சிறில் ரமபோசா
சிறில் ரமபோசா Cyril Ramaphosa | |
---|---|
தென்னாப்பிரிக்காவின் பிரதி அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 26 மே 2014 | |
குடியரசுத் தலைவர் | யாக்கோபு சூமா |
முன்னையவர் | கலேமா மொட்லாந்தே |
தென்னாப்பிரிக்காவின் தேசிய திட்டமிடல் ஆணையத்தின் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 3 சூன் 2014 | |
குடியரசுத் தலைவர் | யாக்கோபு சூமா |
முன்னையவர் | டிரெவர் மனுவேல் |
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 18 டிசம்பர் 2012 | |
குடியரசுத் தலைவர் | யாக்கோபு சூமா |
முன்னையவர் | கலேமா மொட்லாந்தே |
ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் பொதுச் செயலர் | |
பதவியில் 1991–1997 | |
குடியரசுத் தலைவர் | நெல்சன் மண்டேலா |
முன்னையவர் | ஆல்பிரட் இன்சோ |
பின்னவர் | கலேமா மொட்லாந்தே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 நவம்பர் 1952 சொவேட்டோ, திரான்சுவால் மாகாணம் |
தேசியம் | தென்னாப்பிரிக்கர் |
அரசியல் கட்சி | ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் |
துணைவர் | த்செப்போ மோத்செப்பி |
பிள்ளைகள் | 4 |
முன்னாள் கல்லூரி | தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகம், தமெலின் |
வேலை | தொழிலதிபர், தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி |
மத்தமேலா சிறில் ரமபோசா (Matamela Cyril Ramaphosa, பிறப்பு: 17 நவம்பர் 1952) தென்னாப்பிரிக்க அரசியல்வாதியும், தொழிலதிபரும், செயல்திறனாளரும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். இவர் 2014 முதல் யாக்கோபு சூமாவின் அரசில் பிரதி அரசுத்தலைவராகப் பணியாற்றுகிறார்.[1] 2012 டிசம்பரில் இவர் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தென்னாப்பிரிக்காவின் இனவொதுக்கலை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும், பின்னர் ஏப்ரல் 1994 இல் நடைபெற்ற முதலாவது மக்களாட்சித் தேர்தலை வெற்றிகரமாக நடத்துவதிலும் இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சுரங்கத் தொழிலாளர்களின் தேசிய ஒன்றியத்தை தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரும், வலிமை மிக்க தொழிற்சங்கமாக உருவாக்குவதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
அண்மைக் காலங்களில் இவர் தமது சொந்த வணிக நன்மைகளை முன்னிறுத்திச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் கிளம்பின. - including a seat on the board of Lonmin. 2012 ஆகத்து 15 இல் மரிக்கானா சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆதரவளித்திருந்தார். வேலைநிறுத்தத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் 36 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ferreira, Emsie (25 May 2014). "Few surprises in Zuma's new Cabinet". SAPA. News24. http://www.news24.com/Elections/News/Few-surprises-in-Zumas-new-Cabinet-201405. பார்த்த நாள்: 25 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ The Guardian 24 October 2012