSTEC: Building bridges between South Asia & Southeast Asia பரணிடப்பட்டது 2017-12-22 at the வந்தவழி இயந்திரம், IndiaWrites, 2014.
  4. http://www.thedailystar.net/op-ed/economics/regional-economic-integration-the-bay-bengal-660181
  5. 5.0 5.1 "Energy". bimstec.org (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-12-06. பார்க்கப்பட்ட நாள் 2017-12-06.
  6. Haidar, Suhasini (15 October 2016). "BIMSTEC a sunny prospect in BRICS summit at Goa" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/international/south-asia/bimstec-outreach-likely-to-pep-up-rocky-brics-summit-at-goa/article9224549.ece. பார்த்த நாள்: 16 October 2016. 
  7. "BRICS Summit 2016: BIMSTEC members have economic opportunities to share, said Narendra Modi – The Economic Times". The Economic Times. பார்க்கப்பட்ட நாள் 16 October 2016.
  8. 8.0 8.1 8.2 See for a detailed historical account of the founding and evolution of BIST-EC and BIMST-EC e.g. Michael, Arndt (2013). India's Foreign Policy and Regional Multilateralism (Palgrave Macmillan), pp. 145–163.
  9. "Third BIMSTEC Summit Declaration". பார்க்கப்பட்ட நாள் 12 March 2014.
  10. "World Population Prospects 2022". population.un.org. United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  11. "World Population Prospects 2022: Demographic indicators by region, subregion and country, annually for 1950-2100" (XSLX). population.un.org ("Total Population, as of 1 July (thousands)"). United Nations Department of Economic and Social Affairs, Population Division. பார்க்கப்பட்ட நாள் July 17, 2022.
  12. "BIMSTC sectors". Archived from the original on 2017-05-29. பார்க்கப்பட்ட நாள் 2018-10-09.
  13. "India Cabinet Approves Signing of BIMSTEC Power Grid Pact | News | South Asia Subregional Economic Cooperation". www.sasec.asia (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-06.
  14. "Nepal to join BIMSTEC Grid Interconnection" (in en). http://kathmandupost.ekantipur.com/news/2017-11-06/nepal-to-join-bimstec-grid-interconnection.html. 
  15. "BIMSTEC Summit". Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation. Archived from the original on 14 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 17 December 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. "Nepal proposes dates for Bimstec Summit". Business Standard India. 5 June 2018. பார்க்கப்பட்ட நாள் 1 July 2018.
  17. "4th BIMSTEC Summit: Kathmandu Declaration adopted by Member States". பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.