உள்ளடக்கத்துக்குச் செல்

இதயத்தசை வீக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதயத்தசை வீக்கம்
ஒத்தசொற்கள்இதய வீக்க நோய்கள்
ஒரு இதயத்தசை வீக்கம் நோய் உள்ளவரின் திசு மாதிரியின் நுண்ணோக்கி படிமம்
சிறப்புஇதயவியல்
அறிகுறிகள்சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, சோர்வு, உடற்பயிற்சி திறன் குறைவு அசாதாரண இதய துடிப்பு[1]
சிக்கல்கள்இதயம் செயலிழப்பு, இதய தசை நோய்கள் மற்றும் மாரடைப்பு[1]
கால அளவுசில மணி நேரம் முதல் பல மாதங்கள் வரை[1]
காரணங்கள்பொதுவாக வைரஸ் கிருமி தொற்று, பாக்டீரியா கிருமிகள், சில வகை மருந்து பொருட்கள், நச்சு பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள்[1][2]
நோயறிதல்இதய துடிப்பலைஅளவி, இரத்த தரோபோனின் அளவு, இதய காந்த அதிர்வு அலை வரைவு, இதய உயிரகச்செதுக்கு, இதய மீயொலி[1][2]
சிகிச்சைமருந்துகள், பதிக்கக்கூடிய இதய உதறல் ஒடுக்கி, இதய மாற்று அறுவை சிகிச்சை[1][2]
மருந்துஏசிஈ மட்டுப்படுத்திகள், பீட்டா தடுப்பான்கள், சிறுநீரிறக்கிகள், புரணித்திரலனையம், சிரைவழி எதிர்ப்புப்புரதங்கள்[1][2]
முன்கணிப்புபல்வேறு[3]
நிகழும் வீதம்2.5 மில்லியன் நபர்கள் (2015)[4]
இறப்புகள்3,54,000 நபர்கள் (2015)[5]

இதயத்தசை வீக்கம் என்பது நோய் கிருமிகளின் தோற்றுதலாலோ அல்லது உடற்செயலியல் மாற்றம் ஏற்படுவதலோ இதய தசையில் ஒவ்வாமை ஏற்பட்டு வீக்கமடைத்தல் ஆகும்.[1]நோய் அறிகுறிகள் சுவாசக்கோளாறு, நெஞ்சுவலி, உடற்பயிற்சி திறன் குறைதல், சோர்வு மற்றும், அசாதாரண இதய துடிப்பு ஆகும்.[1] நோய் தாக்கம் சில மணி நேரம் முதல் பல மாதங்கள் வரை இருக்கும்.[1] இதன் விளைவுகளாக இதயம் செயலிழப்பு, இதய தசை நோய்கள் மற்றும் மாரடைப்பு ஏற்படும்.[1]


இதயத்தசை வீக்கம் பொதுவாக வைரஸ் கிருமி தொற்றுதலால் ஏற்படுகிறது.[1] மற்ற நோய் காரணிகளாக பாக்டீரியா கிருமிகள், சில வகை மருந்து பொருட்கள், நச்சு பொருட்கள் மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள் அமைகிறது.[1][2] நோய் கண்டறியும் முறைகளாக இருப்பவை முறையே இதய துடிப்பலைஅளவி பயன்படுத்துவது, தரோபோனின் அளவு அதிகரித்துள்ளதா என காண்பது, இதய காந்த அதிர்வு அலை வரைவு பார்ப்பது, சில சமயங்களில் இதய உயிரகச்செதுக்கு ஆராய்வது ஆகும்.[1][2] இதய மீயொலி ஆய்வு இதய அடைப்பிதழ் குறைபாடுகளை கண்டறிய பெரிதும் உதவுகிறது.[2]

நோயின் தாக்கம் மற்றும் நோயின் காரணிகளை பொறுத்து சிகிச்சை முறை அமையும்.[1][2] பொதுவாக இதய அழுத்த மாற்று நொதியம் குறைப்பான், இரத்த அழுத்தம் குறைப்பான் மற்றும் நீர் சத்து குறைப்பான் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படும்.[1][2] மருந்துகள் மூலம் நோய் தாகம் குறையும் போது உடற்பயிற்சி செய்வது அவசியமில்லை.[1][2] உயிர் கிரியா ஊக்கி அல்லது பிறபொருளெதிரிகளை இரத்த நாளத்தில் உட்செலுத்துவதால் சில நோய்களை குணப்படுத்த முடியும். [1][2] மிகவும் மோசமான நோய் தாகத்திற்கு தானியங்கி இதய துடிப்பான் அல்லது இதய மாற்று அறுவை சிகிச்சை பரிசீலனை செய்யப்படுகிறது.[1][2]

2013 ஆம் ஆண்டில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் இந்த கடுமையான இதயத்தசை வீக்கம் நோயினால் பதிப்பிற்குள்ளானர்.[6] பொதுவாக அனைத்து வயதினரும் பாதிக்கப்பட்டாலும் இளம் வயது நபர்களே அதிகளவில் பாதிப்படைகின்றனர்.[7] பெண்களை விட ஆண்களிடியே இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.[1] [2] 2015 ஆம் ஆண்டில் இந்த நோயின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3,54,000 பேர் இது 1990 ஆம் ஆண்டு இறந்தவர்களின் எண்ணிக்கையான 2,94,000 என்ற அளவை விட அதிகமாகும்..[8][9] இந்த நோயறிகுறி 1800களின் நடு ஆண்டுகளிலிருந்து பதியப்பட்டுள்ளது.[10]

இதயத்தசை வீக்கம் 1600 ஆம் ஆண்டு காலத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது.[11] ஆனால் 1837 ஆம் ஆண்டில் இதயத்தசை வீக்கம் என்ற சொற்பதம் செர்மானிய மருத்துவர் ஜோசப் பிரிடரிக் சோபர்ன்ஹீம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.[12] இருந்தபோதும் இந்த சொற்பதம் இரத்த சுற்றோட்ட மண்டல நோய்களான உயர் இரத்த அழுத்தம் மற்றும் குருதி ஊட்டக்குறை இதய நோய்க்கு தவறாக பயன்படுத்தினர்.[13][14] இதயத்தசை வீக்கத்தால் பாதிப்பு பற்றிய சரியான தகவல்கள் இல்லை ஆயினும் 1 முதல் 9% நோயாளிகள் இதயத்தசை வீக்கத்தால் பாதிப்புக்கு ஆளானவர்களே. இளம் இளைஞர்கள் திடீரென இறப்பதற்கு 20% இந்த இதயத்தசை வீக்கம் காரணமாக இருக்கிறது.ஹச்.ஐ.வி நோய் தொற்று உள்ள நோயாளிகளில் 50% அல்லது அதற்கு மேல் இந்த இதயத்தசை வீக்க நோயால் பாதிக்கப்படுகின்றனர்.[15]

அறிகுறிகளும் உணர்குறிகளும்

[தொகு]

இதயத்தசை வீக்கத்துடன் தொடர்புடைய அறிகுறிகளும் உணர்குறிகளும் பலவேறாக உள்ளன. இவை நேரடியாக இதயத்தசை சுவரின் வீக்கத்துடனோ அல்லது இதயத்தசை வலுவிழந்து அதனால் ஏற்படும் வீக்கத்துடனோ தொடர்புள்ளவை. பின்வருபவை இவற்றில் சிலவாகும்:[16]

பொதுவாக இதயத்தசை வீக்கம் நச்சுயிரி தொற்றினால் ஏற்படுவதால் பல நோயாளிகள் நச்சுயிரி தொற்றுக்கான அறிகுறிகளான சுரம், தடிப்புகள், வயிற்றுப்போக்கு, மூட்டுவலி, எளிதாக சோர்வடைதல் போன்ற உணர்குறிகளைத் தெரிவிப்பர்.[18]

இதயத்தசை வீக்கத்துடன் இதயவுறை அழற்சியும் தொடர்புடையது. எனவே பல நோயாளிகளுக்கும் இரு நோய்களுக்கான உணர்குறிகளும் உடனிருக்கும்.[19][20]

மேற்கோள்கள்

[தொகு]
 1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 Cooper LT, Jr (9 April 2009). "Myocarditis.". The New England Journal of Medicine 360 (15): 1526–38. doi:10.1056/nejmra0800028. பப்மெட்:19357408. 
 2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 Kindermann, I; Barth, C; Mahfoud, F; Ukena, C; Lenski, M; Yilmaz, A; Klingel, K; Kandolf, R et al. (28 February 2012). "Update on myocarditis.". Journal of the American College of Cardiology 59 (9): 779–92. doi:10.1016/j.jacc.2011.09.074. பப்மெட்:22361396. 
 3. Stouffer, George; Runge, Marschall S.; Patterson, Cam (2010). Netter's Cardiology E-Book. Elsevier Health Sciences. p. 181. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781437736502.
 4. GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
 5. GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/S0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
 6. Global Burden of Disease Study 2013, Collaborators (22 August 2015). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 301 acute and chronic diseases and injuries in 188 countries, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet 386 (9995): 743–800. doi:10.1016/s0140-6736(15)60692-4. பப்மெட்:26063472. 
 7. Willis, Monte; Homeister, Jonathon W.; Stone, James R. (2013). Cellular and Molecular Pathobiology of Cardiovascular Disease. Academic Press. p. 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780124055254. Archived from the original on 2017-11-05.
 8. GBD 2013 Mortality and Causes of Death, Collaborators (17 December 2014). "Global, regional, and national age-sex specific all-cause and cause-specific mortality for 240 causes of death, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013". Lancet 385 (9963): 117–71. doi:10.1016/S0140-6736(14)61682-2. பப்மெட்:25530442. 
 9. GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281. 
 10. Cunha, Burke A. (2009). Infectious Diseases in Critical Care Medicine. CRC Press. p. 263. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420019605. Archived from the original on 2017-11-05.
 11. P. Schölmerich. (1983.) "Myocarditis — Cardiomyopathy Historic Survey and Definition", International Boehringer Mannheim Symposia, 1:5.
 12. Joseph Friedrich Sobernheim. (1837.) Praktische Diagnostik der inneren Krankheiten mit vorzueglicher Ruecksicht auf pathologische Anatomic. Hirschwald, Berlin, 117.
 13. Eckhardt G. J. Olsen. (1985.) "What is myocarditis?", Heart and Vessels, 1(1):S1-3.
 14. Jared W. Magnani; G. William Dec. (2006.) "Myocarditis" பரணிடப்பட்டது 2013-12-16 at the வந்தவழி இயந்திரம், Circulation, 113:876-890.
 15. Cooper LT (April 2009). "Myocarditis". N. Engl. J. Med. 360 (15): 1526–35. doi:10.1056/NEJMra0800028. பப்மெட்:19357408. 
 16. "Myocarditis". The New England Journal of Medicine 343 (19): 1388–98. November 2000. doi:10.1056/NEJM200011093431908. பப்மெட்:11070105. 
 17. "Sudden death in young adults: a 25-year review of autopsies in military recruits". Annals of Internal Medicine 141 (11): 829–34. December 2004. doi:10.7326/0003-4819-141-11-200412070-00005. பப்மெட்:15583223. 
 18. "Myocarditis". The Lecturio Medical Concept Library. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
 19. "Pericarditis". The Lecturio Medical Concept Library. 23 July 2020. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
 20. "Myocarditis". The Lecturio Medical Concept Library. பார்க்கப்பட்ட நாள் 11 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயத்தசை_வீக்கம்&oldid=3292131" இலிருந்து மீள்விக்கப்பட்டது