இந்திய-சீன உறவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தியா–சீனா உறவுகள்
Map indicating locations of India and China

இந்தியா
China
தூதரகம்
இந்தியத் தூதரகம்,
பெய்ஜிங்
சீனத் தூதரகம்,
புது தில்லி
தூதர்
இந்தியத் தூதர் விக்ரம் மிஸ்ரி[1]சீனத் தூதர்
சன் வெயிடோங்[2]
பொதுச் செயலர் மற்றும் ஜனாதிபதி சீ சின்பிங் மற்றும் பிரதம மந்திரி நரேந்திர மோதி 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவின் ஊகானின் கிழக்கு ஏரியின் அருகில்.

இந்திய-சீன உறவுகள் என்பது இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடைப்பட்ட உறவுகளைக் குறிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையில் நல்லுறவு நீடிக்கின்றபோதிலும், சில நேரங்களில் எல்லைப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இரு நாடுகளுக்கிடையிலான நவீன உறவானது 1950 ஆம் ஆண்டு தொடங்கியது. சீனக் குடியரசு (தைவான்) உடனான அதிகாரப்பூர்வ தொடர்புகளை முடித்துக் கொண்டு, சீன மக்கள் குடியரசை கண்டப் பகுதி சீனாவின் சட்டப்படியான அரசாங்கமாக கண்டுணர்ந்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அதிக மக்கள்தொகை கொண்ட முதல் இரண்டு நாடுகளாகவும் மற்றும் வேகமாக வளரும் உலகின் முக்கிய பொருளாதாரங்களாகவும் உள்ளன. இருநாடுகளின் தூதரக மற்றும் பொருளாதாரச் செல்வாக்கு அதிகரித்ததன் காரணமாக இவற்றின் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகள் பண்டைய காலங்களில் ஆரம்பித்ததாகும். பட்டுப்பாதையானது இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான முக்கியமான வணிகப் பாதையாக மட்டும் செயல்படவில்லை. இந்தியாவிலிருந்து கிழக்கு ஆசியாவுக்கு பௌத்த மதம் பரவுவதற்கும் அது உதவியாக இருந்ததென குறிப்பிடப்படுகிறது.[3] 19 ஆம் நூற்றாண்டின் போது பிரிட்டனின் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்துடன் சீனாவின் வளர்ந்து வந்த அபினி வர்த்தகமானது முதல் மற்றும் இரண்டாவது அபினிப் போர்களுக்கு இட்டுச்சென்றது.[4][5] இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியா, மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே சப்பானியப் பேரரசின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியதில் முக்கியப் பங்காற்றின.[6]

தற்போதைய இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவானது எல்லைப் பிணக்குகளால் வகைப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையில் 1962 ஆம் ஆண்டின் இந்திய சீனப் போர், 1967 ஆம் ஆண்டின் சோ லா மோதல் மற்றும் 1987 ஆம் ஆண்டின் இந்திய சீன எல்லைச் சண்டை ஆகிய 3 போர்கள் நடைபெற்றுள்ளன.[7] 2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு நாடுகளும் சர்ச்சைக்குரிய பூடான்-சீன எல்லையில் டோக்லாம் என்ற இடத்தில் சிறு சண்டையில் ஈடுபட்டன.[8] எனினும் 1980 களின் பிற்பகுதி முதல் இருநாடுகளும் வெற்றிகரமாக தூதரக மற்றும் பொருளாதார உறவுகளை மீள் உருவாக்கியுள்ளன. 2008 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உருவானது. இரண்டு நாடுகளும் அவற்றின் மூலோபாய மற்றும் இராணுவ உறவுகளையும் விரிவாக்கம் செய்தன.[9][10][11] வர்த்தகம் தவிர பரஸ்பர ஆர்வமுள்ள மற்ற சில பகுதிகளிலும் இருநாடுகளும் சமீபகாலமாக ஒத்துழைத்து வருகின்றன. இந்திய வெளியுறவு கொள்கை அறிஞரான ரேசவுல் கரிம் லஸ்கரின் கூற்றுப்படி, "தற்போது இருநாடுகளும் சர்வதேச வர்த்தகம், காலநிலை மாற்றம் மற்றும் நிதி சார்ந்த உலக நாடுகளின் வரிசையின் சீர்திருத்தம் மற்றும் பிற பொதுவான ஆர்வமுடைய பகுதிகளை ஊக்குவிக்க ஒத்துழைத்து வருகின்றன".[12]

பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகள் வளர்ந்து வரும் போதிலும் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடக்க நிறையத் தடைகளும் உள்ளன. இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வானது சீனாவுக்குச் சாதகமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டு சனவரி மாத மதிப்பீட்டின்படி, இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பைக் காட்டிலும், சீனா இந்தியாவுக்கு ஐஅ$  56.8 பில்லியன் (4,06,210.88 கோடி) அதிகமாக ஏற்றுமதி செய்கிறது.[13] இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினையானது தீர்க்கப்படாமல் உள்ளது. இந்தியப் பகுதிக்குள் சீன இராணுவம் ஊடுருவும் செய்திகளை அடிக்கடி இந்திய ஊடகங்களில் காணமுடியும்.[14] இருநாடுகளும் படிப்படியாக இராணுவக் கட்டமைப்புகளை எல்லைப்பகுதிகளின் அருகில் நிறுவியுள்ளன.[14][15] மேலும் பாகிஸ்தானுடனான சீனாவின் வலிமையான மூலோபாய இருதரப்பு உறவுகளை இந்தியா எச்சரிக்கையுடன் கவனித்து வருகிறது.[16] அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதிகளில் இந்திய இராணுவ மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பற்றி சீனா தனது கவலைகளையும் தெரிவித்துள்ளது.[17]

இருதரப்பு வர்த்தகம்[தொகு]

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடு சீனா தான்.

2014ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து சீனா ஐஅ$  16.4 பில்லியன் (1,17,286.24 கோடி) மதிப்புடைய பொருட்களை இறக்குமதி செய்தது. இது சீனாவின் மொத்த இறக்குமதியில் 0.8% ஆகும். இது இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 4.2% ஆகும். இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 10 முதன்மையான பொருட்கள்:[18][19]

 1. பருத்தி: ஐஅ$  3.2 பில்லியன் (22,885.12 கோடி)
 2. இரத்தினங்கள், விலையுயர்ந்த உலோகங்கள், நாணயங்கள்: ஐஅ$  2.5 பில்லியன் (17,879 கோடி)
 3. தாமிரம்: ஐஅ$  2.3 பில்லியன் (16,448.68 கோடி)
 4. தாதுக்கள், கசடு, சாம்பல்: ஐஅ$  1.3 பில்லியன் (9,297.08 கோடி)
 5. கரிம வேதிப்பொருட்கள்: ஐஅ$  1.1 பில்லியன் (7,866.76 கோடி)
 6. உப்பு, கந்தகம், கல், சிமெண்ட்: ஐஅ$958.7 மில்லியன் (6,856.24 கோடி)
 7. இயந்திரங்கள், விசையியக்கக் குழாய்கள்: ஐஅ$639.7 மில்லியன் (4,574.88 கோடி)
 8. நெகிழி: ஐஅ$499.7 மில்லியன் (3,573.65 கோடி)
 9. மின்னணு உபகரணம்: ஐஅ$440 மில்லியன் (3,146.7 கோடி)
 10. ரோம தோல்கள் தவிர மற்ற தோல்பொருட்கள்: ஐஅ$432.7 மில்லியன் (3,094.5 கோடி)

2014ஆம் ஆண்டு சீனாவிலிருந்து இந்தியாவுக்கு ஐஅ$  58.4 பில்லியன் (4,17,653.44 கோடி) மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இது சீனாவின் மொத்த ஏற்றுமதியில் 2.3% ஆகும். இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 12.6% ஆகும். சீனாவில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 10 முதன்மையான பொருட்கள்:[19][20]

 1. மின்னணு உபகரணம்: ஐஅ$  16 பில்லியன் (1,14,425.6 கோடி)
 2. இயந்திரங்கள், விசையியக்கக் குழாய்கள்: ஐஅ$  9.8 பில்லியன் (70,085.68 கோடி)
 3. கரிம வேதிப்பொருட்கள்: ஐஅ$  6.3 பில்லியன் (45,055.08 கோடி)
 4. உரங்கள்: ஐஅ$  2.7 பில்லியன் (19,309.32 கோடி)
 5. இரும்பு மற்றும் எஃகு: ஐஅ$  2.3 பில்லியன் (16,448.68 கோடி)
 6. நெகிழி: ஐஅ$  1.7 பில்லியன் (12,157.72 கோடி)
 7. இரும்பு அல்லது எஃகு பொருட்கள்: ஐஅ$  1.4 பில்லியன் (10,012.24 கோடி)
 8. இரத்தினங்கள், விலையுயர்ந்த உலோகங்கள், நாணயங்கள்: ஐஅ$  1.3 பில்லியன் (9,297.08 கோடி)
 9. கப்பல்கள், படகுகள்: ஐஅ$  1.3 பில்லியன் (9,297.08 கோடி)
 10. மருத்துவ, தொழில்நுட்ப உபகரணம்: ஐஅ$  1.2 பில்லியன் (8,581.92 கோடி)

உசாத்துணை[தொகு]

 1. "New Indian envoy Vikram Misri takes charge in Beijing" (in en). தி இந்து. 8 January 2019. https://www.thehindubusinessline.com/news/vikram-misri-takes-charge-as-indias-new-envoy-to-china/article25939008.ece. 
 2. "New Beijing envoy Weidong takes charge in New Delhi" (in en). Business Standard. 28 June 2019. https://www.business-standard.com/article/news-ani/sun-weidong-appointed-china-s-next-ambassador-to-india-119061200542_1.html. 
 3. Backus, Maria (September 2002). Ancient China. Lorenz Educational Press, 2002. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7877-0557-2. 
 4. Janin, Hunt (January 1999). The India-China opium trade in the nineteenth century. McFarland, 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7864-0715-6. 
 5. Tansen Sen (January 2003). Buddhism, Diplomacy, and Trade: The Realignment of Sino-Indian Relations, 600-1400. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8248-2593-5. https://books.google.com/books?id=blBTHAY_A4wC&printsec=frontcover&dq=774+787+srivijaya#v=onepage. 
 6. Williams, Barbara (2005). World War Two. Twenty-First Century Books, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8225-0138-1. https://archive.org/details/worldwariipacifi0000will. 
 7. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 8. Joshi, Manoj (2017), Doklam: To start at the very beginning, Observer Research Foundation, 20 December 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது, 7 February 2018 அன்று பார்க்கப்பட்டது
 9. Lancaster, John (12 April 2005). "India, China Hoping to 'Reshape the World Order' Together". The Washington Post. Archived from the original on 9 February 2011. https://web.archive.org/web/20110209160559/http://www.washingtonpost.com/wp-dyn/articles/A43053-2005Apr11.html. 
 10. "Why Indo-China ties will be more favourable than Sino-Pak". Theworldreporter.com (7 July 2010). மூல முகவரியிலிருந்து 19 October 2010 அன்று பரணிடப்பட்டது.
 11. India-China trade surpasses target பரணிடப்பட்டது 10 மே 2013 at the வந்தவழி இயந்திரம், The Hindu, 27 January 2011.
 12. Laskar, Rejaul (December 2013). "Promoting National Interest Through Diplomacy". Extraordinary and Plenipotentiary Diplomatist 1 (9): 60. 
 13. "New solutions needed’: China on widening trade deficit with India" (16 சனவரி 2020). மூல முகவரியிலிருந்து 2020-06-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 20 சூன் 2020.
 14. 14.0 14.1 Jeff M. Smith today's Wall Street Journal Asia (24 June 2009). "The China-India Border Brawl". The Wall Street Journal. மூல முகவரியிலிருந்து 10 July 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2016.
 15. AK Antony admits China incursion பரணிடப்பட்டது 30 செப்டம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம், DNA, 28 September 2011.
 16. "China-Pakistan military links upset India". Financial Times. பார்த்த நாள் 16 May 2016.
 17. China warns India on South China Sea exploration projects பரணிடப்பட்டது 24 செப்டம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம், The Hindu, 15 September 2011.
 18. "Top China Imports". மூல முகவரியிலிருந்து 16 May 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2016.
 19. 19.0 19.1 "Top China Exports". மூல முகவரியிலிருந்து 21 May 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2016.
 20. "Top India Imports". மூல முகவரியிலிருந்து 3 May 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 16 May 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய-சீன_உறவுகள்&oldid=3233637" இருந்து மீள்விக்கப்பட்டது